Translate

Friday, April 30, 2010

மருத்துவ குறிப்புகள்

சளித் தொல்லை நீங்க

• துளசிச் சாறு ஓர் அவுன்ஸ் தினசரி குடித்து வந்தால் சளித்தொல்லை தலை காட்டாது ஓடிவிடும்.
• மூக்கில் நீர் வடிந்தால் ஜாதிக்காயை நீர்விட்டு உறைத்து மூக்கின் மேல் பற்றுபோட்டால் நீர் கசிவது நின்றுவிடும்.
• குழந்தைகளுக்கு சளிபிடித்திருந்தால் துளசிச் சாறும் தூதுவளைச் சாறும் சமபங்கு கலந்து காலை மாலை ஒரு தே.கரண்டி கொடுத்தால் சளி கரைந்துவிடும்.
• பெரியவர்கள் தூதுவளை,ஆடாதோடைக் கீரைகளை சாப்பிட்டால் சளித்தொல்லை நின்றுவிடும்.

தொண்டைக்கட்டி சரியாக

மாவிலையின் கொழுந்தைக் கொண்டு வந்து கருகி விடாமல் வறுத்தெடுத்து, பொடியாக்கி அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து கால் ஸ்பூன் அளவு காலை மாலை சாப்பிட்டு வந்தால்,ஒரே நாளில் தொண்டைக்கட்டு சரியாகி விடும்.

பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்!

இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு மிகுதியாகவுள்ளது.

தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள், நடுத்தர வயது பெண்களின் தூக்கத்துக்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்களும், அவர்களது தூக்க நேரங்களும் ஏழரை ஆண்டுகாலம் கண்காணிக்கப்பட்டது.

இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான 'இஸ்கெமிக் ஸ்ட்ரோக்'கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 6 மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரம், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.

எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சாலச் சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

1. முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
2. முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
3. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
4. அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
5. பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
6. பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.
7. முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
8. அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்
9. பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
10. பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.

முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.

உடல்சூடு சாதரணமான நிலைக்கு வநதவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்நதிருக்கச் செய்யவும்.

உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.


மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

விபத்து நடந்த இடத்தில் யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால், முடிந்தவரை தண்ணீர் ஊற்றி அணையுங்கள். சாக்குப்பையை சுற்றுவதெல்லாம் மிக மிக கொடூரமான தியணைக்கும் முறை. சாக்குப்பையை பொருள் தீப்பிடித்துக்கொண்டால் அதை அணைக பயன்படுத்தலாம். ஆனால் மனிதன் மீது தீப்பிடிக்கும்போது தண்ணீரே சிறந்த மருந்து. தவறிப்போயும். மணலையெல்லாம் போட்டு அனைக்க முயன்று விடாதீர்கள். அது நாமே அவரை கொலை செய்வது போல

ஒரு வேளை தீ தானே அணைந்துவிட்டாலும் , எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர் மீது தண்ணீரை ஊற்றுங்கள் . காரணம் வெந்த புண்ணிற்கு குளிர்ச்சி அப்போது மிக அவசியம். அப்போது நாம் ஊற்றாமல் போகும் தண்ணீர் அவரின் உயிரை எடுத்து விடலாம்

CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம் >இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது >இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது >உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது >விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது >தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது >அதிர்ச்சியின் போது ( in a state of shock) >வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது >மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock) >இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் ) CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம். >ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்) >இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்) >நினைவிருக்கிறதா என உறுதி செய்தல் >சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல் >உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது. சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது.

இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை

>அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது; ( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்) >ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது. இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும். CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது A=Airway B=Breathing C=Circulation முதலில்-Airway சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம். நினைவிழந்த நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும்.பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)இரண்டாவதாக-Breathing சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்த வேண்டும். மூன்றாவதாக-Circulation.

ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம். நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.

