Translate

Friday, April 30, 2010

மருத்துவ குறிப்புகள்

பற்களை பாதுகாக்க சில யோசனைகள்:
சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும்.

சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங்களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத்தீனீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்துவிடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும்.

உணவு வேளையில் நீங்கள் உண்ணவேண்டிய கடைசிப்பொருள் நறுக்கப்பட்ட பச்சைக்காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும்கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம்.

காலையில் மட்டும் பல்துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வெளையும் பல் துலக்க வேண்டும்.

சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதனால் சாப்பிட்டவுடன் பல் தேய்ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும்.

காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், இரவு படுக்கும் முன் பல் தேய்ப்பதும் முக்கியம்.

பல் தேய்க்கும் போது பல்லில் மட்டும் கவனம் செலுத்தினால் பத்தாது. ஈறுகள், நாக்கு இவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். பல்லை விட இவை மிருதுவானவை என்பதால் பல்லில் காட்டும் வேகத்தை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது.

ஃபிளாஸ் (குடடிளள) செய்வதால் பற்களின் இடையே உள்ள பொருட்களையும் சுத்தம் செய்யலாம். இதை செய்வதால் வாய் துர்நாற்றத்தை போக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்றால், உபயோகித்து முடித்தவுடன் ஃபிளாஸை முகர்ந்து பார்க்கவும்!!! அதன்பிறகு ஒரு நாளும் ஃபிளாஸை மறக்க மாட்டீர்கள்.

பல் தேய்த்த பிறகு மவுத்வாஷால் வாயை கொப்பளிப்பதால் நீண்ட நேரத்திற்கு துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

அஜீரணம், பசி, இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். அதனால் சாப்பாட்டில் கவனம் செலுத்தவும், ஒரே நேரத்தில் முடிந்த வரை சாப்பிடாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய அளவில் சாப்பிடுவது சிறந்தது. சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீராவது குடிக்கவும். இது அஜீரணமும் பசியும் ஏற்படாமல் தடுக்கும்.

மூக்கடைப்பு, சளி இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். நறுமண மென்த்தால் மாத்திரைகள் இதற்கு உதவும்.

இவற்றை எல்லாம் செய்த பிறகும் வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும். சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களாலும் இந்நிலை உருவாகலாம்.

இங்கே சில பொருட்களின் தன்மைகள்
உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்
ருசியின்மையைப் போக்குபவை
புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி
சிவப்பணு உற்பத்திக்கு
புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை
மருந்தை முறிக்கும் உணவுகள்
அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்
விஷத்தை நீக்கும் உணவுகள்
வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்பித்தம் தணிப்பவைசீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம் நீங்கும்.
தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அண்டாது.
பொன்னாங்கண்ணி கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். உடம்பில் உள் சூடும் குறையும். இக்கீரையின் தைலத்தை தலை முழுகப் பயன்படுத்தி வந்தால் கண் நோய் அண்டாது. உடல் சூடு தணியும்.
அரைக் கீரை தைலமும் உடல் சூட்டைத் தணிக்கும்.
பாகற்காய் வற்றலை உணவுடன் உண்டு வந்தால் மூலம், காமாலை நோய் தீரும்.

