Translate

Friday, April 30, 2010

மருத்துவ குறிப்புகள்

பற்களை பாதுகாக்க சில யோசனைகள்:
சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும்.

சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங்களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத்தீனீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்துவிடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும்.

உணவு வேளையில் நீங்கள் உண்ணவேண்டிய கடைசிப்பொருள் நறுக்கப்பட்ட பச்சைக்காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும்கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம்.

காலையில் மட்டும் பல்துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வெளையும் பல் துலக்க வேண்டும்.

சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதனால் சாப்பிட்டவுடன் பல் தேய்ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும்.

காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், இரவு படுக்கும் முன் பல் தேய்ப்பதும் முக்கியம்.

பல் தேய்க்கும் போது பல்லில் மட்டும் கவனம் செலுத்தினால் பத்தாது. ஈறுகள், நாக்கு இவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். பல்லை விட இவை மிருதுவானவை என்பதால் பல்லில் காட்டும் வேகத்தை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது.

ஃபிளாஸ் (குடடிளள) செய்வதால் பற்களின் இடையே உள்ள பொருட்களையும் சுத்தம் செய்யலாம். இதை செய்வதால் வாய் துர்நாற்றத்தை போக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்றால், உபயோகித்து முடித்தவுடன் ஃபிளாஸை முகர்ந்து பார்க்கவும்!!! அதன்பிறகு ஒரு நாளும் ஃபிளாஸை மறக்க மாட்டீர்கள்.

பல் தேய்த்த பிறகு மவுத்வாஷால் வாயை கொப்பளிப்பதால் நீண்ட நேரத்திற்கு துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

அஜீரணம், பசி, இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். அதனால் சாப்பாட்டில் கவனம் செலுத்தவும், ஒரே நேரத்தில் முடிந்த வரை சாப்பிடாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய அளவில் சாப்பிடுவது சிறந்தது. சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீராவது குடிக்கவும். இது அஜீரணமும் பசியும் ஏற்படாமல் தடுக்கும்.

மூக்கடைப்பு, சளி இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். நறுமண மென்த்தால் மாத்திரைகள் இதற்கு உதவும்.

இவற்றை எல்லாம் செய்த பிறகும் வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும். சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களாலும் இந்நிலை உருவாகலாம்.

இங்கே சில பொருட்களின் தன்மைகள்
உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்
ருசியின்மையைப் போக்குபவை
புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி
சிவப்பணு உற்பத்திக்கு
புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை
மருந்தை முறிக்கும் உணவுகள்
அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்
விஷத்தை நீக்கும் உணவுகள்
வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்பித்தம் தணிப்பவைசீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம் நீங்கும்.
தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அண்டாது.
பொன்னாங்கண்ணி கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். உடம்பில் உள் சூடும் குறையும். இக்கீரையின் தைலத்தை தலை முழுகப் பயன்படுத்தி வந்தால் கண் நோய் அண்டாது. உடல் சூடு தணியும்.
அரைக் கீரை தைலமும் உடல் சூட்டைத் தணிக்கும்.
பாகற்காய் வற்றலை உணவுடன் உண்டு வந்தால் மூலம், காமாலை நோய் தீரும்.

ஹோட்டல்களில் சாப்பிடுவதால் ஏற்படும் நாக்குப் பூச்சித் தொல்லை, சிறுவர்களுக்கு ஏற்படும் வயிற்றுப்பூச்சித் தொல்லை நீங்க சுண்டைக்காயை உணவுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
இரவு உணவில் சுண்டைக்காய் வற்றலை சேர்த்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, காச நோய் நீங்கும். வயிற்றுப் போக்கும் நிற்கும்.
கற்கண்டு, இஞ்சி சாறு சேர்த்து அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
இஞ்சி ஊறுகாய் ஜீரணத்துக்குப் பயன்படும். பித்தத்தைத் தணிக்கும்.
மருதாணி இலையை எலுமிச்சைச் சாற்றில் கலந்து அரைத்து கட்டினால் குதிகால் வாதம், பாத எரிச்சல் தீரும்.
வெள்ளை கரிசலாங் கண்ணி தைலத்தைத் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறுக்கும்.
கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழா நெல்லி ஆகிய இலைகளை சம அளவில் அரைத்து பாக்கு அளவில் எடுத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
கீழாநெல்லி செடியின் வேரை பசுமையாக 20 கிராம் எடுத்து அரைத்து பால், தயிர், மோர் என ஏதாவது ஒன்றுடன் கலந்து பருகினால் கை, கால் வலி நீங்கும். தேனில் கலந்து பருகி வர அம்மை நோய் தணியும்.
அரச இலையை அரைத்து பூசி வந்தால் கால் வெடிப்பு, ரணம் குணமாகும்.
அகலில் வேப்பெண்ணெயை விட்டு இரவில் எரித்து வந்தால் கொசுக்கள் பறந்துவிடும்.
துளசி இலையை வாயில் போட்டு மென்று தின்றால் பல் வலி, கூச்சம் நீங்கும். சில இலைகளைக் கசக்கி முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு நீங்கும்.
பிஞ்சு வில்வக் காயை அரைத்து தயிரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, ரத்த பேதி குணமாகும்.
அறுகம்புல்லை அரைத்து காய்ச்சிய பாலில் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் ரத்த மூலம் நிற்கும்.
வேப்பிலையை அரைத்து கட்டி வந்தால் ஆறாத ரணமும் ஆறும். உடையாத பழுத்த கட்டியும் உடையும்.
வேப்பங்கொட்டையினுள் உள்ள பருப்பை மை போல் அரைத்து வெந்நீரில் கலந்து குடித்தால் நஞ்சு நீங்கும்.

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா?
ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்.
ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன்,சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை...
இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள்.
தினமும் இரவு தூங்கப் போகும்போதுபருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

மனித உயிருக்கு உத்திரவாதமில்லை. நேற்று இருந்தவர் இன்றில்லை.
“10 நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக் கொண்டிருந்தவர், திடீரென
போய் விட்டாரே. இன்று காலை கூட என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
இறந்து விட்டதாக செய்தி வருகிறதே. நேற்று நன்றாக நடமாடிக்
கொண்டிருந்தவர் இன்று பக்கவாதம் தாக்கி முடமாகி விட்டாரே’ என்று
பலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கெல்லாம்
காரணம் என்ன? ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான்
காரணம்.இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள்
ஏற்படும்போது அது மாரடைப்பாக உயிரை மாய்க்கிறது. மூளைக்கு
செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது
பக்கவாதமாக பரிமாண மெடுத்து மனிதனை முடக்கி விடுகிறது.துடிக்கும்
மனித இதயம், மனிதனுக்கும் வாழ்வை வழங்குகிறது. மனிதன் வாழ
வேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடித்தே ஆக
வேண்டும். இவ்வாறு துடித்து துடித்து மனிதனுக்கு வாழ்வை வழங்கும்
இதயம் துடிப்பதற்கு சக்தி தேவை. அந்த சக்தி இதயத்திற்கு செல்லும்
ரத்த குழாய்கள் மூலம்தான் இதயத்திற்கு கிடைக்கிறது. இந்த ரத்த
நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் ரத்தம்
தடைபடுகிறது. இதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதனை
போல் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்புகள்
ஏற்படும்போது அது பக்கவாதமாக, பரிமாணம் எடுத்து மனித வாழ்வை
சீர்குலைக்கிறது.
இதயத்திற்கும் மூளைக்கும் ரத்தம் மற்றும் தேவையான
சத்துக்களை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தை போலவே
சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் ரத்த
ஓட்டம் நடைபெறுகிறது.
ரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய “நைட்ரிக் ஆக்சைடு’ என்ற
ரசாயன பொருள் உதவுகிறது. இது நமது உடலிலேயே உற்பத்தி ஆகும்
பொருள். இதுதான் ரத்த குழாய்களுக்குள் சென்று அவற்றை சுருங்கி
விரிய உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும், குருதியில் கொழுப்பு
சத்து மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது
“நைட்ரிக் ஆக்சைடு’ சுரப்பது குறைகிறது. மேலும் மன இறுக்கமும்,
மனக்கவலையும் கூட நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை கெடுக்கிறது. புகை
பிடிப்பது, மது அருந்துதல், அசைவ உணவுகளை அதிகளவு உட்கொள்வது
போன்றவை கூட இந்த நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை குறைக்கிறது.
நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கி
விரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படிய
தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால்
மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட
வாய்ப்பாகிறது.

ரத்தக்குழாய் அடைப்புகள் வராமல்
தடுப்பது எப்படி?

ரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு
அதை சீராக வையுங்கள். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய்,
எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற் றை
தவிர்த்திடுங்கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள். மதுபாட்டில்களை
காலி செய்வதை நிறுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளையும்,
நெய்யால் செய்த பண்டங்களையும் குறையுங்கள். உப்பு அளவோடு
சேர்த்துக் கொள்ளுங் கள். இனிப்பான பழங்கள்,
கிழங்குகள்,பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்தல்
கூடாது.இவற்றை விட மேலானது உடற்பயிற்சி. நாள்தோறும் காலை, மாலை
அரை மணி நேரம் நடைபயிற்சியை மேற் கொள்ளுங்கள். சைக்கிள்
ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உணவு
வகைகள் அதிகம் உட்கொள்வதை குறையுங்கள். உங்கள் இதயம் பாதுகாப்பாக
இருக்கும்.

இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு:
சோகைஎன்றதும், பல வகையான மாத்திரைகளை முழுங்கி வருவார்கள். ஆனால் அதற்கு இயற்கையின் வரப்பிரசாதமான தேன் தான் நிரந்தர தீர்வை அளிக்கும் மருந்தாகும்.

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப் பிரித்து உட்கொள்ள வேண்டும்.

ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.

பல் போனால் சொல் போகும்

'பல் போனால் சொல் போகும்' என்ற பழமொழியே நமது பல்லின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அப்படிப்-பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாகப் பராமரிக்கத்தான் வேண்டும். இதோ, பல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற வழி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணர், டாக்டர் டி.பி.மகேந்திரன்.

''குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை 'நர்ஸிங் பாட்டில் கேரீஸ்' (nursing bottle caries) என்று அழைக்கிறோம்.

குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.

பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறா£க இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.

சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.

பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.''


புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட ஆயுள்: நீண்ட நாள் வாழலாம் என பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. புகைபிடிக்காதவர்கள் உடல்நிலை குறித்து ஓஸ்லோ பல்கலைக்கழகமும், நார்வே பொதுசுகாதார நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது.

முப்பது ஆண்டுகளாக நார்வே நாட்டு மக்களில் புகைப்பழக்கம் உள்ள நடுத்தர வயது ஆண், பெண்களிடம் 1974 முதல் தொடர்ந்து நடத்திய ஆய்வில், புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழமுடியும் என்றும், இவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரியவந்துள்ளது.

ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஓஸ்லோ பல்கலைக்கழக ஆசிரியர் ஹாகோன் மேயர் புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த படத்தினை வெளியிட்டிருப்பதாகக் கூறினார்.

உடல் நலனை பாதிக்கும் மன நலம்உடல் நலன் பாதிக்கப்படுவதற்கு மன நலமும் ஒருவகையில் காரணமாகிறது. மன நலனை கவனிப்பதில் அலட்சியமாக இருக்கக் கூடாது.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் நன்கு சம்பாதிக்கவோ, சம்பாதித்ததை அனுபவிக்கவோ முடியும்.

உடல் ஆரோக்கியதுக்கும் மன நலனுக்கும் தொடர்பு உண்டு. மனம் பாதிக்கப்பட்டால் உடல் நலனையும் அது பாதிக்கச் செய்யும். மன நல பாதிப்பை கீழ் கண்ட அறிகுறிகளைக் கண்டு நாம் அறிந்து கொள்ள முடியும்.

டென்ஷனுடன் பற்களைக் கடித்தல், மூச்சுத் திணறல், பசி எடுக்காமை, உயர் ரத்த அழுத்தம், நெஞ்சடைப்பு போன்ற உடல் ரீதியான பாதிப்புகள் சாதாரணமாக ஏற்பட்டால் பிரச்னை இல்லை.

எவ்வித காரணமும் இன்றி இவை ஏற்படுமானால் மன நலன் பாதிக்கத் தொடங்கி இருப்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இதேபோல் அடிக்கடி கவலை, எதையும் சிந்தித்து முடிவெடுக்க முடியாமை, தேவையில்லாமல் கோபம் வருதல், சோர்வாக இருத்தல், தற்கொலை எண்ணங்கள் மேலோங்குதல் போன்றவை, மன நலன் பாதிக்கப்பட்டுள்ளதற்கான மன ரீதியான அறிகுறிகள் ஆகும்.

சின்ன ஒரு விஷயம் கூட பெரிய மனநோயாக மாறுவதற்கு காரணமாக அமையலாம். இது தோன்றி வெளிப்படையாகத் தெரிய ஒரு ஆண்டு கூட ஆகலாம்.

எப்படி போக்கலாம்?

மன நோய்க்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக அமைகிறது. மன அழுத்தம் அதிகம் ஏற்பட்டால் தினசரி வேலைகள், அலுவலம் ஆகியவற்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விடுமுறையில் பிடித்த இடங்களுக்குச் செல்லலாம்.

தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபாடு இருந்தால் அவற்றில் நாட்டம் செலுத்தி, மன அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்கலாம்.

புத்தகம், பாடல், ஓவியம் போன்ற ஏதேனும் ஒன்றில் நாட்டம் இருக்குமானால் அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி புத்துணர்வு பெறலாம்.

தினசரி வேலைகளை ஒரே மாதிரி வேலைகளை செய்து வராமல் அவ்வப்போது பல மாற்றங்களைச் செய்யலாம். தனிமையே கதி என்று இருக்காமல் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று மனம் விட்டு பேசி, மன இறுக்கத்தைக் குறைக்கலாம்.

எனினும் தொடக்கத்திலேயே நல்ல மனநல மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப் படி நடப்பது இந்நோயைத் தடுக்க சிறந்த வழியாக இருக்கும்.

வெகுதூரம் வாகனங்களில் பிரயாணிப்பவரா? புற்றுநோய்-கருச்சிதைவு அபாயம்
ஆய்வக பரிசோதனைக்குட்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனத்திலிருந்து உருவாகக்கூடிய ஒருவித வாயுவை கண்டுள்ளனர். அதாவது வாகனத்தின் இருக்கை மற்றும் இருக்கையின் உறை ஆகியவை ஒரு வகையான வாயுவை வெளிப்படுத்துகிறது.

அதுவும் உஷ்ணநிலை அதிகபட்சம் 6 டிகிரியில் இந்த வாயு உருவாகிறது. இந்த வாயுவை உட்கொள்ளும்போது இது ரத்தத்தையும், எலும்பையும் தாக்குகிறது. இதன் மூலம் இரத்தத்தில் வெள்ளையணுவை குறைக்கிறது. வெகுதூரம் பயணம் மேற்கொள்ளும்போது புற்றுநோய், கருச்சிதைவு போன்ற பேராபத்தும் உண்டாகின்றது. இந்த ஆபத்திலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் நிறுத்தப் பட்டிருக்கும் வாகனத்தை இயக்குவதற்கு முன் வாகனத்தின் பக்க கண்ணாடிகளை திறந்து விட்டு சிறிது நேரம் சென்றவுடன் மூடிக்கொள்ளலாம்.

சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு

மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

எந்த அளவுக்கு நமக்கு உழைப்பு முக்கியமானதோ, அதே அளவுக்கு போதிய ஓய்வும் (தூக்கம்) முக்கியம். அப்போதுதான் நாம் தொடர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் பணிசெய்ய இயலும்.

ஒருவர் போதிய தூக்கம் இன்றி தவித்தால், அவரால் மறுநாள் தனது பணியில் கவனம் செலுத்த முடியாது.

தூங்கும் நேரத்தின் அளவு குறைந்தாலும், ஆழ்ந்த தூக்கத்தின்போது, இடை இடையே தொந்தரவுகள் ஏற்பட்டு தூக்கம் கலைவதாலும் நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.

ஒருநாள் தூக்கத்தை இழப்பவர்களுக்கு, மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் என்னும் பகுதி பாதிப்புக்குள்ளாவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 60 வயதிலும் ஆரோக்கியமாக திகழும் 13 பேரிடம் ஆய்வு நடத்தினர். ஆழ்ந்த தூக்கம் மற்றும் லேசான பாதிப்புடன் கூடிய தூக்கம் போன்ற நிலைகளில் அவர்களிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

உடல் பருமன், மன அழுத்தம், அதிக வெளிச்சம், சுற்றுப்புற ஒலி போன்ற பல்வேறு காரணங்களால் நிம்மதியான தூக்கம் பாதிக்கப்படலாம்.

பல்வேறு நிலைகளில் தூக்கம் பாதிப்புக்குள்ளானவர்களின் நினைவாற்றல் குறித்து பரிசோதிக்கப்பட்டதில், தூக்கம் கலைந்தவர்களின் நினைவுத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

ஆனால், ஆழ்ந்த தூக்கம் கொண்டிருந்தவர்களின் நினைவாற்றல் நல்ல முறையில் இருந்தது.

எனவே, இரவில் அதிகநேரம் விழிந்திருந்து மறுநாள் சோம்பலாக இருப்பதை விட, போதிய நேரம் தூங்கி எழுந்தால், மறுநாள் மிகவும் சுறுசுறுப்பாக பணிபுரியலாம்.

