Friday, April 30, 2010

மருத்துவ குறிப்புகள்

கால் ஆணி
பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்கு பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும்.

இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.


நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதா?

சிறுநீர் கடுமையான மஞ்சள் நிறத்தில் வெளியேறுகிறதா?

வெளியேறும் சிறுநீர் புளித்த பழ வாசனையுடன் வருகிறதா?

அதிக நுரையுடன் சிறுநீர் வெளியேறுகிறதா?

சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் வலி ஏற்படுகிறதா?

இ*தி*ல் ஏதேனு*ம் ஒரு *சில அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் உடனே பார்க்க வேண்டியது *சிறு*நீரக*ம் தொட*ர்பான மருத்துவரைத்தான்.

டீ, காபியைக் குறைத்துக் கொண்டு பால் அதிகமாக குடிக்க வேண்டும்.

வெள்ளரி, திராட்சை, தர்பூசணி, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற நீர்சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகளை சாப்பிட வேண்டும்.

உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை உண்ணக் கூடாது.

இள*நீ*ர், மோ*ர் போ*ன்ற *நீ*ர் ஆகா*ர*ங்களை அரு*ந்தலா*ம்.

*நீ*ர் த*ன்மை அ*திக*ம் கொ*ண்ட த*ர்பூச*ணி, வெ*ள்ள*ரி*க்கா*ய்களை உ*ண்ணலா*ம்.


குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வது மிகவும் அவசியம். விடுமுறைக் காலங்களிலும் இதனை தளர்த்தாதீர்கள்.

பகல் நேரத்தில் தூங்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இது மிகவும் கெடுதல்.

பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் வரும். அதுவும் 20 நிமிடங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தூ*க்க*த்தை*க் கெடு**க்கு*ம் டி*வி, *வீ*ண் அர*ட்டைகளை*த் த*வி*ர்*த்து*விடு*ங்க*ள்.


ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடி*க்க வே*ண்டா*ம். இதனா*ல் *ஜீரண சுர*ப்*பிக*ள் சுர*ப்பத*ற்கு தாமத*ம் ஆகு*ம்.

ஆனால*் உடலை க*ட்டு*க்கோ*ப்பாக வை*க்க *விரு*ம்புபவ*ர்க*ள் சா*ப்*பிடுவத*ற்கு மு*ன்பு த*ண்*ணீ*ர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். *ஜீரண*ம் ஆவத*ற்கு தாமத*ம் ஆவதா*ல் *மீ*ண்டு*ம் ப*சி*க்கு*ம் நேரமு*ம் அ*திகமாகு*ம்.

த*ண்*ணீ*ர் அ*திகமாக*க் குடி*ப்பதா*ல் உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் அது சுத்தம் செய்கிறது.


வ*யிறு மு*ட்ட சா*ப்*பி*ட்ட *பி*ன் ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிடுவதை*த் தவிருங்கள்.

இவைக*ள் எடையை மேலும் கூட்டவே உதவுகிறது.

ப*சி**க்கு*ம் மு*ன்பே சா*ப்*பிடுவதையு*ம் த*வி*ர்**க்கவு*ம். சா*ப்*பி*ட்டு குறை*ந்தது 3 ம*ணி நேர*ம் க*ழி*த்தாவது அடு*த்த சா*ப்பா*ட்டை ப*ற்*றி யோ*சி*க்கவு*ம்.

எ*ப்போது*ம் நொறு*க்கு*த் *தீ*னி சா*ப்*பிடுவதை க*ட்டாய*ம் த*வி*ர்*க்கவு*ம்.

தலையை சாய்த்தால் மயக்கம் வருவதற்கு காரணம் காதில் ஏற்படும் பிரச்சினைதான்.

காதில் சீழ் பிடித்திருந்தாலோ, அழுக்கு அடைத்திருந்தாலோ இதுபோன்று ஏற்படும்.

மேலும் காது நரம்பு அல்லது காதில் உள்ள மூன்று சிற்றெலும்புகள் பாதிக்கப்பட்டிருப்பது போன்றவற்றால் தலையைச் சாய்க்கும்போது மயக்கம் வருவது போல இருக்கும்.

இதற்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகவும்.

பெரிய நெல்லிக்காயை துருவி காபி பொடி போன்று மென்மையாக்கி, அதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குப் பிரச்சினைகள் சீராகும்.

கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடுமையான பனிக் காலங்களில் உஷ்ணம் காரணமாக உதடுகளில் வெடிப்பு ஏற்படலாம். இதனைப் போக்க காலையில் எழுந்ததும், உதடுகளில் சிறிது தேங்காய் எண்ணெயை தடவி சிறிது நேரத்திற்குப் பின் குளித்தால், ஓரிரு நாளில் உதடு கோவைப்பழம் போலாகும்.

பொதுவாகவே மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே அதாவது 6 மணிக்கு முன்பாகவே குளித்தல் சிறந்தது. முடிந்தால் குளிர்ந்த நீரில் தலைக்கு குளியுங்கள். அது உங்களுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரும்.

வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சீப்பை பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இது கேசத்திற்கு கெடுதலை விளைவிக்கும் எ*ன்பது பலரு*க்கு*ம் தெ*ரியு*ம்.

ஒருவர் பயன்படுத்திய சீப்பையே நண்பர்கள் பலர் அடுத்தடுத்து பயன்படுத்துகிறார்கள். வீடுகளிலும் ஒரே சீப்பை குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்துவது வழக்காக உள்ளது. இதேபோல் சலூன்கள், பார்லர்களில் ஒரே சீப்பு தான் பயன்பாட்டில் உள்ளது.

ஆனால், இது *மிகவு*ம் தவறானது என்கின்றனர் மருத்துவர்கள். ஒரே சீப்பை பயன்படுத்துவதால் ஒருவரது தலையில் நோ*ய் அ*ல்லது பொடுகு போன்றவை மற்றவருக்கு வருவதற்கான வாய்ப்பு அ*திக*ம்.

இதேபோல், ஒவ்வாமை உள்ளிட்ட வேறு சில கெடுதல்களும் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன. மு*க்*கியமாக, குழந்தைகள் இதுபோ*ன்றவ*ற்றா*ல் எளித்தில் பாதிக்கப்படலாம்.

எனவே ஒரே சீப்பை பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன் சீப்பை தூய்மையாகவும் வைத்திருப்பது நல்லது.

பற்கள் பளபளப்பாக இருக்க எலுமிச்சை சாற்றுடன் உப்பு கலந்து பிரஷ் செய்யவும்.

சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதனால் சாப்பிட்டவுடன் வாயை ந*ன்கு கொ*ப்ப*ளி*ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும்.

காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், இரவு படுக்கும் முன் பல் தேய்ப்பதும் முக்கியம்.

பல் தேய்க்கும் போது பல்லில் மட்டும் கவனம் செலுத்தினால் பத்தாது. ஈறுகள், நாக்கு இவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். பல்லை விட இவை மிருதுவானவை என்பதால் பல்லில் காட்டும் வேகத்தை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது.

பல் தேய்த்த பிறகு மவுத்வாஷால் வாயை கொப்பளிப்பதால் நீண்ட நேரத்திற்கு துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

அஜீரணம், பசி, இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். அதனால் சாப்பாட்டில் கவனம் செலுத்தவும், ஒரே நேரத்தில் *நிறைய சாப்பிடாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய அளவில் சாப்பிடுவது சிறந்தது. சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீராவது குடிக்கவும். இது அஜீரணமும் பசியும் ஏற்படாமல் தடுக்கும்.

மிக மிகச் சாதாரண எளிய உடற்பயிற்சிகளை அன்றாடம் சுமார் அரை மணி நேரம் செய்வதால், டைப் 2 டயபடிஸ் (சர்க்கரை நோய்) நோயிலிருந்து தப்பலாம் என்று தெரிய வந்துள்ளது.

காலை நேரத்தில் வாக்கிங் செல்லுதல், வேகமாக நடத்தல் அல்லது ஓடுதல், கை-கால்களை மேலே தூக்கி எளிய உடற்பயிற்சிகளை செய்தல் போன்றவை இதில் அடங்கும்.

தற்போதைய நிலையில் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்களுக்கு அரை மணி நேர நடைபயிற்சி சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளத் தவறி விடுகிறார்கள். நேரமின்மை, ஊக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடைபயிற்சியை அவர்கள் மேற்கொள்வதில்லை.

அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் அதிக நேரம் மிகக் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஆண்களைப் பொருத்தவரை இளம் வயதில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை 15 நிமிட நேர உடற்பயிற்சியே போதுமானதாகும் என்றும் தெரிய வந்துள்ளது.

எனவே சர்க்கரை நோயின்றி வாழ வேண்டுமா? குறைந்தது 15 நிமிட நேரமாவது நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறையாவது உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்.

"சந்தைக்குப் போனால் சாமான் தூக்கிக் கொண்டு வரமுடியுதில்லை. முழங் கையிலை ஒரே வலி" என்றாள் வேதனை யுடன் ஒரு பெண்மணி.

"பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல் களை மடித்து, மணிக்கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி மோசமாகிறது'." என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத் தைச் சுட்டிக் காட்டினாள்.