ஹோட்டல்களில் சாப்பிடுவதால் ஏற்படும் நாக்குப் பூச்சித் தொல்லை, சிறுவர்களுக்கு ஏற்படும் வயிற்றுப்பூச்சித் தொல்லை நீங்க சுண்டைக்காயை உணவுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
இரவு உணவில் சுண்டைக்காய் வற்றலை சேர்த்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, காச நோய் நீங்கும். வயிற்றுப் போக்கும் நிற்கும்.
கற்கண்டு, இஞ்சி சாறு சேர்த்து அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
இஞ்சி ஊறுகாய் ஜீரணத்துக்குப் பயன்படும். பித்தத்தைத் தணிக்கும்.
மருதாணி இலையை எலுமிச்சைச் சாற்றில் கலந்து அரைத்து கட்டினால் குதிகால் வாதம், பாத எரிச்சல் தீரும்.
வெள்ளை கரிசலாங் கண்ணி தைலத்தைத் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறுக்கும்.
கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழா நெல்லி ஆகிய இலைகளை சம அளவில் அரைத்து பாக்கு அளவில் எடுத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
கீழாநெல்லி செடியின் வேரை பசுமையாக 20 கிராம் எடுத்து அரைத்து பால், தயிர், மோர் என ஏதாவது ஒன்றுடன் கலந்து பருகினால் கை, கால் வலி நீங்கும். தேனில் கலந்து பருகி வர அம்மை நோய் தணியும்.
அரச இலையை அரைத்து பூசி வந்தால் கால் வெடிப்பு, ரணம் குணமாகும்.
அகலில் வேப்பெண்ணெயை விட்டு இரவில் எரித்து வந்தால் கொசுக்கள் பறந்துவிடும்.
துளசி இலையை வாயில் போட்டு மென்று தின்றால் பல் வலி, கூச்சம் நீங்கும். சில இலைகளைக் கசக்கி முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு நீங்கும்.
பிஞ்சு வில்வக் காயை அரைத்து தயிரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, ரத்த பேதி குணமாகும்.
அறுகம்புல்லை அரைத்து காய்ச்சிய பாலில் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் ரத்த மூலம் நிற்கும்.
வேப்பிலையை அரைத்து கட்டி வந்தால் ஆறாத ரணமும் ஆறும். உடையாத பழுத்த கட்டியும் உடையும்.
வேப்பங்கொட்டையினுள் உள்ள பருப்பை மை போல் அரைத்து வெந்நீரில் கலந்து குடித்தால் நஞ்சு நீங்கும்.

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா?
ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்.
ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன்,சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை...
இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள்.
தினமும் இரவு தூங்கப் போகும்போதுபருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

மனித உயிருக்கு உத்திரவாதமில்லை. நேற்று இருந்தவர் இன்றில்லை.
“10 நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக் கொண்டிருந்தவர், திடீரென
போய் விட்டாரே. இன்று காலை கூட என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
இறந்து விட்டதாக செய்தி வருகிறதே. நேற்று நன்றாக நடமாடிக்
கொண்டிருந்தவர் இன்று பக்கவாதம் தாக்கி முடமாகி விட்டாரே’ என்று
பலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கெல்லாம்
காரணம் என்ன? ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான்
காரணம்.இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள்
ஏற்படும்போது அது மாரடைப்பாக உயிரை மாய்க்கிறது. மூளைக்கு
செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது
பக்கவாதமாக பரிமாண மெடுத்து மனிதனை முடக்கி விடுகிறது.துடிக்கும்
மனித இதயம், மனிதனுக்கும் வாழ்வை வழங்குகிறது. மனிதன் வாழ
வேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடித்தே ஆக
வேண்டும். இவ்வாறு துடித்து துடித்து மனிதனுக்கு வாழ்வை வழங்கும்
இதயம் துடிப்பதற்கு சக்தி தேவை. அந்த சக்தி இதயத்திற்கு செல்லும்
ரத்த குழாய்கள் மூலம்தான் இதயத்திற்கு கிடைக்கிறது. இந்த ரத்த
நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் ரத்தம்
தடைபடுகிறது. இதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதனை
போல் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்புகள்
ஏற்படும்போது அது பக்கவாதமாக, பரிமாணம் எடுத்து மனித வாழ்வை
சீர்குலைக்கிறது.
இதயத்திற்கும் மூளைக்கும் ரத்தம் மற்றும் தேவையான
சத்துக்களை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தை போலவே
சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் ரத்த
ஓட்டம் நடைபெறுகிறது.
ரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய “நைட்ரிக் ஆக்சைடு’ என்ற
ரசாயன பொருள் உதவுகிறது. இது நமது உடலிலேயே உற்பத்தி ஆகும்
பொருள். இதுதான் ரத்த குழாய்களுக்குள் சென்று அவற்றை சுருங்கி
விரிய உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும், குருதியில் கொழுப்பு
சத்து மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது
“நைட்ரிக் ஆக்சைடு’ சுரப்பது குறைகிறது. மேலும் மன இறுக்கமும்,
மனக்கவலையும் கூட நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை கெடுக்கிறது. புகை
பிடிப்பது, மது அருந்துதல், அசைவ உணவுகளை அதிகளவு உட்கொள்வது
போன்றவை கூட இந்த நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை குறைக்கிறது.
நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கி
விரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படிய
தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால்
மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட
வாய்ப்பாகிறது.