தொண்டைக்கட்டு சரியாக என்ன சொய்யலாம்?
மாவிலையின் கொழுந்தைக் கொண்டு வந்து கருகி விடாமல் வறுத்தெடுத்து, பொடியாக்கி அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து கால் ஸ்ப+ன் அளவு காலை மாலை சாப்பிட்டு வந்தால்,ஒரே நாளில் தொண்டைக்கட்டு சரியாகி விடும்.
சளித்தொல்லை நீங்க
துளசிச் சாறு ஓர் அவுன்ஸ் தினசரி குடித்து வந்தால் சளித்தொல்லை தலை காட்டாது ஓடிவிடும்.மூக்கில் நீர் வடிந்தால் ஜாதிக்காயை நீர்விட்டு உறைத்து மூக்கின் மேல் பற்றுபோட்டால் நீர் கசிவது நின்றுவிடும்.குழந்தைகளுக்கு சளிபிடித்திருந்தால் துளசிச் சாறும் தூதுவளைச் சாறும் சமபங்கு கலந்து காலை மாலை ஒரு தே.கரண்டி கொடுத்தால் சளி கரைந்துவிடும்.பெரியவர்கள் தூதுவளை,ஆடாதோடைக் கீரைகளை சாப்பிட்டால் சளித்தொல்லை நின்றுவிடும்.
பல் பராமரிப்பு
பல் பராமரிப்பிற்கான ஒழுங்கு முறைகள் வருமாறு:-
1. சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.


2ஃபுளொரைட்டு கலந்த பற்பசையை பயன்படுத்துங்கள்.

3. சிலருக்கு உமிழ்நீர் சுரப்பு குறைந்து காணப்படுவதால் வாய் வரண்டு போய் காணப்படும். இப்படிப்பட்டவர்கள் உமிழ்நீர்சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சர்க்கரைச் சத்து இல்லாத இனிப்புக்களை வாங்கி சாப்பிடலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
4. பற்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் மருத்துவரை ஆரம்ப நிலையிலேயே சந்திக்க வேண்டும்.
5. நீங்கள் ஏற்கனவே ஏதாவது மருந்து மாத்திரை சாப்பிட்டு தூரிகை வந்தீர்களேயானால் அதுபற்றி மருத்துவரிடம் முதலில் சொல்லுங்கள்.
6. தூரிகை பயன்படுத்துவதிலும் ஈறுகளை தேய்ப்பதிலும் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதுபற்றி மருத்துவரிடம் கூறுங்கள்.
பற்களின் பெருமை ஈறுகளின் வலிமையைப் பொறுத்தே அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கொலஸ்ட்ரோல் கட்டுப்பாடு
சற்று கவனமாக இருந்தால்,நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் கொலஸ்ட்ரோல் அளவைகட்டுக்குள் வைத்திருக்க முடியும். தற்போது பல்வேறு உணவகங்களில் குறைந்த கொலஸ்ட்ரோல்|,குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை பரிமாறுகின்றனர்.அப்படி இல்லாத பட்சத்தில் அற்த உணவு எந்த முறைகளில் தயாரிக்கப்பட்டது என்பதுபற்றி விவரத்தை அறிந்து கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் கீழ்க்கண்ட முறைகளில் தயாரிக்கபட்ட உணவுகளாக இருந்தால் அவற்றில்கொலஸ்ரோல் மற்றும் கொழுப்பு அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
1. வறுத்தது.
2. முறகலானது.
3. கொஞ்சமாக தண்ணீரில் வேக வைத்து மாமிசம் கலந்து தயாரிக்கப்படும் உணவுகள்
4. உபயோகமற்ற பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது.
5. வெண்ணெய் அல்லது பழுப்பு நிற ரொட்டித்துண்டுகளைச் சுற்றி சமைப்பது.
6. மெல்லிதாக இழைக்கப்பட்ட உருளைக்கிழங்கு துண்டுகளை கொழுப்பில் போட்டு வறுப்பது.
7 . பெரிய அளவிலான வான் கோழிகளை அப்படியே சமைப்பது.இவைகளுக்கு பதிலாக:-
1. வேக வைத்தவை.
2. பிரகாசமாக நெருப்பில் சமைத்தவை.
3. சூடான அடுப்பில் சமைக்கப்பட்பவை.
4. சூடான நீரில் சமைத்தவை.
5. புதிய உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
காற்றோடு கலந்து பரவும் விஷக் கிருமிகளைத் தன்பால் கிரகித்துக் கொள்கின்ற சக்தி வெங்காயத்துக்கு மட்டும் உண்டு. தினமும் அதிகாலை ஒரு வெங்காயத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வாழ்நாள் முழவதும் எந்த நோயும் அணுகாது.
உடலுக்கு உடனடியாக குளிர்ச்சியை உண்டு பண்ணுகிற சிறப்புச் சக்தி வெங்காயத்திற்கு உண்டு. வெங்காயத்தை 2 துண்டுகளாக வெட்டி முகர்ந்தாலும் வாயில் போட்டு சப்பினாலும் வாந்தியை தவிர்க்கலாம். தொற்று நோய் பரவியுள்ள இடங்களுக்குச் சென்றால் கொ}ஞ்சம் வெங்காயம் எடுத்து செல்வது நல்லது. நோய் கிருமிகள் நம்மைப் பாதிக்காது.
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாமா?
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் ஒரு பொருள் வெங்காயத்தை வெறுமனேருசிக்காக மாத்திரம் சேர்த்து வருகிறோம்.அது தவிர இதனைப் பற்றி சிறிதும் சிந்திப்பது கிடையாது.இது எப்படிப்பட்டது,இதனை மருத்துவக் குணங்கள் என்ன என்றெல்லாம் எடுத்து நோக்கும் பொழுது வெங்காயத்தின் மகிமையினை உணர்ந்து கொள்ளலாம்.
வெங்காயத்தைச் சாப்பிடும் பொழுது வேகவைத்துச் சாப்பிவதே மிகவும் சிறந்த முறையாகும். அதற்காகப் பச்சையாகச் சாப்பிடக் கூடாதென்பதல்ல.பச்சையாகச் சாப்பிடுகிறவர்கள் சிறிது நேரம் வீட்டில் தங்கிவிட்டு வெளியில் செல்வதாயின் செல்லவும்.காரணம் பச்சையாக சாப்பிட்டவர்கள், மற்றவர்களுடன் கதைக்கும் பொழுது வெங்காய வாடை வீசும்.
ஏனையோர் அவ்வாடையினால் வெறுப்படைய வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. ஏனென்றால், நூற்றுக்குத் தொண்ணூறு சதவீமானவர்கள் வெங்காய வாடையை வெறுப்பாகள்.
இவ்வெங்காயத்தினை காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும் பொழுது அவ்வுணவு வகைகள் தனிச்சுவை பொற்றுவிடுகின்றன்அது மட்டுமல்ல,இதன் மருத்துவக் குணங்களை எடுத்து நோக்குவோமானால் அது ஒன்றிரண்டு என மட்டுப்படுத்தி விட முடியாது.நிறையவே மருத்துவக் குணங்களை கொண்ட ஒன்று தான் வெங்காயம்.
இது பற்றி மருத்துவத்துiயினர் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றனர்.வெங்காயம் நச்சுக் கிருமிகளைக் கொல்லுவதுடன் உடற்பருமன் ஏற்பட்டு விடாமலும் பாதுகாக்கிறது.இதனைத் தொடர்ச்சியாக உண்டு வருகையில் உங்கள் குரல் வளம் இனிமை பெறும்.அழகிய குரல் வளம் பெற விரும்புகின்றவர்கள் மேற் கூறிய விடயத்தைக் கைக்கொள்ளலாம். கிராணி, விஷக்கடி, குழிப்புண் ஆகியவற்றையும் குணமடையச் செய்வதுடன்,பித்தத்தையும் தணியச் செய்யும் குணமும் இதற்குண்டு மூளை சுறுசுறுப்பாக இயங்கவும்,காக்கை வலிப்பு போன்ற கெட்ட நோய்கள் நீங்கவும்,வெங்காயம் வழி சமைக்கின்றது.
காலையில் ஒன்று அல்லது இரண்டு வெங்காயங்களைத் தனியாகவோ உண்வுகளுடனோ சோர்த்து உண்டு வந்தால் அன்று முழுவதும் உஷ்ணம், வேறு பிணிகள் எம்மை எட்டிக்கூடப்பார்க்க மறுக்கும். கோடை காலத்தில் ஒரு வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டால்,மயக்கம் போன்ற தன்மைகள் எம்மை அணுகாது என மருத்துவர்கள் கருத்துரைக்கின்றனர்.
வெங்காயச் சாறு பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்தாகும். இதனைத் தொடர்ச்சியாக உண்டு வந்தால் பக்கவாதம் ஏற்படாமல் தவிக்க முடியுமென இந்தியாவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஒன்று அறிவித்துள்ளது.
குறிப்பாக புகைபிடிப்பவர்கள் வெங்காயத்தை நாட வேண்டும். காரணம், இப்பழக்கத்தினால் நுரையீரல்,இதய நோய்கள் ஏற்படுகின்றன. நச்சுப் பொருளால் இரத்தம் கெடுகின்றது. இவ்வாறன புகைப் பழக்கத்தையுடையவர்கள் வெங்காயத்தை உண்டு வரலாம்.
இவ்வாறு உண்பதால் புகைப் பழக்கத்தாலேற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும். மொத்தத்தில் வெங்காயம் ஒரு உணவுப்பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும் இருந்து வருகின்றது.