உண்மைதான் ஆனால் பாரம் தூக்குவதால் மட்டும் இவ்வலி வருவதில்லை. கைவிரல் களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும்போது (உதாரணமாக கைலாகு கொடுப்பது, கதவின் கைபிடியைப் பிடித்து இழுப்பது) வலி ஏற்படுவ துண்டு. கைவலியைத் தவிர இவ்விடத்தில் வீக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத் தன்மையோ சேர்ந்திருப்பதில்லை என்பதை நோயுள்ளவர்கள் பலரும் அவதானித்திருப்பார்கள்.

முழங்கையின் வெளிப் புறத்தில் எற்படும் வலி பெரும்பாலும் கடுமையாக இருக்கும். ஆரம்பத்தில் பொறுக்கக் கூடியதாக இருக்கும் இவ்வலி காலகதி யில் (ஒரு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை)கடுமையாக மாறும். நோய் கடுமையான நிலையில் முழங்கையின் சிறு அசைவு கூட வலியைக் கடுமையாக்கும்.

முழங்கையின் வெளிப்புற மொளி அருகே ஏற்படும் இந்த வலியை ஆங்கி லத்தில் tennis elbow என்பார்கள். காரணம் டெனிஸ் விளையாடுபவர்களிடம் அதிகம் ஏற்படுவதால்தான். ஆனால் டெனிஸ் விளையாடுவது மட்டுமே இந் நோய் வருவதற்குக் காரணமல்ல.

முன்னங்கைகளை அதிகம் உபயோகிக்க வேண்டிய தொழில் செய்பவர்களி லும் இது ஏற்படும். வர்ணம் பூசுவது, இறைச்சி வெட்டுவது, சுட்டியலால் தொடர்ந்து அடிப்பது, நெசவு போன்றவை சில உதாரணங்களாகும்.

கொல்வ் விளையாடுவது போன்று முன்கையை ஒரே விதமாக உபயோகித்து தொடர்ந்து விளையாடுவதாலும், வேலை செய்வதாலும் முழங்கையில் இத்த கைய வலி ஏற்படுவதுண்டு.

உங்கள் முழங்கையின் வெளிப்புறம் திட்டாக தெரியும் மொளியில் இருக்கும் தசைநாண்(Tendon) உட்காயம் ஏற்படு வதாலேயே இந் நோய் ஏற்படுகிறது. இந்த தசைநாண்தான் உங்கள் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டு ஆகி யவை சரியான முறையில் இயங்கு வதற்கு காரணமாயுள்ளன.

வலியைக் கவனத்தில் எடுக்காது அத்தகைய வேலைகளைச் தொடர்ந்தும் செய்தால் சவ்வு அறுந்துவிடவும் கூடும் என்பது எப்பொழுதாவது ஏற்படக் கூடிய ஆபத்தாகும்.

அவரது மணிக்கட்டு, முழங்கை, தோள் மூட்டு யாவற்றையும் நன்கு பரிசோ தித்துப் பார்த்த போது அவருக்கு வேறு நோய்கள் அதாவது மூட்டு வாதமோ அல்லது நரப்புகளில் பாதிப்புக்களோ இல்லை என்பது தெளிவாகியது. இது டெனிஸ் எல்போ என்பதுதான் என்பது நிச்சயமாயிற்று. 'படம் எடுக்க வேண் டுமா' என்று அவள் கேட்டாள். எக்ஸ் ரே எடுக்க வேண்டியது அவசியமில்லை என்று விளக்கினேன்.
பலருக்கு இந்நோய் எந்தவித சிகிச்சையும் இல்லாது தானாகவே காலகதியில் குணமாகி விடும். ஆரம்ப நிலையில் அவ்விடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைத் தணிக்க உதவும். வலிநிவாரணி மாத்திரைகள், மணிக்கட்டிற்கான பட்டி (Elbow Brace) ஆகியவையும் உதவக் கூடும்.

உங்கள் விரல்களுக்கும் மணிக்கட்டுக்குமான சில எளிமையான பயிற்சிகள் உங்கள் வலியைத் தணிக்க நிச்சயம் உதவும்.

மிகவும் சுலபமான ஒரு பயிற்சியானது ரப்பர் பான்ட் உதவியுடன் உங்கள் விரல்களை விரிக்கும் பயிற்சியாகும். ஒரு ரப்பர் பான்ட்டை உங்கள் நோயுற்ற கையின் விரல்கழளச் சுற்றி அணியுங்கள். இப்பொழுது உங்கள் கை கோலியது போல தோற்றமளிக்கிறது அல்லவா? இனி விரல்களை அகட்டி மெதுவாகக் கையை விரியுங்கள்.

இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். சில நிமிட ஓய்வுக்குப் பின் மீண்டும் பத்துத் தடவைகள் செய்யுங்கள். மூன்றாவது தடவையும் அவ்வாறு செய்யுங்கள். இவ்வாறு காலை மாலை இரு தடவைகள் செய்ய வேண்டும்.

இரண்டாவதாக விரல்களை இறுகப் பிடிக்கும் பயிற்சி செய்யுங்கள். சிறிய உருளை அல்லது பந்து ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிவதுபோல இறுகப் பிடியுங்கள். தொடர்ந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள். காலை மாலையாக தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.

உள்ளங்கை கீழே பார்க்குமாறு உங்கள் ஒரு கையை முன்புறமாக நீட்டிப் பிடியுங்கள். இப்பொழுது மறு உள்ளங்கையால் அதைத் தாங்குவது போலப் பிடியுங்கள். இனி மேலுள்ள கையை மணிக்கட்டருகில் கீழ்ப்புறமாக அழுத்தி மடியுங்கள். 15 முதல் 30 செகண்டுகளுக்கு அவ்வாறே பி;டித்த பின் தளர்த்துங்கள். மூன்று தடவை திரும்பச் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

உங்களது உள்ளங்கை மேலே பார்க்குமாறு ஒரு முன்னங்கையை மேசை மீது வையுங்கள். பயிற்சி பாண்ட் ஒன்றை கைகளால் பற்றிக் கொண்டு மறுகையால் பாண்டடைப் பற்றிய கையின் மணிக்கட்டுப் பகுதியை உங்கள் உடலை நோக்கி இழுங்கள். பின் கையை மெதுவாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

ஒரு காலுக்கு முன் மற்றக் காலை வையுங்கள். பயிற்சி பாண்ட்டின் ஒரு முனையை பின்னுள்ள காலுக்குக் கீழே வையுங்கள். மறு முனையைக் உள்ளங்கை மேலே பார்க்குமாறு கையால் பற்றி இழுங்கள். படத்தில் உள்ளபடி உள்ளங்கை தோள்மூட்டு வரை உயருமாறு இழுங்கள். மெதுவாக கையைப் பழைய நிலைக்கு செல்லவிடுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் பத்து தடவை வீதம் தினமும் மூன்று தடவைகள் செய்யுங்கள்.


உங்கள் முன்னங்கையை மேசையில்
உள்ளகை கீழே பாரக்குமாறு வைத்தபடி ஒரு சுட்டியலைப் பிடியுங்கள். இப்பொழுது மேற்புறமாகவும் கீழ்ப்புறமாகவும் மாறிமாறி மெதுவாகச் சுற்றுங்கள். வலி தோன்றும் வரை மட்டும் சுற்றுங்கள். வலி தோன்றினால் நிறுத்துங்கள். ஓவ்வொரு தடவையும் பத்துத் தரங்களாக மூன்று தடவைகள் செய்யுங்கள். சுட்டியலின் பாரம் அதிகமாகிச் சுற்றுவது கடினமாக இருந்தால் சுட்டியலின் தலைப்பக்கமாக கையை நெருக்கிப் பிடியுங்கள்.

பயிற்சிகளைச் செய்து, வலிநிவாரணி மருந்துகளையும் உபயோகித்தபோதும் வலி தணியவில்லை எனில் உங்கள் வைத்தியர் முழங்கையின் வலியுள்ள பகுதியில் ஊசி மருந்தை ஏற்றக்கூடும். ஊசி மருந்தானது வலியுள்ள பகுதியில் அழற்சியைத் தணித்து நோயைக் குணமாக்கும்.

ஊசி போட்டு வலி தணிந்த பின்னர் குணமாகிவிட்டது எனக் கை விட்டுவிடாதீர்கள்.

தசைகளை நீட்டி விரிக்கும் பயிற்சிகளும், முழங்கையின் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்கும் பயிற்சிகளும், தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

படத்தில் முழுங்கையை நீட்டியபடி மணிக்கட்டை மடிக்கும் பயிற்சி காட்ப்பட்டுள்ளது.

90 முதல் 95 சதவிகிதமானவர்களுக்கு முன் கூறிய சிகிச்சைகளுடன் நோய் குணமாகிவிடும். மேற் கூறிய வழிகளைப் குறைந்தது 6 மாதங்கள் கடைப்பிடித்தும் வலி தணியவில்லையெனில் மிகுதி 5 சதவிகிதமானவர்களுக்கு சத்திரசிகிச்சை தேவைப்படலாம். இதன் போது நோயுற்ற தசைநார்த் துண்டை அகற்றி நல்லநிலையிலுள்ளதை எலும்பில் பதிய வைப்பார்கள்.


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

தீண்டத்தகாத உணவா சோறு?

ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். "சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்" என்றேன். "அப்ப சோறை நிப்பாட்டட்டோ" என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு "சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்" என அப்பாவியாகக் கேட்டேன். "வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்" என்றாள்.

உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல "சரி நான் சோத்தை கைவிடுகிறன்" என்றார். "சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே!" என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டொக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.

காச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே "இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்" என்றாள்.

ஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது? அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள். இவை தவறான
கருத்துத்தான்.

ஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல் (நாட்டு) அரிசியிலும் இவை அதிக செறிவில்
உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.

இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு, அப்பம், தோசை
போன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch). எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.

இரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப் பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் உண்டவை மெதுவாக சமிபாடடையும், விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.

காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல் பாற் கஞ்சியாகக் குடிக்கலாம்.
அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.

எனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும்
அளவோடு உண்ணுங்கள்.


பல் போனால் சொல் போகும்


'பல் போனால் சொல் போகும்' என்ற பழமொழியே நமது பல்லின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அப்படிப்-பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாகப் பராமரிக்கத்தான் வேண்டும். இதோ, பல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற வழி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணர், டாக்டர் டி.பி.மகேந்திரன்.

''குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை 'நர்ஸிங் பாட்டில் கேரீஸ்' (nursing bottle caries) என்று அழைக்கிறோம்.

குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.

பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறா£க இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.

சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.

பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.''

செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா?


டாக்டர் ரவி ராமலிங்கம்
காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர், சென்னை

''செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து, செல்போனால் சில பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.

காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம்.. ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், செல்போன் உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத் தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால், தொடர்ச்சியாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.

தவிர, செல்போனில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனில் விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில் தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம்.

செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ஹேண்ட்ஸ் ஃப்ரீ உபயோகித்துப் பேசுவதன் மூலம் பாதிப்பை ஓரளவு தவிர்க்கலாம்.''


பல் சொத்தையால் ஏற்படும் சைனஸ் தொந்தரவுகள்!
பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்துவைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன.

பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் மேலும் வளரும்பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ்தேங்க ஆரம்பித்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடம். பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:

பல் சொத்தை மட்டுமல்ல... ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும்போது உஷாராக இல்லையென்றாலும் கஷ்டம்தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக் கூடாது.

விபத்துக்களின் போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப் பிருக்கிறது.

சைனஸ் பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று... திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று... நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்திவிடலாம்.

மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை வரை போக வேண்டிய திருக்கும். ஆனால் சைனஸ் பிரச்சினையைப் பொருட் படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் `கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக் களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை.

டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால், இதெல்லாம் சாதாரண காரிய மில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத்துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடி கிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை.

முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது. மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச்வாயிலாக நீரை பீச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். உள்ளே தேங்கி கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்து விடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும், இதில் ஒர பெரிய சிக்கல் இருந்தது.

அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்தச் சிக்கலுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது. மூடப்பட்ட கதவைத் திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறி விடும் அல்லவா... அந்தக் கதவை சரியான அளவில் திறப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை.

சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால், எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது.... எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது... அவற்றில் இருப்பதுசளிதானா அல்லது சீழா... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது.

இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது. சைனஸ் அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா.. அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு இருக்குமா? அதற்கெல்லாம் அவசியம் இல்லை.

அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது. அப்படியில்லை என்றால் வாய்வழியாகக்கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாகக் கிழிக்க வேண்டியிருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாகத் தெரியாதஅளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும். கவலையே வேண்டாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாக

வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.

இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.


இறந்தாரை உயிர்ப்பிற்கும் மருத்துவ முயற்சி!
ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென நெஞ்சைப் பொத்திக் கொண்டு துடிக்கிறார். அவருக்கு ஏற்கனவே இருதய வருத்தம் இருப்பது உங்களுக்குத் தெரியும். இது மாரடைப்பு என்பது புரிகிறது. அம்பியூலன்சைக் கூப்பிடுவதற்கு முன்னரே சரிந்து விடுகிறார். முதல் உதவிச் சிகிச்சையில் பரிச்சியம் உள்ள நீங்கள் அவரின் நாடித் துடிப்பைப் பார்க்கிறீர்கள், அது நின்று விட்டது. மூக்கில் கை வைத்துப் பார்க்கிறீர்கள், சுவாசமும் நின்று விட்டது. அவசர அவசரமாக இருதய மசாஜ் செய்து செயற்கை சுவாசமும் கொடுக்கிறீர்கள். பிரயோசனமில்லை. வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது ஏற்கனவே மரணித்து விட்டதாக கூறுகிறார்கள்.

அநியாயச் சாவுதான் என்பதில் சந்தேகமில்லை.முதல் உதவி அறிவுள்ள ஒருவர் அருகிலிருந்து, வேண்டிய உதவியை உடனடியாகச் செய்தும் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது கவலைக்குரியதுதான்.

உண்மையில் அவர் எப்பொழுது இறந்தார்?

அவரது நிலையை யோசித்துப் பாருங்கள்?

என்ன நடந்தது? அவரது உறுப்புகள் யாவும் இருந்தது இருந்தபடியே எத்தகைய சேதமுமின்றி அப்படியே இருக்கின்றன. குருதி வெளியேறவில்லை. ஆனால் இருதயம் துடிக்கவில்லை, சுவாசப் பையும் இயங்கவில்லை. எனவே மூளையானது உள்ள பிராண வாயுவைச் சேமிப்பதற்றாக இயக்கத்தை நிறுத்தி விட்டது. அவ்வளவுதான். ஆயினும் மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக கூறி விட்டார்கள். உண்மையில் அவன் இறந்து விட்டானா?

இறப்பு என்பது என்ன? கலங்களின் (Cell) இறப்புத்தான், ஒருவனின் இறப்பு என்று வழமையாகக் கூறப்படுகிறது. அதாவது அந்த மனிதனின் இருதயத் துடிப்பு நின்றாலும், சுவாசம் நின்றாலும் மனிதன் உடனடியாக இறப்பதில்லை. இவை இரண்டும் செயற்படுவது நின்று 4-5 நிமிடங்களுக்குப் பின்னரே அவனது கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. உங்களது நண்பர் இறந்ததற்குக் காரணம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் அவரது கலங்களுக்கு பிராண வாயு கிடைக்காததால் அவரது மூளையினது கலங்கள் மீளச் செயற்பட முடியாதவாறு பாதிக்கப் பட்டதேயாகும். அதாவது அக் குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அவரது இருதயத்தையும், சுவாசப் பையையும் இயங்க வைக்க முடியாததேயாகும்.

இறப்புப் பற்றிய இக் கருத்துத்தான் இது வரை மருத்துவ உலகினால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருந்தது. ஆனால் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு கண்டுபிடிப்புக் காரணமாக மேற் கூறிய கருத்து கேள்விக்கு உரியதாகியுள்ளது. Univesity of Pennsylvanவைச் சார்ந்த Dr. Lance Becker ஒரு பிரேதப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆச்சரியமூட்டும் உண்மை வெளிப்பட்டது. மரணித்து ஒரு
மணித்தியாலயத்திற்கு மேற் சென்று விட்ட போதும் அந்த மனிதனது (அல்லது சடலமா?) கலங்கள் இறந்து விட்டதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை. வியப்படைந்த அவர் தனது பரிசோதனையைத் தொடர்நத போது மேலும் சில மணிநேரத்திற்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருப்பது தெரியவந்தது.

இறந்து சில மணி நேரங்களுக்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருந்த போதும் வைத்தியர்களால் ஏன் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும். 5 நிமிடங்கள் பிராண வாயு இல்லாதிருந்தால், அக் கலங்களுக்கு பிற்பாடு பிராண வாயு கிடைத்த போதும் அவை இறப்பதைத் தடுக்க முடிவதில்லை. அது தான் உண்மை. ஆனால் ஏன்?

இதற்கு விடை கிடைத்தால் உங்கள் கேள்விக்கும் விடை கிடைத்து விடும். இறந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப் போகும் முயற்சி ஆராய்ச்சியாக ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

ஆராய்ச்சியானது கலங்களின் உள்ளே உள்ள சிறிய துணிக்கைகளுக்கு இட்டுச் செல்கின்றன. மிட்டோகொன்ரியா (Mitochondria) எனும் அவைதான் கலங்களுக்குத் தேவையான சக்தியை, ஒட்சி ஏற்றம் மூலம் உற்பத்தி செய்கின்றன. இது இன்னுமொரு வித்தியாசமான கடமையையும் செய்கிறது. வழமைக்கு மாறான கலங்களை (உதா புற்றுநோய்க் கலங்கள்) நெறிப்படுத்தப்பட்ட முறையில் மரணிக்கச் செய்கின்றன. இது புற்றுநோய்க்கு எதிரான உடலின் பாதுகாப்பு திட்டம் போலச் செயற்படுகிறது. எனவே 5 நிமிடங்களுக்குப் பின்னர் திடீரென ஒட்சிசன் கொடுக்கும் போது அக் கலங்களுக்கும் புற்றுநோய்க் கலங்களுக்கும் இடையே வேறுபாட்டை உணர முடியாமல் மரணிக்கச் செய்கின்றனவோ என எண்ணுகிறார்கள்.

ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவில் நாம் செய்வது என்ன? இருதயம் நின்று விட்ட ஒருவரை 10-15 நிமிடங்களுக்கு பின்னர் கொண்டு வந்து சேர்க்க முடிகிறது. உடனே இருதயத்தைத் துடிக்க வைக்க மருந்துகள் கொடுப்பதுடன் பிராண வாயுவையும் பம்ப் செய்கிறோம். இரத்த ஓட்டம் இல்லாததால் பட்டினி கிடந்த இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்கிறோம். இது அவற்றின் மரணத்தில் முடிகிறது.

இதற்கு மாறாக மாற்று முறையில் சிகிச்சை செய்தபோது முடிவுகள் சாதகமாக இருந்தன. அதாவது இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்காமல் அப்படியே விட்டுவிட்டு உடலுக்கான இரத்த ஓட்டத்தை செயற்கையாக heart-lung bypass machine மூலம் கொடுத்துக் கொண்டு இருதயத்தை துடிக்க வைத்தார்கள். 80 சத விகிதமானவர்களைக் காப்பாற்ற முடிந்தது.

அத்துடன் குருதியின் வெப்பத்தை 37 இலிருந்து 33 டிகிரி செல்சியஸ்க்கு குறைப்பதன் மூலம், பிராண வாயுவால் மூழ்கடிக்கும் போது கலங்களுக்கு ஏற்படும் இரசாயன மாற்றங்களை குறைக்க முடியும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதை வெளியிடங்களிலும் செயற்படுத்தக் கூடியதாக உப்பும் ஜசும் சேர்ந்த ஒரு வித கலவையை ஊசி மூலம் ஏற்றும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவற்றை கடைப்பிடித்தால் மரணித்தவருக்கும் சிகிச்சை செய்து 'உயிர்ப்பிக்க' முடியும். ஆராச்சிகள் தொடர்கின்றன. அது நாளாந்த செயற்பாட்டிற்கு வந்து, அதுவும் எங்கள் நாட்டிற்கு வந்து சேரும் வரை மாரடைப்பு வராதிருக்க பிரார்திப்போமாக.


முருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்தசுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயம்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

காது, மூக்கு, தொண்டை முக்கிய பிரச்னைகளும் நவீன சிகிச்சைகளும்

காது: கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். இதன் முக்கியத்துவத்தை உணராமல் காது வலிதானே என்று அசட்டையாக இருந்து விட்டால் கடைசியில் உங்கள் வார்த்தைகளையே நீங்கள் கேட்க முடியாத பரிதாப நிலை உண்டாகி விடும். எனவே, பின்வரும் காது பிரச்னைகள் குறித்து கவனமாக இருக்கவேண்டும்.
நடுச்செவியில் நீர்க் கோர்வை: காது கேளாமை, காது வலி, தலைச்சுற்றல் உண்டாக்கும் சிறு வயதிலேயே காது கேளாமை ஏற்பட்டால் குழந்தையின் அறிவு வளர்ச்சியும் மொழி கற்கும் திறனும் பாதிக்கப் படும். நீண்ட நாட்களுக்கு நீர்க்கோவை இருந்தால் கொலஸ்டிடோமா எனும் எலும்பு அரிப்பு நோய் உருவாகி மூளை காய்ச்சல் ஏற்படும். இந்நோய் முற்றி கோமா நிலைக்கு மனிதர்களை தள்ளுகிறது.
இதற்கு கே.டி.பி. லேசர் கதிர் மூலம் செவிப்பறையில் 0.8 மி.மீ. துவாரம் இட்டு தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும். நடுச்செவியில் காற்று அழுத்தத்தை சமனாக்க சிறிய டுயூப் பொருத்தப்படும். நீர்க்கோர்வை முழுமையாக நீங்கி காது நன்றாக கேட்கும் போது இந்த டீயூப் தானாகவே வெளியே வந்து விடும். மாஸ்டாட்டோ டிம்பனோ பிளாஸ்டி என்னும் மைக்ரோ லேசர் சிகிச்சை மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம். செவிப் பறை இற்று விட்டால் அவரவர் திசுவின் மூலமாகவே மாற்று செவிப்பறையை உருவாக்கலாம். நடுச்செவி எலும்புகள் இற்றுவிட்டால் 24 கேரட் தங்கத்தால் ஆன செயற்கை எலும்புகளை பொருத்தி மீண்டும் காது கேட்கும் திறனை பெற்றுக் கொள்ளலாம்.
தலைச்சுற்றல்: உள்காதில் உள்ள 3 அரைவட்டக் குழாய்களின் நீர்க் கோர்வை அதிகமானால் தலைச்சுற்றல், வாந்தி, காதில் இரைச்சல், காது கேளாமை ஆகிய பிரச்னைகள் உருவாகும். இது மீனியர்ஸ் என்னும் நோயின் அறிகுறி. இதனை தக்க மருந்து மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் தலைச் சுற்றலைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் அரைவட்டக் குழாய்களிலுள்ள தலைச்சுற்றலுக்கு காரணமான குபுலா என்னும் நரம்பு மண்டலங்களை உணர்விழக்கச் செய்து நிரந்தர தீர்வு காண முடியும்.
காக்ளியர் இணைப்பு: முற்றிலும் காது கேட்கும் சக்தியை இழந்த குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் மூலம் அறுவை சிகிச்சை செய்து உரிய பேச்சுப் பயிற்சியை வழங்கினால் குழந்தைகளின் காது கேட்கும் சக்தியும், பேசும் திறனும் மேம்படும், தழும்பு, வீக்கம், வலி, முடி அகற்றுதல் எதுவுமின்றி குழந்தைகளுக்கு கேட்கும் திறன் எளிதில் கிடைக்கும். பெரியவர்களுக்கு பேச்சுப் பயிற்சி இல்லாமலேயே இப்பிரச்னையை தீர்க்கலாம். இந்த காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையை மேற்கொள்ள முன்பெல் லாம் காதின் பின்புறத்தில் 15 சென்டி மீட்டர் அளவிற்கு அறுக்கப் பட்டது.
தற்போது வெறும் 3 சென்டி மீட்டர் நீளத்திலேயே தழும்பில்லாமல் மயக்க நிலையிலேயே நியூரல் டெலி மெட் என்னும் கம்ப்யூட்டர் சாதன உதவியுடன் காக்ளியர் இம்ப் ளாண்ட் எலக்ட்ரோட்ஸ் ஆகியவை சிறப்பாக இயங்குகின்றனவா என்பதை கண்டறிய முடியும். இரண்டு வாரங்களில் காது கேட்கும் சக்தியை பெற முடியும். பேசும் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
மூக்கு சைனஸ்: மூக்கின் அருகில் காற்று அறைகளில் சளி ஏற்பட்டு மூக்கு அடைப்பு உண்டாவதே சைனஸ், மூக்கை இரண்டாகப் பிரிக்கும் விட்டம் நடுவில் இல்லாமல் வளைந்து இருந்தால் சைனஸ் அறைகளில் சளி தேங்கும். சளியில் வளரும் பாக்டீரியா காரணமாக சீழ் உண்டாகி தலைவலி, காய்ச்சல் முக வீக்கம் தொண்டை வீக்கம், காது வலி, காது அடைப்பு உண்டாகும். இதனால் மூக்கில் இருந்து ரத்தத்துடன் சீழ் வடியும் நிலையும் ஏற்படும். இதற்கு கே.டி.பி. 532 லேசர் கருவி மூலம் எண் டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை அல்லது செப் டோபிளாஸ்டி சிகிச்சை பெறலாம். தழும்போ, காயமோ ஏற்படாது.
பாலிப்ஸ்: தூசி மகரந்தம் பெட்ரோல் – டீசல் புகை ஆகியவை ஏற்படுத்தும் ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக மூக்கில் பாலிப்ஸ் எனப்படும் சதை வளர்கிறது. இதனால் நுகர்வுத் தன்மை பாதிக்கப்படுகிறது. மூச்சுத்திணறல் ஏற்படலாம். எண்டாஸ்கோபி லேசர் அல்லது டெப்ரைடர் அறுவை சிகிச்சை மூலம் பாலிப்ஸ்களை அகற்றலாம். பின்னர் மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தலாம்.
உருவ சீரமைப்பு: ரைனோபிளாஸ்டி எனப்படும் சிகிச்சை மூக்கின் உள்புறத்தில் சிகிச்சைகள் வழங்கி உருவத்தை மாற்றலாம். 18 வயதைக் கடந்தோருக்கு மட்டுமே இச்சிகிச்சையை வழங்க முடியும்.
தொண்டை டான்சில்ஸ்: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நுண்கிருமி களின் தாக்குதலால் டான்சில் சதைகளில் சீழ் கோர்த்து காய்ச்சல் தொண்டை வலி ஆகியன உண்டாகின்றன. டான்சி லைட்டிஸ் காரணமாக மூட்டுவலி, இருதய நோய், சிறுநீரக கோளாறுகள் ஏற்படலாம். உரிய சமயத்தில் இதற்குச் சிகிச்சைப் பெற வேண்டும். மருந்துகளால் சரியாகவில்லை யெனில் கே.டி.பி. லேசர் மூலம் ரத்தக் கசிவு இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
அடினாய்டு சதை வளர்ச்சி: மூக்கில் உள்ள திசுக்களின் அபரிமித வளர்ச்சி காரணமாக அடிக்கடி சளி பிடித்தல், மூக்கு அடைப்பு ஏற்பட்டு வாயில் மூச்சு விடுதல், காதில் சீழ் கோர்த்தல், காது கேளாமை குறட்டை மற்றும் சுவாசப பிரச்னைகள் உண்டாகலாம். இதன் காரணமாக மூளை மற்றும் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் வினியோகம் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். எண்டாஸ் கோபிக் லேசர் அல்லது மைக்ரோ டெப்ரைடர் மூலமாக அடினாய்டு சதை வளர்ச்சியை நீக்க முடியும்.
குறட்டை: குறட்டை பிரச்னையை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு எடைக்குறைப்பும் குறட்டையை குறைக்க முடியும்.
குரல்வளை: குரல் கரகரப்பு, இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை குரல் வளை நோயின் அறிகுறிகள். குரல் வளையில் உருவாகும் புற்றுக் கட்டி களையும் கே.டி.பி. லேசர் மூலம் குணப்படுத்த முடியும்.
குரல் மாற்று சிகிச்சை: குரல் நாண் நரம்பு பாதிக்கப்பட்டால் தைரோஸ்பிளாஸ்டி என்னும் குரல் மாற்றுச் சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்ய முடியும். இச்சிகிச்சையில் மருத்துவரிடம் பேசி கொண்டே வேண்டிய குரலை பெற முடியும். இனிமையான குரலையும் தேர்வு செய்யலாம். குரல் நாண்களில் திசுக்களை புகுத்தி கணீரென்ற குரல் வளத்தைப் பெற போனோ சர்ஜரிகள் கையாளப்படுகின்றன.
விக்ரம் இ.என்.டி.
ஹாஸ்பிடல் – ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்,
கோயமுத்தூர் – 2.