Chest Compressions எப்படி அளிப்பது விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது.இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.மேலேயுள்ள படத்தை நகலெடுத்து உங்கள் அலுவலகங்களில் தகவல் தட்டிகளில் வைத்தால் மற்றவர்களுக்கும் உபயோகமாகயிருக்கும்.

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்

நரம்புகள் பலம் பெற

100 கிராம் வெங்காயத்தை நன்றாக வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். மதியம் தயிரில் ஒரு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும். 15 நாட்கள் இதைக் கடைப்பிடிக்கவும்.
குண்டாக இருப்பவர்கள் வெங்காயச்சாறு வெறும் வயிற்றில் அருந்த இதயக்கோளாறை முன்கூட்டியே தடுக்கலாம். 100 கிராம் வெங்காயம் பொதும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பச்சை வெங்காயத்தைத் தயிரோடு சேர்த்து உண்டால் எலும்பு மெலிவு நோய் தடுக்கப்படும்.

அத்தியாவசியமான ஃபோலிக் அமிலம் பெற

பள்ளி ,கல்லூரி மாணவ மாணவியர், கர்ப்பிணிகள், முப்பது வயதுக்கு மேற்பட்டோர் என அனைவருக்கும் ஃபோலிக் அமிலம் அத்தியாவசியமானது. மூளையை சுறுசுறுப்பாக்குவதில் இதற்கு பெரும்பங்குண்டு. மனநிலை பாதிப்போ, முதுமையில் ஞாபக மறதி நோயோ ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலுள்ளது.
ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகள்
1..பருப்பு வகைகள்
2.பீன்ஸ்
3.வெண்டைக்காய்
4.கறிவேப்பிலை
5.தண்டுக்கீரை
6.முட்டை
7.ஆட்டு ஈரல் மூளையில் அலுமினியம் சேரக்கூடாது. ஆகையால் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கக்கூடாது. தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் அலுமினியச் சத்து சேராது. முட்டைக்கோஸ் அதிகம் சேர்க்க வேண்டும்

ஃபோலிக் அமிலத்தால் குணமடைபவை
1.வாழ்க்கையில் வெறுப்பு
2.காக்காய் வலிப்பு
3.மலட்டுத்தன்மை
4.தாம்பத்திய வாழ்வில் வெறுப்பு எனவே ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகளைத் தேர்வு செய்து உண்டு நல்ல பலன் பெறலாமே!

செம்பருத்தி பூ:செம்பருத்தியின் மகத்தான மருத்துவம் செம்பருத்தி பூவை அப்படியே சாப்பிட ரத்தம் சுத்தி அடையும். இதயம் வலிமை பெறும். செம்பருத்தி பூவை நிழலில் காய வைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்குத் தேய்த்தால் சிரசு குளிர்ச்சியடையும். தலைமயிர் கருகருவென வளரும். பூவையும் இலையையும் சேர்த்து அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாகத் தலையில் தேய்த்துக் குளிப்பது மிக மிகச் சிறந்தது.

உள்ளத்துக்கு எழுச்சித் தரும் உணவு
வாழைப்பழம், காளான், உருளைக்கிழங்கு -இவை மூன்றையும் உள்ளத்திற்கு எழுச்சித் தரும் உணவுகள் என அழைக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். மேற்கண்ட மூன்று உணவுகளிலுமுள்ள வைட்டமின் பி-6-ம்,பொட்டாசியமுமே மனக்கவலையை மாற்றி உள்ளத்திற்கு எழுச்சித் தருகிறது. நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம், உருளைக்கிழங்கு போன்றவற்றைத் தவிர்ப்பார்கள். இவர்கள் காளான் சூப்புடன் சோயாபீன்சை சுண்டலாக ஒரு கப் சாபிடலாம். 5அவாகோடா பழமும் சாப்பிடலாம். மனக்கவலையை அகற்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் மேற்கண்ட உணவுகள் தருகின்றன.