மருத்துவ குறிப்புகள்

பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள்

மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.
ஈறு நோய்கள்:

பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடியது பற்களைச் சுற்றியுள்ள ஈறுதான். பொதுவாக ஈறுநோய் வருவதின் முதல் கட்டம் நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் ஆகும். இயற்கையாகவே பல் ஈறுக்கும் பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும். அதுவே ஈறு வியாதியால் பாதிக்கப்பட்டால் பெருமளவு ஆழமாகி ஒரு பை மாதிரி ஆகி அதில் நிறைய பாக்டீரியாக்களும், பாக்டீரியாவால் வெளி வரும் விஷப் பொருட்களும் மற்றும் ஈறுடன் அழுகிய சில பாகங்களும் உமிழ் நீரும் அடங்கி ஒரு பள்ளம் ஆகிறது. அதில் உற்பத்தியாகும் பொருட்கள் மூலம்தான் பற்களின் ஈறு மட்டும் அல்லாமல் பல் பிடிப்பிற்குக் காரணமாக இருக்கும் எலும்புகளும் மற்றும் லிக்மண்டுகளும் பாதிக்கப்பட்டு பற்களில் அசைவு ஏற்பட்டு முடிவாக தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த வகையில் வியாதிகள் ஈறுகளில் ஏற்படும் பொழுது இரத்தம் கசிதல், வாயில் உள்ள உமிழ் நீர் ஒரு திரவம் போல் சமயங்களில் வாய், தாடை போன்றவற்றில் கடைசி வரை பரவுதல் போன்றவைகளாகும்.
பொதுவாக் பிளாக் (Plaque) என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படருகிறது. இது சாதாரண வெண்படலம் அல்ல. இந்தப்படலம் முழுவதும் விஷக்கிருமிகள் உள்ளன. அதை வளர விடுவதால் தொடர்ந்து அது கெட்டியாகி காரையாக மாறிவிடுகிறது.

ஈறு நோய்க்கான சிகிச்சை
வருடத்திற்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்து கொள்வதுடன் பற்காரை அகற்றி பற்களை பாதுகாக்க வேண்டும். மேலும் Ultra Sonic Scaler என்ற நவீன கருவி மூலம் பற்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.
பல் சொத்தை
பற்களில் ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள் வளர வழி வகுத்து பல் அரித்து பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. பற்கூழைப் பாதிக்கும் பொழுது வலி ஏற்படுகிறது.
பல் சொத்தைக்கான சிகிச்சை
சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது. முன் பற்களில் ஏற்படும் சொத்தையை காம்போசிட் எனப்படும் பல்லின் நிறம் கொண்ட சிமெண்ட்டினால் அடைப்பதால் பாதிப்பில்லாமல் பல்லின் அழகு பாதுகாக்கப்படும்.
பல்சீரமைப்பு
பொதுவாக முன் பல் தூக்கலாக இருப்பதற்குக் காரணம் குழந்தை சிறு வயதில் உள்ளபோது விரல் சூப்புவதாலும், பால் பற்கள் விழுந்து முளைக்கும் போது நாக்கினால் முன் பல்லைத் தள்ளுவதாலும், வாய் திறந்தே தூங்குவதாலும் ஏற்படுகிறது. ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
பல் சீரமைப்புக்கான சிகிச்சை
பொதுவாக கிளிப்புகள் மூலம் வெளியில் தூக்கலாகத் தெரியும் பல் சரி செய்து பொருத்தப்படுகிறது. அதனால் பற்கள் சரியான இடத்திற்குத் தள்ளப்படுவதால் பல்வரிசை சீராக அமையும்.
பற்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

பற்களில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது.
பல் சொத்தை, பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை (RCT) மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.
பல் சொத்தையால் வலி ஏற்படும் போது பொடி, புகையிலை, கற்பூரம் போன்றவைகளை வைப்பதால் அது நாளடைவில் புற்றுநோய் வருவதற்கு ஏதுவாகிறது. எனவே, இதைத் தவிர்க்க வேண்டும்.
வாயில் ஏற்படும் கட்டி, புண் முதலியவற்றைப் பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்.

மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருப்பது மாறுகண் எனப்படும்.
சிலருக்கு மாறுகண் எப்போதும் இருக்கும் மற்றும் சிலருக்கு அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.
மாறுகண் உடைய குழந்தைகள் பார்க்கும் போது, ஒரு கண் நேராகவும், மறு கண் உட்புறமோ, வெளிப்புறமோ, மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ இருக்கலாம்.
உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் சோம்பலுற்ற கண் என்ற நிலை உருவாகி நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தும்.
மாறுகண்ணின் காரணங்கள்

பரம்பரையாக வருதல்
கண்தசைகள் பாதிக்கப்படுதல்
கண் தசைகளுக்கான நரம்பில் கோளாறு ஏற்படுதல்
கண்புரை, கருவிழி பாதிப்பு, கண் விழித்திரை கோளாறு, கண் நரம்பு கோளாறு, புற்று நோய்க் கட்டிகள், தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவற்றால் ஏற்படும் குறைவான பார்வை
காயம்படுதல்
அறிகுறிகள்

ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருக்கலாம்.
பார்வையில் குறைபாடு இருக்கலாம்.
பிரகாசமான வெளிச்சத்தில் ஒரு கண்ணை மட்டும் மூடிப் பார்க்கக் கூடும்.
இரண்டு கண்களையும் இணைத்துப் பார்க்க முயற்சிக்கும் போது தலையைச் சாய்த்தோ அல்லது திருப்பியோ பார்ப்பது போன்ற அறிகுறிகளும் சில சமயங்களில் தென்படலாம்.
சில சமயங்களில் பார்க்கும் பொருள் இரண்டாகத் தெரியலாம்.


மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியல்ல. அது உங்கள் குழந்தையின் பார்வையையும் தோற்றத்தையும் பாதிக்கும்.
சிறு குழந்தைகளுக்கு மாறுகண் இருந்தால் இரண்டு வயதிற்குள்ளேயே உரிய சிகிச்சை அளித்தால் நிரந்தரமான பார்வை இழப்பைத் தவிர்க்கலாம்.
குழந்தை வளர்ந்த பிறகு, சிகிச்சை மூலம் வெளித்தோற்றத்தை மட்டுமே சரி செய்யலாம். இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியாது.
நிரந்தர பார்வையிழப்பைத் தவிர்க்க சிகிச்சை முறைகள்

1. தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வையால் ஏற்படும் மாறுகண் உள்ளவர்களுக்கு தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம்.
2. கண்களுக்கு பயிற்சி: மாறுகண் இல்லாத நல்ல பார்வையுடைய கண்ணை மறைத்து, மாறுகண் உடைய கண்ணால் பார்க்க வைப்பதன் மூலம், அந்த கண்ணின் பார்வையை மேம்படுத்தலாம். 3. அறுவை சிகிச்சை:

நல்ல கண்ணை மூடி, மாறுகண்ணால் பார்க்க வைக்கும் பயிற்சி மற்றும் தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம், பார்வை மேம்பட்ட பிறகு மாறுகண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் .
மயக்க மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு, அந்த சமயத்தில் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவை இருக்கக் கூடாது.
ஒரே சமயத்தில் இரண்டு கண்களிலுமோ அல்லது ஒரு கண்ணில் மட்டுமோ அறுவை சிகிச்சை செய்யலாம்.
விழி வெண்படலத்தில், அதாவது விழிக்கோளத்தின் வெள்ளைப் பகுதியில்தான் அறுவை சிகிச்சை செய்யப்படும்.
அறுவை சிகிச்சை முடிந்த பின் ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும்.
இந்த அறுவை சிகிச்சை செய்வதோடு சிகிச்சை முடிந்து விடுவதில்லை. தெளிவான பார்வையைப் பெறத் தொடர்ந்து கண்ணாடி அணிய வேண்டியிருக்கலாம். நல்ல நிலையில் உள்ள கண்ணை மறைத்து, மாறு கண்ணால் மட்டும் பார்க்க வைக்கும் பயிற்சியை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் நீடிக்க வேண்டியிருக்கலாம்.

தொழு நோய்...

தொழு நோய் மைக்கோபேக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான கண்ணுக்குத் தெரியாத கிருமியால் உண்டாகிறது. இதை 1873-ல் டாக்டர் ஹேன்ஸன் என்பவர் கண்டுபிடித்தார்.

சாதாரணமாக இது மனிதரின் மூலமே பரவுகிறது. தொழு நோய்க்கான சிகிச்சை பெறாத அதிகக் கிருமியுள்ள நோயாளி தும்மும் போதும் , இருமும் போதும், காறித் துப்பும் போதும் வெளிப்படும் கிருமிகளாலேயே இந்நோய் பரவுகிறது. தொழுநோய்க் கிருமிகள் தாக்கியதற்கும், இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் சுமார் 3 வருடம் முதல் 5 வருடம் வரை ஆகும். இதை "Incubation Period" என்று கூறுவர்.

இது மற்ற தொற்று வியாதிகளைப் போல் எல்லோருக்கும் வருவதில்லை. உடலில் அதிக தடுப்புச் சக்தி உள்ளவர்களை அதிகமாகத் தாக்குவதில்லை. குறிப்பிட்ட அளவை விடக் குறைவான தடுப்பு சக்தி உள்ளவர்களுக்கே இந்நோய் வருகிறது. ஒவ்வொருவரின் தடுப்பு சக்திக்கேற்ப இந்நோயின் வீரியம் வித்தியாசப்படுகிறது.

தொழுநோயா எனச் சந்தேகிக்க உதவும் சில அறிகுறிகள்.

உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குறைந்த , வெளிர்ந்த அல்லது சிவந்த தேமல்... அந்தத் தேமல் மீது முடி உதிர்ந்து காணப்படுதல்
கை,கால்களில் மதமதப்பு அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருத்தல்.
தோல் தடித்தும் , எண்ணெய் பூசியது போன்ற தோற்றம்
உடலிலே ஏதாவது ஒரு பகுதியில் வியர்வை இல்லாமல் இருத்தல். அதே சமயம் உடலின் மற்ற பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வியர்த்தல்
காது மடல் தடித்திருத்தல்... கண் புருவமுடி உதிர்தல்
கன்னங்கள் தொங்குவது போன்ற நிலை.
சிங்க முகம் போன்ற தோற்றம் ( இது தற்போது சாதாரணமாகக் காணப்படுவதில்லை)
பாதங்களில் சாம்பல் பூசியது போல் காணப்படுதல் , பாதங்களில் பெரிய வெடிப்பு இருத்தல்
உள்ளங்கை சதை மேடுகள் சூம்பியிருத்தல்
கை, கால் விரல்கள் மடங்கியிருத்தல் , குறைந்திருத்தல், விரல்கள் திரும்பியிருத்தல்
கண்ணிமை மூட முடியாமலிருத்தல், கருவிழியிலே புண் இருத்தல்
முகத்தின் பாதி பாகம் (வலது அல்லது இடது) செயல் இழத்தல்
மணிக்கட்டு தொங்கி விடுதல்
கணுக்கால் செயலிழந்து போதல்
ஆறாத, உணர்ச்சியற்ற நீண்டநாள் புண்
சட்டையில் பொத்தான் போட முடியாமை , பேனாவைப் பிடித்து எழுத இயலாமை.

தொழுநோய் என உறுதி செய்ய
கீழ்க்கண்ட மூன்று அறிகுறிகளில் ஏதேனும் இரண்டைத் திட்டவட்டமாகக் கூற முடியுமானால் அதைத் தொழுநோய் என்று உறுதி செய்யலாம்.
1. உணர்ச்சியற்ற தேமல்
2. நரம்புகள் தடித்துக் காணப்படுதல்
3. தோல் பரிசோதனையில் மைக்கோ பேக்டீரியம் லெப்ரே கிருமிகள் காணப்படுதல்.
தோல் உணர்ச்சியின்மையைக் கண்டுபிடிக்க...

தொடு உணர்ச்சியை இறகு, பஞ்சு, நைலான் கயிறு போன்றவற்றின் மூலம் அறியலாம்.
வலி உணர்ச்சியை குண்டூசி ,பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றால் அறியலாம்.
பாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி இவற்றில் பரிசோதனைகள் செய்து இவ்விரண்டு பகுதிகளில் ஏற்படுகிற தொடு உனர்வு , வலியுணர்வு மாறுதல்களை வைத்து அறியலாம்.
தொழுநோய் என்ற சந்தேகம் வந்து விட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி அதற்கான சிகிச்சையைப் பெற்று விட வேண்டும்.

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோய் என்பது என்ன?
அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.
உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா?
கீழே இருக்கும் அறிகுறிகளையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் குறித்துக் கொள்ளுங்கள்.
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் – 4
2. எப்போதும் பசித்தல் – 2
3. தண்ணீர் அதிகமாகக் குடிப்பது – 4
4. எப்போதும் களைப்பாக இருக்கும் – 2
5. ஆறாத புண் – 2
6. பிறப்புறுப்பில் இன்பெக்சன் – 3
7. உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல் – 2
8. காரணமில்லாமல் எடை குறைதல் – 2
9. இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு - 2
10. மிகக் கூடுதல் எடை – 3
11. கால் மரத்துப் போய் உறுத்துதல் – 2
12. மங்கலான பார்வை – 2
நீங்கள் உங்களுக்காகக் குறித்துள்ள மதிப்பீட்டின் கூட்டுத் தொகை 7-க்கு அதிகமாக இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
நீரிழிவை கவனிக்காததால் ஏற்படும் விளைவுகள்
நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக,

பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம்.
சிறுநீரகங்கள் சேதமடையலாம்
இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்
காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.
உடலுறவில் இயலாமை ஏற்படலாம்
மூளைச்சேதமும் ,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.
நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால் ,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.
நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?
நீரிழிவு நோயின் சிகிச்சையில்
1. உணவுமுறை
2. உடற்பயிற்சி
3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல்
4. இன்சுலின் பயன்படுத்துதல்
இந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.
1. உணவு முறை

சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ- ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.
கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.
சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை, வெல்லம்,தேன்,ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
மீன்,கோழி , பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?
நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும் மருந்துகளையும் தெரிவிக்கலாம்.
நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்
உங்கள் மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.

இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி... அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி... குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.

வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, மூளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

அவர்கள் மேலும் கூறும்போது, சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால்தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.

நீங்களும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால்... பிரச்சினை உங்களுக்குத்தான்!

இளைய தலைமுறைக்கு..!
-சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் டென்ஷன் ஆகிறீர்களா?

- பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுகிறீர்களா?

- எதற்கெடுத்தாலும் மூக்கு நுனியில் கோபத்தை கொண்டு வருகிறீர்களா?'

இத்தனைக்கும் ஆம் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சியுங்கள். இல்லாவிட்டால் இளம் வயதில்கூட `ஹார்ட் அட்டாக்' வரும் அபாயம் உள்ளது.

ஆத்திரப்படும் போது `ஸ்ட்ரெஸ்' அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. அட்ரினலின் சுரப்பி அதிக வேலை செய்கிறது. அதனால் இதய தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. அப்படி கிடைக்காதபோது `ப்ளேட்லெட்ஸ்' என்ற பிசுபிசுப்பான திரவம் சுரந்து, ரத்தக்குழாய்களில் படிந்து, அதில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அஞ்சைனா என்ற மார்பு வலி, ரத்தக் குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும்.

உணவு மற்றும் பழக்க வழக்க முரண்பாடே இதய பாதிப்பிற்கு அடிப்படை காரணியாக இருக்கிறது. ஆனாலும், மன அழுத்தம் ஆகும்போதுதான் அதிக பாதிப்பு இதயத்தில் ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் போன்றவற்றால் ரத்த அழுத்தம் ஏற்படுபவர்களைவிட ஆத்திரம் மற்றும் டென்ஷன் அடைபவர்களுக்குத் தான் மன அழுத்தம் அதிகம். மற்ற இதயநோயாளிகளை விட `டென்ஷன் பார்ட்டிகளை' நான்கு மடங்கு அதிகமாக இதயநோய் தாக்கும்.

அமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும் வருவதில்லை. அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது. இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ முன்வர வேண்டும்.

சாப்பிட்டவுடன் கடினமான வேலையில் ஈடுபடலாமா?

திடமான உணவு சாப்பிட்டவுடன் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடக் கூடாது. இது உடலின் இயல்பான ஆரோக்கிய நிலையை பாழாக்கி விடும்.

வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, சாப்பிட்ட உணவு ஜீரணமாவதற்காக உடலின் பல பகுதிகளில் இருந்து, குறிப்பாக மூளைப் பகுதிகளிலிருந்து ரத்தம் இரைப்பையைச் சென்றடைகிறது. மேலும் அதன் காரணமாக மூளையிலும் பிற உடல் உறுப்புகளிலும் அயர்வு தோன்றும்.

இவ்வாறு உடலின் தலைமை உறுப்பான மூளையும், பிற உறுப்புகளும் அயர்வு கொண்டிருக்கும் நிலையில் பிடிவாதமாக கடினமான உழைப்பில் ஈடுபட்டால் உடல் உறுப்புகளின் இயல்பான செயலாற்றல் குன்றி, அவை நாளடைவில் செயல் திறனை இழந்து விடக்கூடும்.

வயிறார சாப்பிட்ட உடன் தூக்கம் தோன்றுவதற்கு இதுதான் காரணம் என்றும், வயிறு நிறைய உணவு உண்ட காலை சிறிது நேரம் தூங்கி எழுந்திருப்பது கூட நல்லது என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்களைப் பேணும் காய்கறிகள்:
நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.

வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

லிவர் சிரோசிஸ் - Liver cirrhosis:
மஞ்சள் காமாலைக்கான வைரஸ் கிருமிகள் ஹெபாடைடிஸ் பி வைரஸ் மிக கொடியது. ஆபத்தானது. லிவர் சிரோசிஸ் ஏற்பட இதுவே முக்கிய காரணம். லிவர் சிரோசிஸ் ஏற்பட மற்றொரு முக்கிய காரணம் மதுவகைகள் அருந்துதல் ஆகும்.

ஹெபாடைடிஸ் பி வைரஸ் காரணமாக ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்க்கு தற்போது தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்த தடுப்பூசி மூன்று கட்டமாக போடப்படுகிறது. ஹெபாடைஸ் பி வைரஸ் காரணமாக லிவர் சிரோஸிஸ் மட்டுமல்ல புற்று நோய் வரவும் வாய்ப்பு உண்டு.

லிவர் சிரோசிஸ் நோயின் போது -படி படியாக கல்லீரல் செல்கள்பழுதடைந்து வயிறு பானைப் போல் வீங்கி ரத்த வாந்தி ஏற்பட்டு கல்லீரல் முழுவதும் செயல் இழந்துவிடும். இதனால் உயிரிழப்புகூட ஏற்படலாம்.

அலோபதி மருத்துவ முறையில் இந்த லிவர் சிரோஸிக்கு மருந்தே கிடையாது. அவர்களும் மூலிகை மாத்திரைகளையே பரிந்துரை செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் முன்னேற்றம் தெரியாவிட்டால் கல்லீரல் மாற்றி அமைக்கும் ஆபரேசன் செய்கிறார்கள். இது அத்தனை வெற்றிகரமானது மட்டுமல்ல. பண விரயமும் கூட ஆகும்.

கல்லீரலை பாதுகாக்க, கீழா நெல்லி, கரிசலாங்கன்னி,மாதுளம்பழம், நெல்லிக்காய், இஞ்சி, திப்பிலி, சோற்று கற்றாழை மற்றும் கடல் மருந்துகள் இருக்கின்றன.

தண்ணீரே நல்ல மருந்து!

எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது. எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று.

இதற்கு என்ன காரணம்-? போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது.

உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும். உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.


தண்ணீர் பெரும்பாலான இடங்களில் மிகக் கணிசமாகவே கிடைக்கப் பெறுகின்றன. இரு வழிகளில் தண்ணீர் வரப்பெறுகின்றன. பூமிக்கடியிலும், பூமியின் மேற்பரப்பிலும் (அதாவது மழைநீர்).

மேற்பரப்பு நீர், சாதாரணமாகவே மென்மையாகவும், நிலத்தடி நீர், கடின நீராகவும் இருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால், நிலத்தடி நீரில் தாதுப் பொருட்கள் நிரம்பவே அடங்கியுள்ளன. கடின நீரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மென்னீர் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும். அதேநேரத்தில் ஒரு முக்கியமான இங்கே நினைவில் கொள்ளவேண்டும், அதாவது, மென்னீர் தூய்மையற்றுப் போய்விடுமானால் அதுவே உடற் கோளாறுகளை உருவாக்கிவிடும்.


எனவே தான் குடிப்பதற்கும், மருத்துவத்திற்கும் தண்ணீரைப் பயன்படுத்தும் போது, அதனைச் சுத்தப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும்.


பல நூற்றாண்டு காலமாகவே பண்டைய எகிப்தியர்கள், ஹீப்ரூக்கள், கிரேக்கர்கள், பெர்சியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய நாட்டவர்களுக்குத் தண்ணீர் பல்வேறு வியாதிகளுக்குப் பிரிக்க முடியாத பிரதான அங்கமாகவே இருந்துள்ளது. ஏசு பெருமானுக்கு முன்னரே, பல நூற்றாண்டு காலமாகவே, தண்ணீரை மருந்தாகவே பயன்படுதியுள்ளனர்.

மஞ்சள் காமாலை

தடுப்பூசி தகவல்கள் : மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் மஞ்சள் காமாலை வரும் !!
மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் மஞ்சள் காமாலை வரும் !!
அப்படி யென்றால் அந்த ஊசி பலன் இல்லாததா–முதலில் மஞ்சள் காமாலை பற்றி தெரிந்து கொள்வோம்
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு நோய்க்குறி. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை.
ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும்.ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு இருக்கும்.
அதாவது உங்கள் கணினி திரையில் ஒன்றும் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். (நோய்க்குறி)இது பல காரணங்களினால் (நோய்கள்) வரலாம்.1. திரையில் தவறு2. திரைக்கும் கணினிக்கும் இடையில் இணைக்கும் கம்பியில் (கேபிள்) தவறு3. கணினியில் தவறு.
இது போல் பல காரணங்களினாலும் திரையில் ஒன்றும் தெரியாது.
-oOo-இப்பொழுது மஞ்சள் காமாலைக்கு வருவோம்
அதற்கு முன் கொஞ்சம் அடிப்படை மருத்துவம் பயிலலாம்.
இரத்ததில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
இதில் சிவப்பணுவினுள் (Red Blood Cells – RBC) உள்ள ஹீமோகுலோபின் (Hemoglobin) என்ற பொருள் தான் பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) நுரையீரலிலிருந்து உடலின் பிற இடங்களுக்கு கொண்டு செல்கிறது.சிவப்பணுக்கள் சாகா வரம் பெற்றவை அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட காலம் பணி செய்த பின் இறந்து விடுகின்றன. அப்படி மரணித்த சிவப்பனுவினுள் உள்ள ஹீமோகுலோபின் சில வேதியியல் மாற்றங்களால் பிலிரூபின் (Bilirubin) என்ற பொருளாகிறது. இதை அன்கான்ஜுகேடட் பிலிரூபின் (Unconjugated Bilirubin) (எதனுடனும் இணைக்கப்படாத பிலிரூபின்) என்று அழைக்கிறார்கள்
இந்த பிலிரூபின் என்பது உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய பொருள். ஆனால் இணைக்கப்படாத பிலிரூபின் என்பது நீரில் கரையாத பொருள் (வாட்டர் இன்சால்யுபிள்) எனவே சிறுநீரகங்களால் இந்த இணைக்கப்படாத பிலிரூபினை அதிக அளவில் வெளியேற்ற முடியாது. (கொஞ்சம் வெளியேரும்) இதற்கு நமது உடலில் ஒரு அருமையான ஏற்பாடு உள்ளது. ஈரலில் (லிவர்) இந்த பிலிரூபினானது குலுக்குரோனிக் அமிலத்துடன் சேர்ந்து (குலுக்குரோனிக் ஆசிட்) இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது (கான்ஜுகேடட் பிலிரூபின்) (Conjugated Bilirubin) இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினனை சிறு நீரகங்கள் முழுமையாக வெளியேற்றி விடும்.
ஆகவே இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுலோபினிலிருந்து பிலிரூபின் வருகிறது. இந்த இணைக்கப்படாத பிலிரூபின் இரத்தத்தில் இருக்கிறது. இது மஞ்சள் நிறப்பொருள். இது ஈரலில் இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினானது ஈரலிலிருந்து பித்தநீருடன் (பைல்) சேர்ந்து பித்த நாளங்கள் வழியாக (பைல் டக்ட்) இரைப்பை (டியோடினம்) வருகிறது. இதில் ஒரு பங்கு சிறுகுடலில் இருந்து இரத்ததிற்கு சென்று சிறுநீரகத்தினால் வெளியேற்றப்படுகிறது. ஒரு பங்கு மலத்துடன் வெளியேற்றப்படுகிறது.
இது தான் நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்
-oOo-இப்பொழுது ஒரு அச்சு அலுவலகத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் ஒரு பிரிவில் சில தொழிலாளிகள் வேலை பார்க்கிறார்கள்
ஒரு தொழிலாளிக்கு (தொழிலாளி ம என்று வைத்துக்கொள்வோம்) என்ன வேலையென்றால் வெளியிலிருந்து வரும் A2 அளவு காகிதத்தை A3 அளவிற்கு வெட்ட வேண்டும். அதை அறை 1ல் போட வேண்டும்
அடுத்த தொழிலாளிக்கு (தொழிலாளி ஈ என்று வைத்துக்கொள்வோம்) அறை 1ல் உள்ள A3 அளவிற்கு வெட்டப்பட்ட காகிதத்தை A4 அளவிற்கு வெட்ட வேண்டும். அதை அறை 2ல் போட வேண்டும்
அடுத்த தொழிலாளிக்கு (தொழிலாளி பி என்று வைத்துக்கொள்வோம்) இந்த A4 காகிதத்தை அறை 2லிருந்து எடுத்து ஒரு பகுதியை அறை 3லிளும் ஒரு பகுதியை அறை 1றிலும் போட வேண்டும்
அடுத்த தொழிலாளிக்கு (தொழிலாளி சி என்று வைத்துக்கொள்வோம்) இந்த A4 காகிதத்தை அறை 1றிலிருந்து எடுத்து முழுவதும் அறை 4கிளும் அதை போல் A3 காகிதத்தை அறை 1றிலிருந்து எடுத்து சிறு பகுதியை அறை 4கிளும் போட வேண்டும்-oOo-இப்பொழுது தொழிலாளி ம அதிகம் வேலை பார்க்கிறார் என்றால் என்ன நடக்கும்1. அறை 1ல் A3 காகிதம் அதிகமாகும்2. இதில் ஒரு பகுதியை தொழிலாளி ஈ A4 ஆக வெட்டி விடுவார்.3. ஒரு பகுதி A3 காகிதத்தை சி அறை 4கிற்கு அனுப்பி விடுவார்.4. மீதி A3 காகிதங்கள் அறை 1ல் இருக்கும்5. அறை 2ல் உள்ள A4 காகிதங்கள் ஒரு பகுதி அறை 1க்கும் ஒரு பகுதி அறை 3க்கும் செல்லும்
மொத்தமாக அறை 1ல் அதிக அளவு A3 காகிதம் இருக்கும்-oOo-தொழிலாளி ஈ வேலை செய்யாவிட்டாலோ, அல்லது வழக்கமாக செய்யும் வேலையை விட குறைவாக செய்தாலோ என்ன நடக்கும்
1. அறை எண் 1ல் அதிக அளவு A3 காகிதம் இருக்கும்2. அறை 2லிலும் அறை 3லிலும், அறை 4லிலும் கம்மியான அளவு A4 காகிதம் இருக்கும்-oOo-தொழிலாளி பி வேலை செய்யாவிட்டாலோ, அல்லது வழக்கமாக செய்யும் வேலையை விட குறைவாக செய்தாலோ என்ன நடக்கும்
1. அறை எண் 2லில் அதிக அளவு A4 காகிதம் தேங்கிவிடும்2. அறை எண் 3லில் A4 காகிதமே இருக்காது.3. அவ்வாறு தேங்கும் A4 காகிதங்கள் அறை எண் 1க்கு மீண்டும் தொழிலாளி ஈ மூலமாகவே வரும்.4. அறை 1ல் அளவிற்கு அதிகமாக A4 காகிதங்கள் இருக்கும்5. அதில் ஒரு பகுதி தொழிலாளி சி மூலமாக அறை 4 செல்லும்-oOo-இப்பொழுது நமது உடலிற்கு வருவோம்
வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால்1. அதிக அளவு பிலிரூபின் உருவாகிறது.2. இதில் ஒரு பகுதி இணைக்கப்பட்ட பிலிரூபினாகிறது3. மீதி இணைக்கப்படாத பிலிரூபினாக இரத்தத்தில் உள்ளது.4. இணைக்கப்படாத பிலிரூபின் அதிக அளவில் சிறுநீரில் வெளியேறுகிறது. எனவே சிறுநீர் வழக்கமான நிறத்திலேயே இருக்கும். அதாவது நிறமல்லாமல். இதனால் இந்த வியாதியை நிறமல்லா சிறுநீர் மஞ்சள் காமாலை என்றும் அழைக்கலாம் (acholuric jaundice)
இந்த வியாதியை ப்ரீ ஹெபாடிக் ஜாண்டிஸ் (Pre hepatic Jaundice – அதாவது பிலிருபீன் வழக்கமாக செல்லும் பாதையில் ஈரலுக்கு முன்னர் கோளாறு உள்ளது) என்று அழைப்பார்கள். பொதுவாக இரத்த அணுக்கள் அதிகம் உடைபடும் வியாதிகளில் (ஹீமோலைடிக் டிஸாடர் – hemolytic disorders) இந்த வகை மஞ்சள் காமாலை வரும். இந்த வகை மஞ்சள் காமாலைக்கு வைத்தியம் பார்க்க முதலில் இரத்த சிவப்பணுக்கள் உடைபடுவதை தடுக்க வேண்டும். கீழா நெல்லி உதவாது .-oOo-ஈரல் வேலை செய்யாவிட்டாலோ அல்லது வழகத்திற்கு குறைவாக வேலை செய்தாலோ1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் இரத்ததில் தேங்குகிறது2. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்படாத பிலிரூபின் வெளியேறுகிறது.
இந்த வகை வியாதிகளை ஹெபாட்டிக் ஜாண்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது பிரச்சனை ஈரலில் உள்ளது.
ஈரலில் என்ன பிரச்சனை என்றால்
1. வேதியல் பொருட்களால் இருக்கலாம்.2. சில வகை மருந்து பொருட்களால் இருக்கலாம்.. முக்கியமாக – பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லி (அல்லது அறியாமல் சொல்லி) விற்கப்படும் / அளிக்கப்படும் சித்தா, ஆயுர்வேதா, யூனானி, ஹோமியோமதி மருந்துக்களில் பல ஈரலையும் சிறுநீரகத்தையும் நாசம் செய்ய வல்லவை. பக்க விளைவு இல்லாத மருந்து எதுவும் கிடையாது (இது குறித்து விளக்கமாக வேறு இடுகையில் பின்னர் பார்க்கலாம்)3. ஆட்டோ இம்யூன் டிஸார்டர் – உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது உடலுக்கு எதிராக செயல்படும் விநோத, வேதனை நிகழ்வு இது. அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி நோய்கிருமிகளை மட்டும் அழிக்காமல் உடலையும் அழித்து விடும். சில நேரங்களில் நோய்கிருமிகளுக்கு பதில் உடல் திசுக்களை மட்டும் அழித்துவிடும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆஸ்துமாவுக்கும் இது தான் காரணம். 23-04-2008 அன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்ட சுமார் 10,000 குழந்தைகளில் சுமார் 10 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு அதில் 4 குழந்தைகள் மரணமடைய காரணமும் அந்த 4 குழந்தைகளின் உடலில் இருந்த அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்திதான். இது குறித்து வேறு இடுகையில் தனியாக பார்ப்போம். ஒவ்வொரு புதன் கிழமையும் தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் 10000 குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடுகிறார்கள். மொத்தமாக ஒரு வருடம் தமிழகத்தில் சுமார் 50,00,000 (50 லட்சம்) தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும் 50,00,000 மருந்துகள் வாய் வழியாக தரப்படுகிறது.4. கிருமிகளினால் இருக்கலாம்
கிருமிகள் என்றால்1. பேக்டிரியா2. வைரஸ்3. பங்கஸ்4. பூச்சிகள், புழுக்கள்
இதில் முக்கியமாக வைரஸ் என்று பார்த்தோம் என்றால் அதில்1. பிற நோய்களை உருவாக்கும் (அதே நேரத்தில் ஈரலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்) வைரஸ்கள்2. முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்கள்
இந்த இரண்டாவது முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்களளில் 7 வகைகள் உள்ளன1. ஹெபடைட்டிஸ் A2. ஹெபடைட்டிஸ் B3. ஹெபடைட்டிஸ் C4. ஹெபடைட்டிஸ் D5. ஹெபடைட்டிஸ் E6. ஹெபடைட்டிஸ் F7. ஹெபடைட்டிஸ் Gஇது போன்ற ஈரல் பாதிப்பினால் வரும் மஞ்சள் காமாலை நோய்கள் பெரும்பாலும் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமியினாலேயே வருகின்றன. எனவே இது தானாகவே சரியாகிவிடும். கொஞ்ச நாட்களுக்கு எண்ணை மற்றும் கொழுப்பு சத்து அதிகம் இல்லாத உணவை சாப்பிட்டால் போதும்.
அது போல் சூடு போடுவதால் இது சரியாவதில்லை
கீழா நெல்லி என்பது இந்த நோய்க்கு (வைரஸ்) மருந்து அல்ல. அது ஈரல் விரைவில் குணமடைய வைப்பதாக நம்பம்படுகிறது
கீழா நெல்லி குறித்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அவை உடலுக்கு (அதிக அளவில்) தீங்கு விளைவிப்பதில்லை என்று கண்டுபிடித்து உள்ளார்கள். (மற்ற சித்த, ஆயூர்வேத மருந்துகள் இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்படாமலேயே பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லப்படுகிறது)
-oOo-ஈரலிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் எதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என்ன நடக்கும்
1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் வழக்கமாக செயல்படும் ஈரலினால் இணைக்கப்பட்ட பிலிரூபினாக மாற்றப்படுகிறது2. பித்த நீர் வழியாக வெளியேற முடியாத இணைக்கப்பட்ட பிலிரூபின் மீண்டும் இரத்ததில் சேறுகிறது3. இரத்ததில் அளவிற்கு அதிகமான இணைக்கப்பட்ட பிலிரூபின் உள்ளது4. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்பட்ட பிலிரூபின் வெளியேறுகிறது. சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.5. இரைப்பைக்கு பித்த நீர் வராததால், கொழுப்பு சத்து ஜீரனிக்கப்படுவதில்லை.6. எனவே மலத்தில் கொழுப்பு சத்து வெளியெறுகிறது7. மலம் வெள்ளை நிறமாக உள்ளது.
இது போன்ற நிலைமைகளை போஸ்ட் ஹெபாடிக் ஜான்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது ஈரலிலிருந்து பிலிரூபின் வெளியேறியபின் பிரச்சனை. அதுவும் பெறும்பாலும் எதேனும் அடைப்பு.இந்த அடைப்புஈரலுக்கு உள்ளும் இருக்கலாம் – இண்ட்ரா ஹெபாடிக் Intrahepaticஈரலுக்கு வெளியிலும் இருக்கலாம் – எக்ஸ்ட்ரா ஹெபாடிக் Extrahepaticஅதே போல் இது (இந்த அடைப்பு )பிறக்கும் போதே இருக்கலாம் – கன்ஜெனிடல் Congenitalபிறகு வந்திருக்கலாம் – அக்கொயர்ட் Acquired
இதில் 20 வயதிற்கு மேல் திடீரென்று ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்து மலம் வெள்ளை நிறமாக அதிக கொழுப்புடன் வருகிறது என்றால் அதற்கு காரணம் எதோ அடைப்பு.
அது பித்த கற்களாகவும் (பைல் ஸ்டோன் Bile Stone) இருக்கலாம்அல்லது புற்று நோயாகவும் (கான்ஸர் Cancer) இருக்கலாம்
முக்கியமான விஷயம், இது போன்ற நோய்களினால் வரும் மஞ்சள் காமாலை கீழா நெல்லி சாப்பிட்டாலோ அல்லது என்ன மருந்து சாப்பிட்டாலும் சரியாகாது. இதற்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
அதுவும் புற்று நோய் என்றால் ஆரம்ப கட்டத்திலேயே அறுவை சிகிச்சை செய்தால் தான் பிழைக்க முடியும்.-oOo-சரி இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டிய விஷயம்1. மஞ்சள் காமாலை பல காரணங்களினால் வரும்2. இந்த காரணங்கள் குறித்து (ஹீமோலைடிக் டிஸாடர், டுபின் ஜான்ஸன் சிண்ட்ர்ரோம், பித்த நீர் பாதை அடைப்பு) அறியாத (அதாவது படிக்காத) ஒருவரிடம் சென்று மஞ்சள் காமாலைக்கு மருந்து சாப்பிடுவது என்பது எமனுக்கு வெத்திலை பாக்கு வைத்து அழைப்பது போலாகும்3. எனவே உங்களுக்கோ அல்லது உங்கள் உறவினர் / நண்பர்கள் யாருக்காவது மஞ்சள் காமாலை என்றால் முதலில் ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, இரத்த பரிசோதனை செய்து அது ஹெபாடிக் ஜாண்டிஸ் தான் என்று உறுதி படுத்தி கொள்ள வேண்டும். வெறும் கீழா நெல்லி மற்றும் பத்தியம் இருந்தால் உயிருக்கு ஆபத்து-oOo-சரி இப்பொழுது முதலில் நாம் பார்த்த கேள்விக்கு வருவோம்.
மஞ்சள் காமாலை தடுப்பூசி என்று அனைவரும் போடுகிறார்களே. அது என்ன
இங்கு (முக்கியமாக முகாம் அமைத்து தனியாரால்) போடப்படும் மஞ்சள் காமாலை தடுப்பூசி என்பது ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமிக்கு மட்டும் எதிரானது தான்
இந்த தடுப்பூசி போட்டால் மஞ்சள் காமாலை வராதாஇந்த தடுப்பூசி போட்டால் ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி மற்றும் ஹெபடைடிஸ் D வைரஸ் கிருமியினால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்கள் மட்டுமே வராது.
பிற வைரஸ் கிருமிகள்அனைத்து பேக்டிரியா கிருமிகள்அனைத்து பங்கஸ் கிருமிகள்அனைத்து பூச்சிவகைகள்அனைத்து புழுக்கள்அனைத்து ப்ரீ ஹெபாடிக் வகைகள்அனைத்து போஸ்ட் ஹெபாடிக் வகைகள்
மூலம் வரும் அனைத்து மஞ்சள் காமாலைகளும் வரும்
பொதுவாக வரும் மஞ்சள் காமாலை என்ன வகைஹெபடைடிஸ் A வைரஸ் கிருமியினால் வருவது. நீங்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் இந்த வகை மஞ்சள் காமாலை தொடர்ந்து வரும்
அப்படி யென்றால் இந்த தடுப்பூசியினால் என்ன பலன்ஹெபடைடிஸ் A வைரஸ் கிருமியினால் வரும் மஞ்சள் காமாலை என்பது தானாக சரியாகிவிடும். இதனால் உயிருக்கு ஆபத்து கிடையாது. வைத்தியம் தேவையில்லை
ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமியினால் வரும் மஞ்சள் காமாலை என்பது தானாக சரியாகாது. இதனால் உயிருக்கு ஆபத்து உண்டு. கண்டிப்பாக வைத்தியம் தேவை
வேறு ஏதாவது வித்தியாசம் உள்ளதாஹெபடைடிஸ் A வைரஸ் கிருமி நீர் மூலம் பரவும் (அதாவது குடிநீர் மூலம்). சுருங்கச்சொன்னால் காலரா எப்படியெல்லாம் பரவுமோ, அப்படியெல்லாம்ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி இரத்தம் மூலம் பரவும் (அதாவது இரத்தம் ஏற்றுவது, ஒருவருக்கு போட்ட ஊசியை அடுத்தவருக்கு போடுவது, ஒருவரின் இரத்தம் நமது உடலில் படுவது, பாதுகாப்பற்ற உடலுறவு மூலம்) – சுருங்கச் சொன்னால் எய்ட்ஸ் எப்படி யெல்லாம் பரவுமோ அப்படியெல்லாம்
ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி தடுப்பூசியினால் பாதிப்பு உண்டா
மிகவும் குறைவு. அனைத்து தடுப்பூசிகளிலும் இது பாதுகாப்பானது என்று கூறலாம். இந்த மருந்து பெரும்பாண்மையான தடுப்பூசிகளை போல் கிருமிகளிலிருந்து செய்யப்படுவது அல்ல. அதற்கு பதில் நவீன முறைகளினால் வேதியல் பொருட்களிலிருந்து செய்யப்படுவது.
ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி தடுப்பூசியினால் பலன் உண்டா
நீங்கள் இரத்தம் தொடர்பான தொழில் செய்பவராக இருந்தால் (உதாரணம் மருத்துவத்துறை, ஆய்வக உதவியாளர் போன்ற பணிகள்) இதனால் உங்களுக்கு பலன் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு உயிர் கொல்லி நோய் வராது.
மற்றவர்களுக்கு (பொது மக்களில் பெரும்பாண்மையானவர்களுக்கு) பலன் குறித்து என்னால் கருத்து கூற முடியாது. ஆனால் இதில் மிக மிக குறைவான பக்க விளைவுகளே உள்ளது. சத்து ஊசி (பி காம்ளஸ்) ஊசி போடுவதில் உள்ள பக்க விளைவுகள் தவிர வேறு எதுவும் கிடையாது
மற்றப்டி ஊசி போடுபவர்களுக்கு நிறைய பலன் உண்டு.

Thursday, April 15, 2010

Poondi news



My relatives,I don't forgot my grandfa.I am always thinking about my grandfa.

Tuesday, April 13, 2010

திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கோவில்கள்

திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கோவில்கள் 🛕 🌸 திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கோவில்கள் 🛕 திருவண்ணாமலை, தமிழ்நாட்டின்...