ஆப்பிள் தரும் ஆரோக்கியம்

நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும். இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர். இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.
பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.
மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர விஸ்கி அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது. வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.
ஆப்பிளிலுள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்கி குடற்பாதையிலுள்ள நுண்கிருமகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட வாய் மற்றும் தொண்டைப் பகுதியிலுள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன. வயதானவர்களுக்கு ஆப்பிள் மேற்தோலானது செரிக்கக் கடினமாக இருக்குமென்பதால் மேற்தோலை நீக்கி உட்கொள்வது நல்லது. ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டாம் என்பது ஆங்கில பழமொழி. நீர்ச்சத்து ஏராளமாக உள்ள ஆப்பிள் பழத்தை கோடைக்காலத்தில் நன்கு உட்கொள்ளலாம். இதில் ஏராளமான மாவுச்சத்து நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சம உணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகள் ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.

வாக்கிங் – ஜாகிங்

சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும். இதற்கு உண்மையான காரணம், மருத்துவ ஆலோசனை இல்லாமல், நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஜாகிங் கிளம்பிவிடுவது தான். மற்ற உடற்பயிற்சி போலத்தான் ஜாகிங்கும். ஆனால், எல்லா வயதினரும் இதை செய்யக் கூடாது; வாக்கிங் போகலாம்; ஜாகிங் என்றால் ,ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து.
நாற்பது வயதுக்கு மேல் என்றால், ஜாகிங் செய்ய டாக்டரிடம் அனுமதி பெற வேண்டும். ரத்த அழுத்தம், ரத்த அளவு போன்றவையும் கூட இதனால் பாதிக்க வாய்ப்புண்டு. ஜாகிங்கை பல ஆண்டாக செய்து வருவோருக்கு பெரிய அளவில் பிரச்னை வராது. திடீரென ஆரம்பிப்போருக்கு தான் எல்லா கோளாறும் வரும். கால் மட்டுமல்ல, மூட்டு உட்பட உடலின் பல பகுதிகளை ஜாகிங் பாதிக்கும். ஜாகிங்கால், புத்துணர்ச்சியை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள என்டோர்பின் ரசாயனம் குறைந்து விடும். இதனால், பொதுவான சுறுசுறுப்பு குறைந்து விடும்.
ஜாகிங் போவதை விட, விறு விறுப்பாக “வாக்கிங்’ போவதே நல்லது. அதனால், உடலில் கலோரி எரிக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது; பல வகையில் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

மார்பில் வெடிப்பு மறைய…
கானாவாழை

இது மாம்பழ சீசன். அதிகமான அளவில் மாம்பழங்களை பார்த்தவுடன் கணக்கு தெரியாமல் சாப்பிட்டுவிட்டு வயிற்றுவலி, கழிச்சல், வாந்தி என கஷ்டப்படுவதுண்டு. மாம் பழம் உண்ணும்பொழுதுபால் அதிகம் சாப்பிடவேண்டும் என்பது சித்த மருத்துவ விதி. புளிப்புள்ள மாம்பழங்களை உண்ணும்பொழுது சிறுநீரக கற்கள் தோன்றலாம். பெரும்பாலும் இனிப்பான, நார் அதிகமில்லாத மாம்பழங்களை உண்பது நல்லது. இல்லையெனில் வயிறு ஊதல், பசி மந்தம், கழிச்சல் ஆகியன உண்டாகும். ரத்தமூலம் உடையவர்கள் அதிகம் மாம்பழம் உண்பதை தவிக்க வேண்டும்.
தாய்மைக்கு அங்கீகாரமாக வடிவமைக்கப்பட்ட பெண்களின் மார்பகங்கள் ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் மறைமுக பணியை செய்கின்றன. மாதவிலக்கின்போது ஏற்படும் உடல் மாற்றங்களில் மார்பே பெரும்பங்கு வகிக்கிறது. பஞ்சு போன்ற நீட்சித்தன்மையுடைய சிறப்பு திசுக்களால் ஆக்கப்பட்ட பெண் மார்பகங்களின் உட்புறத்தில் தாய்ப்பாலை சுரக்கும் லேக்டேடிக் கோளங்கள் குவிந்துள்ளன. இவை மார்பு நுனியில் தாய்ப்பாலை வெளிப்படுத்துகின்றன.
இலக்கியங்களிலும், பண்டைய மருத்துவ நூல்களிலும் பலவாறு பெருமைப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் மார்பகங்கள் அழகுக்கு மட்டுமின்றி தாய்மையின் உணர்வையும், தாய்ப்பாசத்தை ஊட்டவும் பயன்படுகின்றன. ஒரு சிசுவானது பிறந்து வளர்ந்து சுயமாக உணவு உண்ணும் காலம் வரை தனது ரத்தத்தையும் சத்தையும், அன்பையும் ஊட்டி வளர்க்க தாய்க்கு உதவுவது மார்பகங்களே. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்பகங்களில் பலவிதமான நோய்கள் உண்டாகலாம். மாதவிலக்கின் நிறைவு காலங்களான மெனோபாஸ் காலங்களிலும் தாய்ப்பால் ஊட்டும் காலங்களிலும் மார்பு நுனியில் சில தொல்லைகள் தோன் றலாம். மார்பு நுனியில் தோன்றும் தோல் வறட்சி, கிருமித்தொற்று, கொழுப்பு அடைப்பு, வியர்வை கோள வீக்கம் போன்ற காரணங்களால் மார்பில் வெடிப்பு உண்டாகலாம். இந்த வெடிப்பு உண்டான மார்பில் சில நேரங்களில் திரவ கசிவும் தோன்றிவிடும்.
பெண்களின் மார்பு காம்புகளில் தோன்றும் வெடிப்பை முலைக்காம்பு விரணம் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. உணர்ச்சி நரம்புகள் ஏராளமாக நிறைந்துள்ள மார்பு நுனியில் விரணங்கள் ஏற்படும்பொழுது முறையான சிகிச்சை பெறாவிட்டால் திரவ கசிவில் துர்நாற்றமும், அக்குள் பகுதிகளில் வீக்கம் மற்றும் நெறிகட்டுதலும் உண்டாகும். ஆகவே முலைக்காம்புகளில் வெடிப்பு, கசிவு ஆகியவை ஏற்பட்டால் உடனே கவனித்து விரணத்தை ஆறச்செய்ய வேண் டும். மார்பை சுகாதாரமாக வைக்காததாலும், மார்பு நுனித்தோலின் வறட்சியினாலும், உள்ளாடையில் ஏற்படும் கிருமித் தொற்றினாலும், ஈரமான உள்ளாடைகளை அணிவதாலும் மார்பு நுனியில் வெடிப்பு உண்டாகிறது. அதுமட்டுமின்றி கரப்பான், சோரியாசிஸ், பூஞ்சைத் தொற்று, சர்க்கரை நோய் போன்றவற்றிலும் மார்பில் வெடிப்பு அதிகமாகிறது.
பெண்களின் மார்பு காம்பிலுள்ள துளையில் ஏராளமான பால் சுரப்பிகளும், பலவகையான திரவ சுரப்பிகளும் முடிவடைகின்றன. இவை வியர்வை, தாய்ப்பால் மற்றும் கொழுப்பு கோளங்களுடன் இணைந்து கிருமித்தொற்றினால் பாதிக்கப்படும்பொழுது மார்பு கசிவை ஏற்படுத்துகின்றன. மார்பு நுனியில் ஏற்படும் விரணங்களை ஆற்றி தோல் வறட்சியை கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை கானாவாழை.
கானாவாழை இலைகளை காம்பு நீக்கி மைய அரைத்து, மார்பு நுனியில் தடவி அதிகாலையில் திரிபலாச்சூரணம் கரைத்த நீரால் கழுவிவர விரணம் ஆறும். இதே கானாவாழை இலைகளை லேசாக நீர் தெளித்து, இடித்து, சாறெடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து மார்பில் தடவிவர விரைவில் ஆறும். கானாவாழை இலை, வேப்பிலை, மஞ்சள்தூள் மூன்றையும் நன்கு அரைத்து மார்பில் தடவிவந்தால் வெடிப்பு நீங்கி, கொப்புளம், கசிவு மாறும்.


மிளகாய் பஜ்ஜி… சமோசா!

சாப்பிட சாப்பிட ருசி : சாப்பிட்ட பின் கொலஸ்ட்ரால்
யாருக்கு தான் பிடிக்காது, மிளகாய் பஜ்ஜி, சமோசா. ஆனால், தரமானது தானா என்று பார்த்துச் சாப்பிட் டால் உடலுக்கு நல்லது தானே. இல்லாவிட்டால், கெட்ட கொலஸ்ட்ரால் பூதம் பாடாய்ப்படுத்தி விடும்.
அப்புறம் என்ன…? ரத்தத்தில் கொழுப்பு ஏறி, மார்பை பிடித்துக்கொள்ள வேண்டியது தான். அதற்கு பின் தான் பலருக்கே ஞானோதயம் வரும். கண்ட கண்ட எண்ணெய், காயவைத்த எண்ணெய் போன்றவற்றில் செய்யப்படும் பஜ்ஜி சமாச்சாரங்கள் மூலம் நம் உடலில் புகுந்து கொள்ளும் கொழுப்பு தான் “டிரான்ஸ் பேட்’ என்ற புது வகை கொழுப்பு.
புதுக் கொழுப்பு இது
எந்த ஒரு உணவிலும் சாச்சுரேட்டட் மற்றும் “நான் – சாச்சுரேட்டட்’ கொழுப்பு உள்ளதாக தான் இதுவரை கருதப்பட்டது. ஆனால், புதிதாக ,சர்வதேச அளவில் கண்டுபிடிக்கப்பட்டது தான் “டிரான்ஸ் பேட்’ கொழுப்பு.
சாச்சுரேட்டட் கொழுப்பு தான் கெட்ட கொழுப்பை, ரத்தத்தில் சேர்க்கி றது. அதுபோல, “டிரான்ஸ் பேட்’ கொழுப்பு சேர்ந்தால் அதை விட 15 மடங்கு கெட்ட கொழுப்பு சேருமாம். அமெரிக்கா உட்பட, பல நாடுகளில் இந்த வகை கொழுப்பு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
யப்பா… 30 சதவீதமா?
“டிரான்ஸ் பேட்’ கொழுப்பு, அதிக பட்சம் இரண்டு சதவீதம் வரை இருக்கலாம் என்று சர்வதேச அளவில் மருத்துவ நிபுணர்கள் வரையறுத்துள்ளனர். ஆனால், இந்தியாவில் சமீப காலம் வரை நடத்தப்பட்ட பல்வேறு அமைப்புகளின் ஆய்வுகளில், “இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் 10 முதல் 23 சதவீதம் வரை “டிரான்ஸ் பேட்’ கொழுப்பு உள்ளது ‘ என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில எண்ணெய்களில் 30 சதவீதம் வரை கூட இந்த மோசமான கொழுப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. “டிரான்ஸ் பேட்’ கொழுப்பு நமக்கு புதிது; அதை தடுக்க தனியாக சட்டம் கொண்டு வந்தால் தான் நல்லது; இல்லாவிட்டால் தயாரிப் பாளர்கள் இது பற்றி பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள்’ என்று மருத்துவ தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டது.
உஷாருங்க உஷாரு
எண்ணெயில் பொரித்த அப்பளம், பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவற்றுக்கு நம்மில் பலரும் அடிமையாகி விட்டனர். எண்ணெய் இல்லாமல் செய்து தரப்படும் உணவுகளில் நாட்டம் இல்லை. சாலையோர கடைகளில் கூட, பஜ்ஜி, சமோசா விற்பனை கன ஜோர் தான்.
எந்த எண்ணெயில் பொரித்தது, தரமானது தானா என்று எத்தனை பேர் பார்க்கின்றனர்? “ஒரு நாளைக்கு சாப்பிட்டா கொலஸ்ட்ரால் வந்துடுமா… என்ன?’ என்று தத்துவம் பேசியே பல நாள் சாப்பிடுவோர் பலரும் உள்ளனர்.
நாற்பது வயதை தாண்டியபின் தான் , ஒரு முறை டாக்டரிடம் போய் பி.பி.,செக்கப் செய்யும் போது இந்த “டிரான்ஸ் பேட்’பூதம் எந்த அளவுக்கு வேலை காட்டிவிட்டது என்று புரியும். அதற்கு பதில் இப்போதே காத்துக்கொள்ளலாமே!
சர்க்கரை நோய்க்கும்…
இதய நோய் வருவதற்கு காரணம், கொலஸ்ட்ரால் தான். சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் , ரத்தத்தில் சேரும். அப்படி சேரும் போது தான், ரத்த கொலஸ்ட்ரால் அதிகரித்து, ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம் ஏற்படும் கெட்ட கொலஸ்ட்ராலை விட, “டிரான்ஸ் பேட்’ மூலம் 15 மடங்கு வரை கொலஸ்ட்ரால் சேர்க்கும் ஆபத்து உள்ளது. இது மட்டுமில்லாமல், “சி – சியாக்டிவ்’ ப்ரோட்டீன் என்ற ஒரு தீய சத்தும், இதன் மூலம் உடலில் சேர்கிறது. இது தான் இதய பாதிப்புக்கு இன்னும் துணை போகிறது.
இதயத்தை தான் பாதிக்கிறது என்றால், ரத்தத்தில் உள்ள க்ளூக்கோஸ் அளவையும் அதிகரிக்க “டிரான்ஸ் பேட்’ துணை போகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.
எது தான் நல்லது?
பலருக்கும் எந்த எண்ணெய் தான் நல்லது என்று தெரியாமல் குழம்புகின்றனர். “பாலி அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட் (புபா) உள்ள மக்காச்சோள அடிப்படையிலான எண்ணெய்கள், சன் பிளவர், ஆகியவற்றுடன், “மோனோ அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட்’ (முபா) கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
இவற்றை எல்லாம் விட, ஆலிவ் எண்ணெய் மிகச் சிறந்தது; ஆனால், விலையும் கையை கடிப்பது தான்.
ஈசியான வழி இதோ
இப்போதுள்ள எண்ணெய் பழக்கத்தை கைவிட முடியாது தான்; ஆனால் , கட்டுப்படுத்திக்கொள்ளலாமே. இதோ சில வழிகள்:
* எண்ணெய்யை வாணலியில் ஊற்றி பொறிக் கும் போது, அதிக சூட்டில் வைக்க வேண்டாம்; தீப்பிடிக்கும் அளவுக்கு வைக்கவே வேண்டாம்.
* காய்ந்த எண்ணெயை மீண்டும் பயன் படுத்தவே கூடாது; இது தான் மிகப் பெரிய தவறு.
* பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணெய், சூரிய வெளிச்சம் படும் வகையில் வைக்க வேண்டாம்.
* கரண்டியை பயன்படுத்தாமல், ஸ்பூனை வைத்து எண்ணெய் எடுத்து சமைக்கவும்.
* காய்கறிகளை வேகவைத்து, அதன் பின் சிறிய அளவு எண்ணெயில் வதக்கலாமே.
இப்படி செய்யுங்க முதலில்!


கால் வலி போக்கும் கல்தாமரை

முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி, அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன. ச
ராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் பொழுது கலுக், கலுக் என சத்தமும் உண்டாகின்றன. ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ் என்று சொல்லப்படும் இந்த கீல்வாயுவானது எலும்பு இணைப்புகளை அதிகம் பாதிக்கிறது.
எலும்புகளின் இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சிகள் செய்யவேண்டும் அல்லது நோயின் தன்மைக்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும், இல்லாவிடில் எலும்பு சந்திப்புகளில் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல், எரிச்சல், சிவப்பு என பல மாற்றங்கள் உண்டாகின்றன. சமீபகாலமாக குழந்தைகள் கூட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூட்டுகளில் வலியுண்டாகும் பொழுது ஆரம்ப நிலையிலேயே நாம் மூட்டுவலியின் காரணங்களை அறிந்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை உண்பதால் நோய்க்கான காரணம் மறைக்கப்படுவதுடன், நோய் முற்றி பல பக்கவிளைகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. மூட்டுகளில் தோன்றும் வலியை நீக்கி, வீக்கம் மற்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி, மூட்டுகளுக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய மலைப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் அற்புத மூலிகை கல்தாமரை என்று அழைக்கப்படும் மலைத்தாமரையாகும்.
சுமைலாக்ஸ் செய்லானிகம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்தாமரைச் செடிகள் அழகுக்காவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இதன் வேர்மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இரண்டு அல்லது மூன்று கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும், தொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிடலாம், இதன் இலைகளை லேசாக வெதுப்பி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் பற்று அல்லது ஒற்றமிட வீக்கம் வற்றும். கல்தாமரை வேரை கசாயம் செய்து குடிக்க பால்வினை நோய்களால் ஏற்படும் மூட்டுவலி நீங்கும்.

