கடந்த நூற்றாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல அற்புதங்களை செய்தவர் பூண்டி மகான். அண்ணாமலையே அனைத்து சித்தர்கள், ஞானிகள் போன்ற இறையருள் அம்சத்தினர் அனைவருக்கும் புகழிடமாக உள்ளது.
இவர் யார் எங்கிருந்து வந்தார் என்றேல்லாம் யாருக்கும் தெரியாது. இவரின் அன்பும் தீட்சண்ய பார்வையும் இவரை மகான் என மக்களுக்கு அடையாளம் காட்டியது.
ஒருமுறை ஊரில் மழை தண்ணீர் இல்லாமல் வானம் பொய்த்து விட்டது ஊர்மக்கள் ஒன்று கூடி மகானிடம் இது பற்றி கேட்கவேண்டும் என கிராம முன்சீஃப் முடிவெடுத்தார். திடீரென இரவு தூங்கபோகும்போது அவரிடம் எப்படி கேட்பது .
அவர் தியானத்தால் மழை பெய்யுமா? அவருக்கு அந்த அளவு ஆற்றல் இருக்கிறதா? உண்மையிலேயே அவர் சித்தர்தானா? என்று பலவாறு சிந்தித்த வண்ணம் தூங்கிவிட்டார். நள்ளிரவு…, ஆழ்ந்த தூக்கத்திலிருந்த போது, யாரோ கன்னத்தில் மென்மையாக தட்டுவது போல் உணர…, எதிரே மஞ்சள் நிற ஒளியோடு மகான் நின்றிருந்தார்.
‘’என்ன முனிசீப்.., இந்த மகான் நிஜமாகவே சித்தனா? இவனுக்கு அந்தளவு சக்தி இருக்கா! இவன்கிட்டே போய் கேட்டா மழை பெய்யுமான்னு நினைக்கிறியா? கேட்டார். இது கனவா… நிஜமா என்று உணர்ந்திடும் நிலையில்லாத முன்சீப் இருந்தார்.
”ஐயா…, தப்பாக நினைக்க வேண்டாம். நீங்கள் கடவுள் என நான் நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்..’பணிந்து வேண்டினர்.
பெரிய வார்த்தைகள் எல்லாம் பேச வேண்டாம் என சொல்லிவிட்டு மகான் மறைந்து விட்டார்.
காண்பது கனவு போலவே முன்ஷீப்புக்கு தெரியவில்லை அடுத்த சில நிமிடங்களில் லேசாக தூறல் விழ ஆரம்பித்தது. அடுத்த சில விநாடிகளில் ‘பளீர்’ என்று மின்னல் வெட்டி மழை வலுக்க ஆரம்பித்தது. கொஞ்ச கொஞ்ச வலுத்த மழை பேய் மழையாகி, இடி மின்னலுடன் பெரும் மழையாகியது.
இதை பார்த்து ஊரே வியந்தது.
இவர் இப்பகுதிகளில் அலைந்து திரிந்து மக்களுக்கு எளிய போதனைகளையும் மக்களுக்கு கடவுள் வழிபாட்டின் நன்மைகளையும் விளக்கி பல அற்புதங்களை செய்தவர். உலக சிந்தனையின்றி ஒரு சுவாமியாருக்கு உரிய லட்சணத்தோடு இப்பகுதிகளில் இப்பகுதி மக்களால் போற்றப்பட்டவர் சுமார் 48 ஆண்டுகளுக்கு முன் கலசப்பாக்கம், குருவிமலை உள்ளிட்ட இப்பகுதியில் வாழ்ந்து ஜீவசமாதியானவர் இவர்.
1978ம் ஆண்டில் பூண்டியில் ஜீவசமாதியானார் சுவாமிகள். இங்கு இவருக்கு கோவிலும்கட்டப்பட்டுள்ளது இங்கு சென்று நாம் ஆத்மார்த்தாமாக வேண்டினால் ஜீவசமாதியில் ஜீவனுடன் இருக்கும் பூண்டி சுவாமிகள் நம்மை துன்பம் துயரத்தில் இருந்து காப்பார் என்பது நம்பிக்கை..
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் என்கிற நகருக்கு மேற்கேயுள்ள கலசபாக்கதில் இருந்து 3 கி.மீ தொலைவில் இவரது ஜீவசமாதி உள்ளது.
No comments:
Post a Comment