ரத்தக்குழாய் அடைப்புகள் வராமல்
தடுப்பது எப்படி?

ரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு
அதை சீராக வையுங்கள். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய்,
எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற் றை
தவிர்த்திடுங்கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள். மதுபாட்டில்களை
காலி செய்வதை நிறுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளையும்,
நெய்யால் செய்த பண்டங்களையும் குறையுங்கள். உப்பு அளவோடு
சேர்த்துக் கொள்ளுங் கள். இனிப்பான பழங்கள்,
கிழங்குகள்,பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்தல்
கூடாது.இவற்றை விட மேலானது உடற்பயிற்சி. நாள்தோறும் காலை, மாலை
அரை மணி நேரம் நடைபயிற்சியை மேற் கொள்ளுங்கள். சைக்கிள்
ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உணவு
வகைகள் அதிகம் உட்கொள்வதை குறையுங்கள். உங்கள் இதயம் பாதுகாப்பாக
இருக்கும்.

இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு:
சோகைஎன்றதும், பல வகையான மாத்திரைகளை முழுங்கி வருவார்கள். ஆனால் அதற்கு இயற்கையின் வரப்பிரசாதமான தேன் தான் நிரந்தர தீர்வை அளிக்கும் மருந்தாகும்.

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப் பிரித்து உட்கொள்ள வேண்டும்.

ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.

பல் போனால் சொல் போகும்

'பல் போனால் சொல் போகும்' என்ற பழமொழியே நமது பல்லின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அப்படிப்-பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாகப் பராமரிக்கத்தான் வேண்டும். இதோ, பல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற வழி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணர், டாக்டர் டி.பி.மகேந்திரன்.

''குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை 'நர்ஸிங் பாட்டில் கேரீஸ்' (nursing bottle caries) என்று அழைக்கிறோம்.

குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.

பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறா£க இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.

சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.

பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.''


புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட ஆயுள்: நீண்ட நாள் வாழலாம் என பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. புகைபிடிக்காதவர்கள் உடல்நிலை குறித்து ஓஸ்லோ பல்கலைக்கழகமும், நார்வே பொதுசுகாதார நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது.

முப்பது ஆண்டுகளாக நார்வே நாட்டு மக்களில் புகைப்பழக்கம் உள்ள நடுத்தர வயது ஆண், பெண்களிடம் 1974 முதல் தொடர்ந்து நடத்திய ஆய்வில், புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழமுடியும் என்றும், இவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரியவந்துள்ளது.

ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஓஸ்லோ பல்கலைக்கழக ஆசிரியர் ஹாகோன் மேயர் புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த படத்தினை வெளியிட்டிருப்பதாகக் கூறினார்.

உடல் நலனை பாதிக்கும் மன நலம்உடல் நலன் பாதிக்கப்படுவதற்கு மன நலமும் ஒருவகையில் காரணமாகிறது. மன நலனை கவனிப்பதில் அலட்சியமாக இருக்கக் கூடாது.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் நன்கு சம்பாதிக்கவோ, சம்பாதித்ததை அனுபவிக்கவோ முடியும்.

உடல் ஆரோக்கியதுக்கும் மன நலனுக்கும் தொடர்பு உண்டு. மனம் பாதிக்கப்பட்டால் உடல் நலனையும் அது பாதிக்கச் செய்யும். மன நல பாதிப்பை கீழ் கண்ட அறிகுறிகளைக் கண்டு நாம் அறிந்து கொள்ள முடியும்.