மாரடைப்பு, திடீர் மரணத்தை முன்கூட்டியே காட்டிக் கொடுக்கும் கரோனரி ஆஞ்ஜியோகிராம்
மனிதனுக்கு உயிர்வாழ இதயத்துடிப்பு தேவை. இதயம் துடிக்கச் சக்தி தேவை; இந்த சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? இந்த சக்தி, இதயத் தின் இடது கீழறையிலிருந்து வெளியேறி, அயோட்டா என்ற மகா தமனி மூலம் வெளியேற்றப்படுகிறது. அப்போது, அயோட்டா ஆரம்ப பகுதியிலுள்ள கரோனரி சைனஸ் என்ற பகுதியிலிருந்து ஆரம்பமாகும் மூன்று கரோனரி ரத்தக்குழாய்கள் மூலம் இதயம், வேண்டிய ரத்தத்தை பெறுகிறது.
இதயத்துடிப்பு
இதயம் துடித்து, அதன் வேலையை செய்ய, அதாவது இடது அறையிலிருந்து ஐந்து லிட்டர் ரத்தம் நிமிடத்திற்கு வெளியேற்றப்படுகிறது. இந்த துடிப்புக்கு ரத்தம் தேவை. இந்த ரத்த ஓட்டம் குறைந்தாலோ? நின்றாலோ? வேதனையும், துயரமும் தான் வரும். சோதனைக் காலம் துவங்கி விட்டது.
மாரடைப்பு, திடீர் மரணம் என்று மனிதனை அழித்து விடுகிறது. இதனால், 25 வயது முதல் 60 வரை, குடும்பத் தலைவன் உயிர் எவ்வளவு முக்கியத் தேவை. குடும்பத்தின் வாழ்வாதாரமே, அந்த வருவாய் ஈட்டும் ஜீவனால் தானே. அப்படிப்பட்ட இளம், நடுத்தர, மேல் வயது குடும்பத் தலைவர்களை காப்பாற்றி, அந்த குடும்பத்தை சோதனையிலும், துயரத்திலும், துன்பத்திலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு, இதய நோய் நிபுணருக்குள்ளது. குடும்பத் தலைவனின் நலனில், அவளுடைய மனைவி, மக்கள் நாட்டம் செலுத்த வேண்டும். ஏனெனில், அவர் வருமானம் தான் தங்களை காப்பாற்றுகிறது என்ற நினைவு இருக்கட்டும்.
உயிர் வாழ துடிப்பு
அரசியல்வாதிகள், தனது உடலை மாதம் மாதம் பரிசோதித்து, இதயத்தைப் பாதுகாக் கின் றனர். தான் லஞ்ச ஊழலில் கொள்ளையடித்தப் பணத்தை அனுபவிக்க சர்க்கரை, ரத்த கொதிப்புடன் போராடி உயிர் வாழ துடிக்கின்றனர். ஒரு குடும்பத் தலைவன், குடும்ப உறுப்பினர்கள் நலத்திற்காக, வருடம் ஒருமுறையாவது இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மாரடைப்பு என்றால் என்ன?
இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாய் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். சிலருக்கு மரணத்தை கொடுக்கும். அஞ்சைனா என்ற மார்புவலி, ரத்தக்குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும். இந்த அடைப்புகளால் இதய தசைகள் செயல் குறைந்து, நலிவடைகிறது. இ.எப்., என்ற இதய தசைகள் இயக்கத்தின் செயலை குறிக்கும் குறியீடு. இது 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இருக்க வேண்டும். இதுதான் முதலில் ஏற்படுகிறது. அதன்பின் தான் மார்புவலி. கரோனரி ரத்தக்குழாயின் முழு அடைப்புதான் மாரடைப்புக்குக் காரணம். முன் கூட்டியே, 70 முதல் 90 சதவீதம் அடைப்புள்ள குழாயில், மீதியுள்ள குழாயில் ரத்தம் உறைந்து முழு அடைப்பாகிறது. இந்த நேரத்தில், மார்புக் கூடு முன் கடுமையான வலி, இந்த வலி இடது தோல் பட்டைக்கு பரவுதல், முதுகுக்குப்பின் வலி வருதல், சில சமயங்களில் பல் வலி, பகட்டு வலி, கழுத்து வலி, விழுங்க கஷ்டம், காஸ் அடைப்பு போன்று பல அறிகுறிகள் தென்படலாம்.
மவுனமான மாரடைப்பு: இந்த அறிகுறிகள் இல்லாமல், பரிசோதனைக்கு வரும்போது மாரடைப்பு கண்டு பிடிக்கப்படுகிறது. இது மவுனமான மாரடைப்பு. இதை இ.சி.ஜி., மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மாரடைப்பை ஊர்ஜிதம் செய்ய, என்சைம் பரிசோதனை செய்யலாம். தற்போது டிராப்ட் டெஸ்ட் என்ற பரிசோதனை இதய தசைகள் பழுதடைந்ததை காட்டும். அதன்பின், எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை. இவைகள் செய்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும்.
இதை முடிவு செய்வது இதயநோய் நிபுணர் அல்லது அவர் ஆலோசனையில் சேர்ந்து, அவரது ஆலோசனைப்படி மருத்துவம் பார்க்க வேண்டும். காரணம், தேவையில்லாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுபவமில்லாத மருத்துவர்கள் சேர்க்கப்பட்டால், பணம் விரயம், நல்ல மருத்துவ சேவையும் கிடைக்காது. இதயநோய் நிபுணர், குறிப்பாக, ஊருருவல் வல்லுனர்களால் மாரடைப்பு, மார்பு வலிக்கு காரணமான கரோனரி குழாய் அடைப்பை சரி செய்ய இவர்களால் தான் முடியும். அதாவது, முழுமையான சிகிச்சை கொடுக்க முடியும்.
மார்புவலி, மாரடைப்பு என்று அறிந்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், அன்ஸ்டேபில் ஆஞ்ஜினாவால் (UNSTABLE ANGINA) ஒருநாள் கண்காணித்து, அடுத்த நாள் அனுப்பலாம். இல்லையென்றால், தேவையில்லாமல் ஐ.சி.யு., அட்மிஷன் என்று பல ஆயிரம் செலவழிக்க வேண்டி வரும். அடைப்புக்கு காரணமான ஆஞ்ஜியோகிராம் செலவு, ஐ.சி.யு., செலவைவிடக் குறைவு தான்.
வேறுபாடு என்ன?
ஆஞ்ஜியோகிராம் பரிசோதனைக்கும், டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம் பரிசோதனைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் டி.எம்.டி., என்ற பயிற்சி இ.சி.ஜி., இதில் ரத்தக்குழாய் அடைப்பு, இதய தசைகள் செயல் பாடு, தாறுமாறாக இல்லாமல், இதயம் மூச்சிரைப்பு, படபடப்பு, மார்புவலி கண்டறியலாம். அனுமானமாக அடைப்பை காட்டும்.
எக்கோ கார்டியோகிராம் இதய நான்கு அறைகள், நான்கு வால்வுகள், ரத்த ஓட்டம், இதய தசைகளின் செயல்பாடு இவைகளை குறிக்கும். கொலஸ்டிரால் என்ற லிப்ட் புரபைல், இதில் நல்ல கொழுப்பு (HDL),கெட்டக் கொழுப்புகளால் LDL, VLDL, டிரை இளரைடு இவை கண்டு பிடித்து அடைப்பின் அனுமானத்தோடு கூறலாம்.
கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற ஊடுருவல் பரிசோதனை, துல்லியமாக ரத்தக்குழாய் அடைப்பை காட்டும். இதற்கு, மருந்தை உட்செலுத்தி படமெடுத்து காட்டலாம். இதில் ரத்த ஓட்டத்தை மூன்று ரத்தக்குழாயில் கண்டுகொள்ளலாம். இதில் இதய துடிப்பையும், ரத்த ஓட்டமும் டைனமிக் என்ற செயல்பாட்டில் பார்க்கலாம்.
மற்ற 64, 120, சி.டி., ஆஞ்ஜியோகிராமில் கரோனரி வரைபடம் பார்க்கலாம். ஆனால், ரத்த ஓட்டம், சிஸ்டலி, டியஸ்டலி போன்றவற்றுக்கு படத்தைப் பார்க்க முடியாது. இதுதான் சிறந்தது. பை-பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சைக்கு இதுதான் முக்கிய டெஸ்ட்.
யார் யாருக்கு எப்போது தீவிர சிகிச்சை (ICC)
1) மாரடைப்பு, இ.சி.ஜி.,யில் மாற்றம், டிராப்ட் டெஸ்ட் பாசிடிவ் ஐ.சி.யு., தேவை.
2) மூச்சுத் திணறல், இதய பம்பிங் குறைவினால் நுரையீரலில் தண்ணீர் சேர்தல்.
3) படபடப்பு, மயக்கம், தலைசுற்றல், இ.சி.ஜி.,யில் மாற்றம்.
4) மயக்கம், மூச்சு பேச்சு இல்லாத நிலை.
5) ரத்த அழுத்தம் குறைதல், இதயத்துடிப்பு குறைதல்.
மேற்கூறியவைகள் தான் முக்கிய ஐ.சி.யு., அனுமதிக்கு காரணமாகிறது. இந்நிலையில், நல்ல முன்னேற்றம் வந்த பிறகு ஆஞ்ஜியோகிராம் செய்ய வேண்டும். சில நேரங்களில், மேற்கூறிய நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால், உயிரைக் காப்பாற்ற ரெய்டு (Rescue Angyogram plasty) ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும். முன்கூட்டியே அடைப்பை அறிய, யார் யாருக்கு கரோனரி ஆஞ்ஜியோகிராம் செய்ய வேண்டும்.
அ) ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, அதிக கொதிப்பு உள்ளவர்கள், பாரம்பரிய தன்மை, புகைப்பிடிப்பவர், அதிக எடை உள்ளவர்கள்.
ஆ) நெஞ்சு எரிச்சலுள்ளவர்கள், சிறிது தூரம் நடந்தால் மூச்சிரைப்பு, படபடப்புள்ளவர், நாளாக நாளாக இனம் புரியா தளர்ச்சி.
இ) ரிஸ்க் உள்ள பணியாளர்கள் நடுத்தர வயதினர்.
வருடத்திற்கு ஒருமுறை குடும்பத் தலைவர் தனது குடும்பத்தினருக்காகவாவது இந்த மாரடைப்பு வர காரணமான அடைப்பை கண்டறிய வேண்டும்
திடீர் மரணம்
குடும்பத்தினரை வேதனையும், சோதனையுமாக்கி, குடும்பத்தினர் மீது கல்லை போடுவதற்கு சமம். தினம் தினம் பொய் பேசி, மனைவிகளுக்கு பிள்ளைகளின் நலத்திற்காக தனது இதயத்தை மாதா மாதம் பரிசோதனை செய்து, மக்கள் தலையில் கல்லைப் போட்டு கொடுமைப்படுத்துகிற அரசியல்வாதிகளை பார்த்தாவது நடுத்தர மக்கள், குறிப்பாக உணரப் பட்டவர்களே இந்த பரிசோதனைகள் செய்து, மாரடைப்பு திடீர் மரணத்தை தடுக்க பாருங்கள்.
யோக, தியானம், நடைபயிற்சி, தனிமனித ஒழுக்கம், உணவு ஒழுக்கம், இவைகள் இருந்தால் இதய நோயை தடுக்கலாம். இனிய தமிழ் மக்களுக்கு வரும் விரோத புத்தாண்டில், நலமுடன் வாழ, உங்களுடன் மறைந்து தாக்கும் ரத்த விரோதியான, மாரடைப்பு மரணத்தை தடுத்து வாழ எனது வாழ்த்துக்கள்; வாழ்க வளமுடன்.
மக்கள் கவனத்திற்கு புத்தாண்டு ஆலோசனைகள்
கடந்த 40 ஆண்டுகால, அரிய பல முன்னேற்றங்கள் கொண்ட துறை இதயநோய் துறை. காரணம், திடீர் மரணம் என்ற பயம். இ.சி.ஜி., எக்கோவில் ஆரம்பித்த பரிசோதனைகள் இன்று டி.எம்.டி., எக்கோ, லிபிட் ப்ரொபைல், கரோனரி ஆஞ்ஜியோகிராம், பை-பாஸ் சர்ஜரி ப்ரோபைல் இதய மாற்று ஆபரேஷன், 64, 120 சிலைஸ் ஆஞ்சியோ இதய நியூக்ளியர் பரிசோதனை தானியம் ஸ்டெசி எலக்லோ பிசியலாஸ்கள் பரிசோதனை என்று வளர்ந்து, மாரடைப் புக்கு பை-பாஸ் சர்ஜரிக்கு பதிலாக இன்று இரண்டு மூன்று ஸ்டென்ட் சிகிச்சை முறை பரவலாகி விட்டது. இந்த சிகிச்சை, பல ஸ்டென்ட் சிகிச்சை செய்ய பல லட்சங்கள். இதை கடன் வாங்கி, நகைகள், வீடு விற்று, ஏழைகள், நடுத்தர மக்கள் செய்ய வரும்போது வேதனை அளிக்கிறது. இவ்வளவு பணமும் ஸ்டென் கம்பெனி, மருத்துவமனைக்கு செல்கிறது. இதனால், இந்த ஸ்டென்ட் சிகிச்சை செய்வதை நிறுத்தலாமா என்று தோன்றுகிறது. தனிமனித ஒழுக்கம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி தியானம், யோகா, சுத்தமான சிந்தனை. இவைகள் இதய நோயைத் தடுக்கும்.
பேராசிரியர் டாக்டர். அர்த்தநாரி
இதய ஊடுருவல் சிகிச்சை நிபுணர்.
மொபைல்: 98401 60433.
email:drarthanarisubbu54@gmail.com.