குழந்தைகளின் புத்துணர்ச்சிக்கு...
குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்காவிட்டால் அவர்கள் பல்வேறு நோய்களின் பிடிகளுக்கு உள்ளாக நேரிடலாம். பொதுவாக சிறிய குழந்தைகள் வயிற்றுப்போக்கு, பேதி போன்றவற்றால் அவதிப்படுவதைப் பார்த்திருப்போம். அவ்வாறு அவர்கள் பாதிக்கப்பட்டால் துத்தநாக உப்புள்ள உணவு மற்றும் மருந்தை கொடுத்தால் அந்தக் குழந்தை உடனே புத்துணர்வுபெறும். மேலும் இது ஆண்டிபயாடிக்காகவும் உடலில் செயல்படுகிறது. பழங்களுடன் காய்கறிகளும் நன்கு சேர்த்துக்கொண்டால் அவர்கள் உடலில் துத்தநாக உப்பு குறைவாகவே இருக்கும்.நாரில் உள்ள பைட்டிக் அமிலம், துத்தநாக உப்பை உறிஞ்சி வெளியேற்றிவிடும். எனவே டாக்டரின் ஆலோசனைப்படி துத்தநாக உப்பை, மாத்திரை அல்லது உணவாகச் சாப்பிடலாம். வாரம் இரண்டு நாட்கள் கடல் உணவு சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் துத்தநாக உப்பு கிடைத்துவிடும். தொற்றுநோய், ஜலதோசம் முத்லியன உடலில் துத்தநாக உப்பு குறைவாக இருப்பதன் அறிகுறியாகும். வாரம் இருநாட்கள் அவித்த மீனைச் சாப்பிடுவதால் மிகவும் எளிதாக துத்தநாக உப்பைப் பெறமுடியும்

மூக்கடலை பொதுவாக மருத்துவ குணங்களைக் கொண்டதுதான். ஆனாலும் அதில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் விஷயமும் உள்ளது.

அதாவது, மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் பிரச்சினை உடையவர்கள், வாத நோய் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

அவ்வாறு அதிகமாகச் சாப்பிட்டால் வயிறு உப்பசம், கழிச்சல், வயிற்றுவலி, மிகுந்த தாகம், மயக்கம், மூலநோய், உடல் வெப்பம் ஆகியவை உண்டாகும்.

எனவே மேற்கூறிய பிரச்சினைகள் உடையவர்கள் இதனை அளவாகவும், மிகக் குறைந்த அளவோடும் சாப்பிடலாம்.

புழுங்கலரிசி சாதம் அனைவருக்கும் ஏற்றது. புழுங்கலரிசி சாதத்தை சாப்பிடுபவர்களை வாத நோய் தாக்காது.

குழைந்த சாதத்தையே சாப்பிட்டு வந்தால் பசி குறைவு ஏற்படும். இடுப்பு வலியுடன் கூடிய வெள்ளப்போக்கு, இருமல் உண்டாகும்.

தினமும் அதிக சூடான சாதத்தைச் சாப்பிட்டால், ரத்த கொதிப்பு, அடங்காத தாகம், நாவறட்சி உண்டாகும்.

தினமும் ஆறிப்போன சாதத்தை உண்டு வந்தால், கீல்வாதம் எனப்படும் மூட்டுவலி ஏற்படும்.

மிதமான சூடுள்ள சாதத்தை உண்பதே சிறந்தது. அதனால் வாத, பித்த, கப நோய்களையும், சைனஸ் நோயையும் போக்கும்.

மெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரைகளையும், பழம், காய்கறிகளையும் சாப்பிடுவோம்.

ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அதுதான் கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலை.

பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருமனாகும்.

கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வை*த்திருக்கும் ஆண்களும் இதனை சாப்பிடுவது நல்லது.

எண்ணிக்கையாக 10 முதல் 15 கொண்டைக் கடலைகளை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

தேனின் மருத்துவ குணங்கள் அதிகம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி சளி பிடித்துக் கொள்கிறதா?

அதற்கும் தேன் ஒரு மருந்தாக உள்ளது. இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேனை கலந்து தினமும் பருகக் கொடுங்கள். நல்ல பலன் தெரியும்.

சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாற்றுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்தீர்களானால் இஞ்சிச்சாறு ரெடி. இது நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

உடல் மெலிந்தவர்கள் தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் வாகு சீராகும்.

செல்போன் சில்லரை விற்பனையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் யுனிவர்செல் நிறுவனம், மொபைல் போன் உபயோகிப்பாளர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு மருத்துவக் குறிப்புகளை குறுந்தகவல் சேவையாக (எஸ்.எம்.எஸ்) வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மதிப்பு கூடுதல் சேவை `மொபைல் மெடி அலர்ட்' என்ற பெயரில் அனுப்பப்படும்.


ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் பொதுவான, அத்தியாவசியமான ஒன்று என்றாலும், வேலைப்பளு காரணமாக உடல் ஆரோக்கியம் மற்றும் அதற்குத் தேவையான உடற்பயிற்சியை பல நேரங்களில் பலரும் செய்ய முடிவதில்லை.

இதனைக் கருத்தில் கொண்டு யுனிவர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பர்பிள்டீல் வழங்கும் மொபைல் அடிப்படையிலான புதிய தனிப்பட்ட ஆரோக்கியக் குறிப்புகள் வழங்கும் சேவையை தொடங்கியிருப்பதாக யுனிவர்செல் நிறுவன துணைத் தலைவர் ரமேஷ் பரத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் வயது மற்றும் அவர்கள் ஆணா அல்லது பெண்ணா என்பதைப் பொருத்து, அவர்களுக்கான நோய் தாக்குதல் அபாயம் என்னென்ன என்பது குறித்து மொபைல் மூலம் செய்தி அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.

அதற்கேற்ப அவர்கள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை எடுத்துக் கொள்ள முடியும்.

இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்ற சுய பரிசோதனை செய்து அறிந்து கொள்ளும் நோயாக இருந்தால், இந்த மருத்துவக் குறிப்புகள் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார் ரமேஷ்.

தவிர வயதான தங்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசனைகளுக்கும் இந்த புதிய சேவை உதவும்.

மொத்தத்தில் உடல் ஆரோக்கியம் குறித்து எஸ்.எம்.எஸ். மூலமாக நினைவூட்டல் செய்து, அதனை வழக்கமாக்கிக் கொள்வதே இந்த சேவையின் முக்கிய நோக்கமாகும் என்று பர்பிள்டீல் தலைமை நிர்வாக அதிகாரி நாராயண ராம் தெரிவித்தார்.

மனநோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள், எந்தெந்த மாதிரியான தருணங்களில் மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். சிந்தனைத் திறன் பாதிக்கப்படும்போதே மனநோய் ஏற்படுகிறது.

நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள நரம்பு மண்டலமே.

ஒருவரின் சிந்தனைத் திறன் என்பது வயதிற்கேற்ப, காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.

குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள், விளையாட்டு, பள்ளிப் படிப்பு, நண்பர்கள், புதிய பொருட்களை வாங்குதல், புத்தாடை, அணிகலன்கள், புத்தகங்களைப் படித்தல் என ஒவ்வொரு வயது நிலையிலும் அவர்களது சிந்தனை பரந்து விரிந்து கொண்டே செல்கிறது. ஆனால், பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, சிலர் பித்துப் பிடித்ததைப் போல் ஆகிவிடுவர்.

சிறு குழந்தைகளே கூட, சற்றே அதட்டலாகப் பேசினால், அவர்களின் முகபாவம் மாறிவிடுவதைப் பார்க்கிறோம். மிகவும் நம்பிக்கொண்டிருந்து விட்டு, குறிப்பிட்ட ஒரு பொருளோ அல்லது பதவியோ கிடைக்காமல் போனால்கூட சிலருக்கு ஒருவித மன அழுத்தம் உருவாகக்கூடும்.

நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர், அதாவது தாயோ - தந்தையோ மரணம் அடைந்தால் அவர்களின் இழப்பைத் தாங்க முடியாத துயரின் காரணமாகக்கூட சிலருக்கு மனநோய் ஏற்பட வாய்ப்புண்டு. ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்துவிட்டு அவர்கள் மறைந்துவிடும் போதோ அல்லது அகால மரணம் ஏற்படும்போதோ இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது.

மனஅழுத்தமும், மனநோயும் தொடர்புடையது என்று ஏற்கனவே பார்த்தோம். நரம்புமண்டலத்தில் கட்டளைகளாக பதிவாகும் விஷயங்கள், நிறைவேறாமல் போகும்போதே பெரும்பாலானோருக்கு மனநோய் ஏற்படுகிறது.

இன்னும் சிலர், கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப்பொருட்களை உபயோகிப்பதால் அதிகளவில் மூளை நரம்புகள் தூண்டப்பட்டு பின்னர் அது மூளையின் சொல்படி நடக்காமல் போவதாலும் மனநோய்க்கு ஆளாகின்றனர்.

அரிய நிகழ்வாக, அதிகளவு புத்தகப்புழுவாக இருப்பதால், சிந்தனை பாதிப்புக்குள்ளாகி மனஅழுத்த நோய்க்கு ஆளானவர்களையும் பார்க்கிறோம்.

எனவே மனநோய் எந்தமாதிரி, எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதை விடவும், அந்த நோய் ஏற்பட்டு விட்டால்,. அதனை குணப்படுத்துவது எப்படி என்பது பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்.

முதலில் ஒருவருக்கு மனநோய் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது?

அதிகநேரம் - அதாவது மணிக்கணக்கில் - நாள்கணக்கில் தனிமையில் இருப்பது, யாருடனும் பேசாமல் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருத்தல், சம்பந்தமின்றி தானாகப் பேசுதல் அல்லது புலம்புதல் போன்றவை இந்நோய்க்கான அடிப்படை அறிகுறிகள் எனலாம்.

நோயின் தன்மையைப் பொருத்து அறிகுறிகளும் வேறுபடலாம். சிலர் அதிக நேரம் தண்ணீரை திறந்து விட்டு குளித்துக் கொண்டேயிருப்பர். வேறு சிலர் குளிக்கவே மாட்டார்கள். இதுபோல மனநோயாளிகளுக்கான அடையாளங்கள் பல உண்டு.

முதலில் மனநோய் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட நோய்க்கு சிகிச்சையளிக்கக் கூடிய மனோதத்துவ நிபுணர்களை அணுக வேண்டும்.

அவர்களின் அறிவுரைப்படி மாத்திரைகளை சாப்பிட வேண்டும். மனோதத்துவ நிபுணர்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கவுன்சலிங் எனப்படும் கலந்துரையாடல் மிக மிக முக்கியமானது.

நோயாளியுடன் மருத்துவ நிபுணர் பேசுவதால், பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நோயின் தீவிரத்தை அறிந்து, சிகிச்சை அளிக்க முடியும்.

பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படை ஆதாரமாகத் திகழ்வது ஒவ்வாமை எனப்படும் Allergy என்றால் மிகையில்லை.

ஒவ்வாமை பிரச்சினைக்கு நமது உடலிலேயே தீர்வு உள்ளது. உடலுக்குள்ளுள் ஏற்படும் ஒவ்வாமையை இரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்தியானது விரட்டியோடச் செய்து உடல் நோய்க்குத் தீர்வை அளிக்கிறது.

பொதுவாக உடலில் மேற்கொள்ளப்படும் சோதனையின் போது, தீங்கிழைக்காத செல்கள் என்றால், அதனை உடல் அனுமதிக்கிறது.

ஒருவேளை உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்குமேயானால், அது சில நோய்களை உருவாக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.

பொதுவாக ஆஸ்துமா அல்லது மூச்சுத் திணறல் என்பது சிறுவயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இருக்கக்கூடிய சாதாரண வியாதி எனலாம்.

ஆஸ்துமாவிற்கு முந்தைய நிலையே ஈஸ்னோபீலியா எனப்படும் ஒருவகை ஒவ்வாமை.

ஈஸ்னோபீலியாவாக இருக்கட்டும். ஆஸ்துமாவாக இருக்கட்டும். எந்த வயதில் எந்த நிலையில், நாம் அதனைக் கண்டுபிடிக்கிறோம் என்பதைப் பொறுத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பல பொருட்களை நாம் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. அது ஒருவருக்கொருவர் மாறுபடும்.

என்றாலும் ஒவ்வாமையை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும்.

ஒவ்வாமை என்று அறியப்பட்டதும், குடும்ப மருத்துவரையோ அல்லது சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களையோ அணுகி உரிய அறிவுரையைப் பெறுவதுடன், அதற்கேற்ற மருந்துகளையும் உட்கொள்தல் அவசியம்.

ஒவ்வாமையில் பல்வேறு வகைகள் உண்டு. தொடர்ந்து அவற்றைப் பற்றி அறிவோம்.

சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம்.

வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.

உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன.

ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், நோய் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும்.

உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும்.

குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது? ஓய்வின்போது வலி குறைகிறதா? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது? என்பன போன்றவற்றை சொன்னால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.

மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:

நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; அதிக வியர்வை; நெஞ்சு இறுக்கம்; மூச்சுத் திணறல்; இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.

ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதுபோல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும்.

அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

எனவே நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.

தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் சூரிய ஒளியைத் தவிர்த்து வந்தால், அது எலும்புகளை எளிதில் உடையச் செய்யும் நோயை உருவாக்குவதற்கு வகை செய்யும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சூரிய ஒளியில் விட்டமின் -டி அதிகம் காணப்படுவதால், அது உடலுக்கு ஓரளவுக்குத் தேவைப்படுகிறது. விட்டமின் -டி குறைபாட்டினால் எலும்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

சூரிய ஒளிபடும் இடத்தில் அமர்ந்து சாப்பிடுவது, தோட்டவேலை செய்தல், துணி காயவைத்தல் போன்றவற்றை ஒவ்வொருவம் அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.

சமீப காலமாக தோல் புற்றுநோய் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், சுகாதார நிபுணர்கள், சூரிய ஒளி தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை சூரிய ஒளியில் இருப்பது எலும்புகளுக்கு உகந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலும்பு வலுவுக்கும், ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்ப்பதற்கும் விட்டமின் - டி அவசியம் என்பதால், சூரிய ஒளி உடலில் கண்டிப்பாக விழ வேண்டும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

வீட்டிற்கு வெளியேயும், சாலையிலும் அதிகளவு மாசு இருப்பதால், வீட்டிற்குள் அல்லது 4 சுவர்களுக்குள் அதிக நேரத்தைக் கழிப்போம் என்று எண்ணினால் அது உங்களின் உடலுக்கு தீங்கானதாக அமையும்.

வீட்டினுள் உள்ள காற்றின் தன்மை, வெளிப்புறக் காற்றின் தன்மையைக் காட்டிலும் உடலுக்கு அதிக அளவு தீங்கினை விளைவிக்கக்கூடியது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மூடிய அறையில் உள்ள காற்றில் இருந்து வெளிப்படும் ரசாயன மற்றும் உயிரியல் மாசுகள் காரணமாக புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய, மூச்சுத் திண்றல், நரம்பியல் தொடர்பான கோளாறுகளை உருவாக்கக்கூடிய, ஒவ்வாமை, ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோயை உருவாக்கக்கூடிய நிலைமை இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒட்டாவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுற்றுப்புற சுகாதார அறிவியல் அமைப்பு, காற்று சுகாதார பாதிப்புகள் பிரிவு, தண்ணீர், காற்று, மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு, கனடா சுகாதார ஆய்வு ஆதாரங்கள் இணைந்து வீட்டிற்குள் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டதில் புதிய தகவல்கள் தெரிய வந்தன.

வீட்டு உரிமையாளர்களுக்கும், டாக்டர்களுக்கும், சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு தடுக்க முனைவோருக்கும் இந்த தகவல் பேருதவியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

சாக்லேட்களை விரும்பி சாப்பிடுவோருக்கு ஒரு இனிப்பான செய்தி.

சாக்லேட் விரும்பிகள் தங்களது உடல் எடையைக் குறைக்க விரும்பினால், விருப்பமான சாக்லேட்களை காலை உணவாக (பிரேக் பாஸ்ட்) அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

காலை நேரத்தில் அதிக சாக்லேட்களை சாப்பிட்டால், உடலின் அதிக எடை எப்படி குறையும்? என ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம்.

காலையில் தூங்கி எழுந்தவுடன் சுமார் 700 கலோரி கார்போஹைட்ரேட் நம் உடலில் உள்ளது.

அத்துடன் 30 கிராம் சாக்லேட், ஒரு டம்ளர் பால், 2 ஸ்லைஸ் பாலாடைக்கட்டி (சீஸ்), மெல்லிய மாமிசம் 85 கிராம், வெண்ணெய் தடவிய இரண்டு பிரட் டோஸ்ட் ஆகியவற்றை காலையில் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற உணவுப்பழக்க முறையை தன்னிடம் வரும் உடல்பருமன் நோயாளிகளுக்கு கடந்த 15 ஆண்டுகளாக அளித்து வருவதாக டாக்டர் டேனியலா ஜாகுபோவிக் தெரிவித்துள்ளார்.

உடல் பருமனைக் குறைக்க குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் உணவுகளை பரிந்துரை செய்வது சரியான வழிமுறையாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே குண்டாக இருக்கிறீர்களா? இனி கவலை வேண்டாம்.

சாக்லேட்டை காலையில் அப்படியே சாப்பிடுங்க.

ஐயோடின் உள்ள உணவை அதிகமாக சாப்பிடவும். அல்லது ஐயோடின் ஏற்றப்பட்ட உப்பை பயன்படுத்தவும்.

தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பதற்கு ஐயோடின் தேவை.

உடல் வளர்ச்சிக்கும், பராமரிப்பிற்கும் தைராய்டு ஹார்மோன் தேவை.

ஐயோடின் பற்றாக்குறையினால், தைராய்டு சுரப்பி வீக்கம் ஏற்படுகிறது.

தண்ணீரிலும், உணவிலும் ஐயோடின் இல்லாததால் ஐயோடின் குறைபாடு அறிகுறிகள் ஏற்படுகிறது.

கர்ப காலத்தில் ஐயோடின் பற்றாக்குறை ஏற்படின், குறைபிரசவம், கருச்சிதைவு, கிரிட்டினிசம் ஏற்படுகிறது.

ஐயோடின் ஏற்றப்பட்ட உப்பு சாப்பிடுவதன் மூலம் உடலிற்கு அதிக அளவு ஐயோடின் கிடைக்கிறது.

விட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொண்டால் கண் பார்வை குறைபாடு ஏ*ற்படாது.

அன்றாட உணவில் ஏ சத்து நிறைந்த பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும்.
காய்கறிகளை பச்சையாக சாப்பிடவும். கேரட்டை சாப்பிடலாம், பீட்ரூட்டை சாறாக்கிக் குடிக்கலாம். காய்கறி சாலட் செய்து சாப்பிடலாம்.

பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்து சமைத்து உண்ணவும். பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட இதனைக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே காய்கறிகள் மற்றும் கீரைகள் மீது ஆர்வத்தை வரவழைத்து அதிகமாக உண்ணக் கொடுங்கள்.

1 comment:

  1. good keep on posting let polluted world clean from this advice

    ReplyDelete

Govt. Jobs 2020

  Government of Tamil Nadu Jobs 2020 - Survey Assistant Jobs in Chennai Government of Tamil Nadu Chennai, Tamil Nadu via Fresherslive 3 days...