டென்ஷனுடன் பற்களைக் கடித்தல், மூச்சுத் திணறல், பசி எடுக்காமை, உயர் ரத்த அழுத்தம், நெஞ்சடைப்பு போன்ற உடல் ரீதியான பாதிப்புகள் சாதாரணமாக ஏற்பட்டால் பிரச்னை இல்லை.

எவ்வித காரணமும் இன்றி இவை ஏற்படுமானால் மன நலன் பாதிக்கத் தொடங்கி இருப்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இதேபோல் அடிக்கடி கவலை, எதையும் சிந்தித்து முடிவெடுக்க முடியாமை, தேவையில்லாமல் கோபம் வருதல், சோர்வாக இருத்தல், தற்கொலை எண்ணங்கள் மேலோங்குதல் போன்றவை, மன நலன் பாதிக்கப்பட்டுள்ளதற்கான மன ரீதியான அறிகுறிகள் ஆகும்.

சின்ன ஒரு விஷயம் கூட பெரிய மனநோயாக மாறுவதற்கு காரணமாக அமையலாம். இது தோன்றி வெளிப்படையாகத் தெரிய ஒரு ஆண்டு கூட ஆகலாம்.

எப்படி போக்கலாம்?

மன நோய்க்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக அமைகிறது. மன அழுத்தம் அதிகம் ஏற்பட்டால் தினசரி வேலைகள், அலுவலம் ஆகியவற்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விடுமுறையில் பிடித்த இடங்களுக்குச் செல்லலாம்.

தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபாடு இருந்தால் அவற்றில் நாட்டம் செலுத்தி, மன அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்கலாம்.

புத்தகம், பாடல், ஓவியம் போன்ற ஏதேனும் ஒன்றில் நாட்டம் இருக்குமானால் அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி புத்துணர்வு பெறலாம்.

தினசரி வேலைகளை ஒரே மாதிரி வேலைகளை செய்து வராமல் அவ்வப்போது பல மாற்றங்களைச் செய்யலாம். தனிமையே கதி என்று இருக்காமல் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று மனம் விட்டு பேசி, மன இறுக்கத்தைக் குறைக்கலாம்.

எனினும் தொடக்கத்திலேயே நல்ல மனநல மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப் படி நடப்பது இந்நோயைத் தடுக்க சிறந்த வழியாக இருக்கும்.

வெகுதூரம் வாகனங்களில் பிரயாணிப்பவரா? புற்றுநோய்-கருச்சிதைவு அபாயம்
ஆய்வக பரிசோதனைக்குட்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனத்திலிருந்து உருவாகக்கூடிய ஒருவித வாயுவை கண்டுள்ளனர். அதாவது வாகனத்தின் இருக்கை மற்றும் இருக்கையின் உறை ஆகியவை ஒரு வகையான வாயுவை வெளிப்படுத்துகிறது.

அதுவும் உஷ்ணநிலை அதிகபட்சம் 6 டிகிரியில் இந்த வாயு உருவாகிறது. இந்த வாயுவை உட்கொள்ளும்போது இது ரத்தத்தையும், எலும்பையும் தாக்குகிறது. இதன் மூலம் இரத்தத்தில் வெள்ளையணுவை குறைக்கிறது. வெகுதூரம் பயணம் மேற்கொள்ளும்போது புற்றுநோய், கருச்சிதைவு போன்ற பேராபத்தும் உண்டாகின்றது. இந்த ஆபத்திலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் நிறுத்தப் பட்டிருக்கும் வாகனத்தை இயக்குவதற்கு முன் வாகனத்தின் பக்க கண்ணாடிகளை திறந்து விட்டு சிறிது நேரம் சென்றவுடன் மூடிக்கொள்ளலாம்.

சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு

மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

எந்த அளவுக்கு நமக்கு உழைப்பு முக்கியமானதோ, அதே அளவுக்கு போதிய ஓய்வும் (தூக்கம்) முக்கியம். அப்போதுதான் நாம் தொடர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் பணிசெய்ய இயலும்.

ஒருவர் போதிய தூக்கம் இன்றி தவித்தால், அவரால் மறுநாள் தனது பணியில் கவனம் செலுத்த முடியாது.

தூங்கும் நேரத்தின் அளவு குறைந்தாலும், ஆழ்ந்த தூக்கத்தின்போது, இடை இடையே தொந்தரவுகள் ஏற்பட்டு தூக்கம் கலைவதாலும் நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.

ஒருநாள் தூக்கத்தை இழப்பவர்களுக்கு, மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் என்னும் பகுதி பாதிப்புக்குள்ளாவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 60 வயதிலும் ஆரோக்கியமாக திகழும் 13 பேரிடம் ஆய்வு நடத்தினர். ஆழ்ந்த தூக்கம் மற்றும் லேசான பாதிப்புடன் கூடிய தூக்கம் போன்ற நிலைகளில் அவர்களிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

உடல் பருமன், மன அழுத்தம், அதிக வெளிச்சம், சுற்றுப்புற ஒலி போன்ற பல்வேறு காரணங்களால் நிம்மதியான தூக்கம் பாதிக்கப்படலாம்.

பல்வேறு நிலைகளில் தூக்கம் பாதிப்புக்குள்ளானவர்களின் நினைவாற்றல் குறித்து பரிசோதிக்கப்பட்டதில், தூக்கம் கலைந்தவர்களின் நினைவுத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

ஆனால், ஆழ்ந்த தூக்கம் கொண்டிருந்தவர்களின் நினைவாற்றல் நல்ல முறையில் இருந்தது.

எனவே, இரவில் அதிகநேரம் விழிந்திருந்து மறுநாள் சோம்பலாக இருப்பதை விட, போதிய நேரம் தூங்கி எழுந்தால், மறுநாள் மிகவும் சுறுசுறுப்பாக பணிபுரியலாம்.

தொண்டைக்கட்டு சரியாக என்ன சொய்யலாம்?
மாவிலையின் கொழுந்தைக் கொண்டு வந்து கருகி விடாமல் வறுத்தெடுத்து, பொடியாக்கி அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து கால் ஸ்ப+ன் அளவு காலை மாலை சாப்பிட்டு வந்தால்,ஒரே நாளில் தொண்டைக்கட்டு சரியாகி விடும்.
சளித்தொல்லை நீங்க
துளசிச் சாறு ஓர் அவுன்ஸ் தினசரி குடித்து வந்தால் சளித்தொல்லை தலை காட்டாது ஓடிவிடும்.மூக்கில் நீர் வடிந்தால் ஜாதிக்காயை நீர்விட்டு உறைத்து மூக்கின் மேல் பற்றுபோட்டால் நீர் கசிவது நின்றுவிடும்.குழந்தைகளுக்கு சளிபிடித்திருந்தால் துளசிச் சாறும் தூதுவளைச் சாறும் சமபங்கு கலந்து காலை மாலை ஒரு தே.கரண்டி கொடுத்தால் சளி கரைந்துவிடும்.பெரியவர்கள் தூதுவளை,ஆடாதோடைக் கீரைகளை சாப்பிட்டால் சளித்தொல்லை நின்றுவிடும்.
பல் பராமரிப்பு
பல் பராமரிப்பிற்கான ஒழுங்கு முறைகள் வருமாறு:-
1. சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.


2ஃபுளொரைட்டு கலந்த பற்பசையை பயன்படுத்துங்கள்.

3. சிலருக்கு உமிழ்நீர் சுரப்பு குறைந்து காணப்படுவதால் வாய் வரண்டு போய் காணப்படும். இப்படிப்பட்டவர்கள் உமிழ்நீர்சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சர்க்கரைச் சத்து இல்லாத இனிப்புக்களை வாங்கி சாப்பிடலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
4. பற்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் மருத்துவரை ஆரம்ப நிலையிலேயே சந்திக்க வேண்டும்.
5. நீங்கள் ஏற்கனவே ஏதாவது மருந்து மாத்திரை சாப்பிட்டு தூரிகை வந்தீர்களேயானால் அதுபற்றி மருத்துவரிடம் முதலில் சொல்லுங்கள்.
6. தூரிகை பயன்படுத்துவதிலும் ஈறுகளை தேய்ப்பதிலும் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதுபற்றி மருத்துவரிடம் கூறுங்கள்.
பற்களின் பெருமை ஈறுகளின் வலிமையைப் பொறுத்தே அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கொலஸ்ட்ரோல் கட்டுப்பாடு
சற்று கவனமாக இருந்தால்,நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் கொலஸ்ட்ரோல் அளவைகட்டுக்குள் வைத்திருக்க முடியும். தற்போது பல்வேறு உணவகங்களில் குறைந்த கொலஸ்ட்ரோல்|,குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை பரிமாறுகின்றனர்.அப்படி இல்லாத பட்சத்தில் அற்த உணவு எந்த முறைகளில் தயாரிக்கப்பட்டது என்பதுபற்றி விவரத்தை அறிந்து கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் கீழ்க்கண்ட முறைகளில் தயாரிக்கபட்ட உணவுகளாக இருந்தால் அவற்றில்கொலஸ்ரோல் மற்றும் கொழுப்பு அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
1. வறுத்தது.
2. முறகலானது.
3. கொஞ்சமாக தண்ணீரில் வேக வைத்து மாமிசம் கலந்து தயாரிக்கப்படும் உணவுகள்
4. உபயோகமற்ற பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது.
5. வெண்ணெய் அல்லது பழுப்பு நிற ரொட்டித்துண்டுகளைச் சுற்றி சமைப்பது.
6. மெல்லிதாக இழைக்கப்பட்ட உருளைக்கிழங்கு துண்டுகளை கொழுப்பில் போட்டு வறுப்பது.
7 . பெரிய அளவிலான வான் கோழிகளை அப்படியே சமைப்பது.இவைகளுக்கு பதிலாக:-
1. வேக வைத்தவை.
2. பிரகாசமாக நெருப்பில் சமைத்தவை.
3. சூடான அடுப்பில் சமைக்கப்பட்பவை.
4. சூடான நீரில் சமைத்தவை.
5. புதிய உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
காற்றோடு கலந்து பரவும் விஷக் கிருமிகளைத் தன்பால் கிரகித்துக் கொள்கின்ற சக்தி வெங்காயத்துக்கு மட்டும் உண்டு. தினமும் அதிகாலை ஒரு வெங்காயத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வாழ்நாள் முழவதும் எந்த நோயும் அணுகாது.
உடலுக்கு உடனடியாக குளிர்ச்சியை உண்டு பண்ணுகிற சிறப்புச் சக்தி வெங்காயத்திற்கு உண்டு. வெங்காயத்தை 2 துண்டுகளாக வெட்டி முகர்ந்தாலும் வாயில் போட்டு சப்பினாலும் வாந்தியை தவிர்க்கலாம். தொற்று நோய் பரவியுள்ள இடங்களுக்குச் சென்றால் கொ}ஞ்சம் வெங்காயம் எடுத்து செல்வது நல்லது. நோய் கிருமிகள் நம்மைப் பாதிக்காது.
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாமா?
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் ஒரு பொருள் வெங்காயத்தை வெறுமனேருசிக்காக மாத்திரம் சேர்த்து வருகிறோம்.அது தவிர இதனைப் பற்றி சிறிதும் சிந்திப்பது கிடையாது.இது எப்படிப்பட்டது,இதனை மருத்துவக் குணங்கள் என்ன என்றெல்லாம் எடுத்து நோக்கும் பொழுது வெங்காயத்தின் மகிமையினை உணர்ந்து கொள்ளலாம்.
வெங்காயத்தைச் சாப்பிடும் பொழுது வேகவைத்துச் சாப்பிவதே மிகவும் சிறந்த முறையாகும். அதற்காகப் பச்சையாகச் சாப்பிடக் கூடாதென்பதல்ல.பச்சையாகச் சாப்பிடுகிறவர்கள் சிறிது நேரம் வீட்டில் தங்கிவிட்டு வெளியில் செல்வதாயின் செல்லவும்.காரணம் பச்சையாக சாப்பிட்டவர்கள், மற்றவர்களுடன் கதைக்கும் பொழுது வெங்காய வாடை வீசும்.
ஏனையோர் அவ்வாடையினால் வெறுப்படைய வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. ஏனென்றால், நூற்றுக்குத் தொண்ணூறு சதவீமானவர்கள் வெங்காய வாடையை வெறுப்பாகள்.
இவ்வெங்காயத்தினை காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும் பொழுது அவ்வுணவு வகைகள் தனிச்சுவை பொற்றுவிடுகின்றன்அது மட்டுமல்ல,இதன் மருத்துவக் குணங்களை எடுத்து நோக்குவோமானால் அது ஒன்றிரண்டு என மட்டுப்படுத்தி விட முடியாது.நிறையவே மருத்துவக் குணங்களை கொண்ட ஒன்று தான் வெங்காயம்.
இது பற்றி மருத்துவத்துiயினர் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றனர்.வெங்காயம் நச்சுக் கிருமிகளைக் கொல்லுவதுடன் உடற்பருமன் ஏற்பட்டு விடாமலும் பாதுகாக்கிறது.இதனைத் தொடர்ச்சியாக உண்டு வருகையில் உங்கள் குரல் வளம் இனிமை பெறும்.அழகிய குரல் வளம் பெற விரும்புகின்றவர்கள் மேற் கூறிய விடயத்தைக் கைக்கொள்ளலாம். கிராணி, விஷக்கடி, குழிப்புண் ஆகியவற்றையும் குணமடையச் செய்வதுடன்,பித்தத்தையும் தணியச் செய்யும் குணமும் இதற்குண்டு மூளை சுறுசுறுப்பாக இயங்கவும்,காக்கை வலிப்பு போன்ற கெட்ட நோய்கள் நீங்கவும்,வெங்காயம் வழி சமைக்கின்றது.
காலையில் ஒன்று அல்லது இரண்டு வெங்காயங்களைத் தனியாகவோ உண்வுகளுடனோ சோர்த்து உண்டு வந்தால் அன்று முழுவதும் உஷ்ணம், வேறு பிணிகள் எம்மை எட்டிக்கூடப்பார்க்க மறுக்கும். கோடை காலத்தில் ஒரு வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டால்,மயக்கம் போன்ற தன்மைகள் எம்மை அணுகாது என மருத்துவர்கள் கருத்துரைக்கின்றனர்.
வெங்காயச் சாறு பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்தாகும். இதனைத் தொடர்ச்சியாக உண்டு வந்தால் பக்கவாதம் ஏற்படாமல் தவிக்க முடியுமென இந்தியாவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஒன்று அறிவித்துள்ளது.
குறிப்பாக புகைபிடிப்பவர்கள் வெங்காயத்தை நாட வேண்டும். காரணம், இப்பழக்கத்தினால் நுரையீரல்,இதய நோய்கள் ஏற்படுகின்றன. நச்சுப் பொருளால் இரத்தம் கெடுகின்றது. இவ்வாறன புகைப் பழக்கத்தையுடையவர்கள் வெங்காயத்தை உண்டு வரலாம்.
இவ்வாறு உண்பதால் புகைப் பழக்கத்தாலேற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும். மொத்தத்தில் வெங்காயம் ஒரு உணவுப்பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும் இருந்து வருகின்றது.

No comments:

Post a Comment

Govt. Jobs 2020

  Government of Tamil Nadu Jobs 2020 - Survey Assistant Jobs in Chennai Government of Tamil Nadu Chennai, Tamil Nadu via Fresherslive 3 days...