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் :
வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது.
எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும்.
வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும்
ஆசனக் கடுப்பு நீங்கும்
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து,
பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள்
மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து,
வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில்
தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர
நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும்.
பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது.
ஜீரணத்துக்கும் உதவுகிறது.
வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது
வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்,
பித்த ஏப்பம் மறையும்.
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில்
தேய்த்தால் முகப்பரு நீங்கும்
தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர
பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

தினமும் தேநீர் குடியுங்கள்: இதய நோயைத் தவிர்க்கலாம்
தினமும் 3 கோப்பை தேநீர் குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முக்கியமாக டீ குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.
டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பிரிட்டனைச் சேர்ந்த உணவு முறை வல்லுநர் குழுவின் தலைவர் டாக்டர் கேரி ரக்ஸ்டன் ஆய்வு மேற்கொண்டு, டீ குடித்தால் இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்று கண்டறிந்துள்ளார்.
பிரிட்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகையில் இது குறித்து அவர் கூறியுள்ளது:
தினமும் 3 கோப்பை டீ குடிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. இது தவிர இதய நோய் முக்கியமாக மாரடைப்பு வரும் வாய்ப்பும், வலிப்பு நோய் பாதிப்புக்கான வாய்ப்பும் குறைகிறது.
தினமும் 2 கோப்பைக்கு அதிகமாக டீ குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது.
ஏற்கெனவே பிரான்ஸில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தினமும் டீ குடித்து வந்த பெண்ணுக்கு 32 சதவீதம் வரை இதய நோய் வர வாய்ப்புகள் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் டீ குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.
டீ குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றார் கேரி ரக்ஸ்டன்.
இனி நண்பர் டீ குடிக்க அழைக்கும் போது மறுக்காமல், உடன் செல்வது உடல் நலத்துக்கும் நல்லது.

முதுகு வலி குறைய…
நாம் கடினமான வேலைகளைச் செய்யும்போது தசைப் பிடிப்பு, மூட்டுவலி, முதுகுவலி ஏற்படுகிறது.
மூட்டு நழுவுவதாலும் முதுகு வலி ஏற்படலாம். இதற்கு எளிமையான பயிற்சியின் மூலம் தீர்வு காணலாம். முதுகுப்புறம் தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு, குதிகால்களை மடக்கி, நாற்காலி மேல் வைத்துக் கொள்ள வேண்டும்.
குதிகால்களுக்கு தலையணை வைத்துக் கொள்ளலாம். இப்படி ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்குச் செய்து வரவும்.
நீண்ட நேரம் இவ்வாறு செய்யாமல் சிறிது நேரம் நடந்து விட்டு பயிற்சி செய்யவும். மேலும் சூட்டு ஒத்தடம் 20 – 30 நிமிஷங்களுக்குக் கொடுத்தாலும் வலி குறையும்.
வலி குறைய…: உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். உட்காரும்போதும் நிற்கும்போதும் தூங்கும்போதும் சரியான நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
குனிந்து எந்த ஒரு அதிக சுமையுள்ள பொருளையும் தூக்க வேண்டாம். மாறாக முழுங்காலை ஊன்றி, பிறகு தூக்க வேண்டும். நீண்ட தூரம் கார்களை ஓட்டுவோர், விட்டு விட்டு ஓய்வுக்குப் பின் பயணம் செய்வது நல்லது. ஹீல்ஸ் இல்லாத காலணிகளை அணிவது நல்லது. நாற்காலியில் எப்போதும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். தொடர்ந்து நிற்பவர்கள் கால்களை மாற்றி மாற்றி ஓய்வு கொடுக்கப் பழக வேண்டும்.
தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு லேசாக இடது காலை மடக்கி, நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும். ஐந்து வினாடிகள் அப்படியே இருக்கவும். பின் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். பின்பு வலது காலை மடக்கி இது போல் செய்யவும்.
இப்படியே மாறி மாறி 10 முறை செய்தால், முதுகு வலி குறையும். புத்துணர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment