For My Relative grandma:
திருவண்ணாமலை, ஜூலை. 2-
திருவண்ணாமலை பவளக்குன்று ஒத்தவாடை தெருவை சேர்ந்த பட்டம்மாள், திருவண்ணமலை அருணாசலேஸ்வரர் கோவி லில் உள்ள நந்தவனத்தில் பூப்பறிக்க சென்ற போது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அவர் அணிந்திருந்த 15 பவுன் நகை கொள்ளை யடிக்கப்பட்டு இருந்தது. நகைக்காக இந்த கொலை நடந்துள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பட்டம்மாள் தினமும் காலை பூப்பறிக்க கோவில் நந்தவனத்திற்கு வருவதையும், நகைகள் அணிந்திருப்பதையும் மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளனர்.
கோவிலின் நான்கு நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. சாமி சன்னதி, அம்மன் சன்னதி என முக்கிய இடங்களிலும் கேமராக்கள் உள்ளன. இதன் மூலம் கோவிலுக்குள் வருவோர், செல்வோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
பட்டம்மாள் நேற்று காலை 6.40 மணிக்கு கோவிலுக்குள் வந்துள்ளது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அவர் கோவிலுக்குள் வந்த பிறகும், அதற்கு முன்பும் யார்- யார் கோவிலுக்குள் வந்தார்கள் என்பதை போலீசார் கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் கூறியதாவது:-
திருவண்ணாமலை கோவிலில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். இதில் கொலையாளிகள் படம் பதிவாகி உள்ளதா? என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. வைத்திலிங்கம் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.
கோவிலுக்குள் கொலை நடந்துள்ளதால் பரிகார பூஜை செய்யப்பட்டது. அதன் பின்னர் உச்சிகால பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.
புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
NEWS:
திருவண்ணாமலை: புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது.திருவண்ணாமலை பவளக்குன்று ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் காந்திமதிநாதன், சுதந்திர போராட்ட தியாகி. அவரது மனைவி பட்டம்மாள் (70). இவர்களுக்கு குழந்தை இல்லை. காந்திமதிநாதன் இறந்து விட்டார். பட்டம்மாள் தனியாக வசித்து வந்தார்.பட்டம்மாள் தினசரி அதிகாலை 5.30 மணியளவில் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் செல்வார். அங்குள்ள கோவில் நந்தவனத்தில் பூ பறித்து அதை மாலையாக்கி சாமிக்கு சூட்டி விட்டு மீதப் பூவை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம். 9 மணியளவில் வீடு திரும்புவார். அதன் பின்னர் அவரது அண்ணன் மகள் அமராவதி அத்தைக்கு சாப்பாடு எடுத்து வந்து தருவார்.இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் கோவிலுக்குச் சென்றார் பட்டம்மாள். ஆனால் வீடு திரும்பவில்லை. 9 மணியளவில் வந்த அமராவதி அத்தையைக் காணாமல் கோவிலுக்கு வந்தார். அங்கு கோவில் முழுவதையும் சுற்றிப் பார்த்தும் காணாததால், நந்தவனத்திற்கு வந்து பார்ததுள்ளார். அப்போது அங்கு பட்டம்மாள் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அலறினார். இதையடுத்து அங்கு கூட்டம் கூடி விட்டது.போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடந்த கொலையால் திருவண்ணாமலை முழுவதும் பரபரப்பாகி விட்டது. கலெக்டர் ராஜேந்திரன், வேலூர் டிஐஜி ஜெயராமன் உள்ளிட்டோரும் விரைந்து வந்தனர்.பட்டம்மாள் அணி்ந்திருந்த 15 பவுன் நகைகளைக் காணவில்லை. எனவே நகைக்காக இந்தக் கொலை நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.கொலை நடந்ததால் கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டு பின்னர் வழக்கம்போல பூஜைகள் நடந்தன.
News:
வியாழன், 1 ஜூலை, 2010
திருவண்ணாமலை, பட்டம்மாள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்
திருவண்ணாமலை பவழக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் பட்டம்மாள். இவருக்கு வயது 60. சுதந்திர போராட்ட தியாகியான காந்திமதி ராஜனின் மனைவி ஆவார். 30 ஆண்டுகளுக்கு முன் காந்திமதி ராஜன் இறந்து போனார். இவர்களுக்கு குழந்தை கிடையாது. அரசு நிதி உதவியை பெற்றுக்கொண்டு பட்டம்மாள் தனியாக வாழ்ந்து வருகிறார்.
தினமும் அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று, கோயில் வளாகத்தில் உள்ள பூந்தோட்டத்தில் பூக்களை பரித்து சாமிக்கு சாத்துவது பட்டமாளுக்கு வழக்கம்.
அதேபோல் இன்று (01.07.2010) காலை 6.30 மணி அளவில் பூப்ரிக்க கோயில் பூந்தோட்டத்திற்கு சென்றார். எப்போதும் 8 மணிக்கு வீடு திரும்பும் பட்டம்மாள், இன்று காலை 11 மணி ஆகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரைத் தேடி கோயில் பூந்தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு உள்ள பூச்செடியின் கீழ் பட்டம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எஸ்.பி. பாண்டியன் தலைமையிலான போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்துள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் பார்வையிட்டார். இறந்த பட்டம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பட்டம்மாள் அணிந்திருந்த 20 பவுன் நகைக்காக, மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதே கோணத்தில்தான் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்று வரும் பூஜைகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோயில் நிர்வாகம் கூறியதாவது, கொலை நடந்துள்ளதால் பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், தினசரி பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
News:
கோவிலில் கொலை!
Thursday, 01 July 2010 16:03
திருவண்ணாமலை பவளகுன்று ஒத்தவாடை தெருவை சேர்ந்த 65 வயதான பட்டம்மாள் தினமும் காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் 5-ம் பிரகாரத்தில் உள்ள பூந்தோட்டத்தில் பூ பறிக்க செல்வார். அந்த பூக்களை விநாயகர் கோவிலில் வைத்து பூஜை செய்வது அவரது வழக்கம்.
இன்று காலை பூபறிக்க சென்ற பட்டம்மாள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர் தேடி சென்று பார்த்தபோது கோவிலின் பூந்தோட்டத்தில் அவர் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் இருந்தது.
இந்த தகவல் திருவண்ணாமலை முழுவதும் பரவியது. உடனே பொதுமக்கள் கோவிலுக்குள் திரண்டனர். கலெக்டர் ராஜேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், டி.எஸ்.பி. வைத்திலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
கொலை செய்யப்பட்ட பட்டம்மாள் குறைந்தது 15 பவுன் நகை போட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் உடலில் நகைகள் எதுவும் இல்லை. காதில் கம்மல் மட்டும் உள்ளது. அவரை மர்ம ஆசாமி கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான். அவர் தினமும் கோவிலுக்கு வருவதை நோட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளான்.
எந்த நேரமும் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் திருவண்ணாமலை கோவிலுக்குள்ளேயே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment